தமிழில் எழுதப்பட்டுள்ள சில முக்கியமான காட்டுயிர் நூல்களின் விமர்சனங்கள். இந்த
புத்தகங்களை ஒவ்வொருவரும் நிச்சயம் வாசித்து காட்டுயிர் பேணலுக்கு இயன்ற
முயற்சிகளை செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்.
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்
Sep 13, 2011
Sep 10, 2011
Possible sighting of Birds in Bangalore : Part 3
Pelican:
I saw three pelicans were flying at a long distance. My binocular helps
me to identify the birds. But I am not sure whether it is a spot
billed pelican.
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/spot-billed-pelican.html
Pond Heron: The most common bird. Though there is no pond or lake near by home, I saw this while travel (sometimes I see when the bird travels, sometimes I see when I travel!)
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/indian-pond-heron.html
Purple rumped Sun bird: There is a huge Hibiscus rosa-sinensis plant in front of my house. Not often, but I could realize this bird only when it calls. The unique voice helps to identify the arrival of the bird.
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/purple-rumped-sunbird.html
Purple Sun bird: I did not see as much as Purple rumped Sun bird. The dark purple color and peculiar voice of this bird is one of my favorite.
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/purple-sunbird.html
Rock Pigeon: May be the highly populated bird. I never found any difficulty to see this. The abundant population in Bangalore, easily helps to identify this.
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/blue-rock-pigeon.html
Rose ringed Parakeet: The flocks of Parakeet just crossing my home everyday. But I haven't seen this beauty every day. Good information is that still the habitat for this parakeet remains in Bangalore.
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/rose-ringed-parakeet.html
Shikra: I found both male and female shikra. But they did not gave me an opportunity to see everyday. There may be very few in my area.
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/shikra-female.html
Spotted Dove: I go to my office cafeteria to see this bird. I take a window seat and and I take a cup of tea with good sighting of spotted dove. They never disappointed me.
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/spotted-dove.html
Swift: The small flight flying in most of the places. Normally I could see this after 8AM in the morning near to my house.
Tree Pie: When I was watching a black kite sitting on the palm tree, I noticed a long tail in the next branch. My binocular helps me identify this tree pie. I had this luck only once.
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/indian-rufous-treepie.html
White browed Wagtail: Luckily I saw this bird only once, but too far from my house. The black and white tail dancer grabs my attention.
http://myexperiencewithbirds.blogspot.com/2010/12/white-browed-wagtail.html
White cheeked barbet: One fine morning, when I open my door, I found some greenish passing my house. It was settled in near by jack fruit tree. I immediately took my binocular and I found this beautiful bird sitting on the perch.
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/white-cheeked-barbet.html

Sep 9, 2011
Possible sighting of Birds in Bangalore : Part 2
Common Myna (நாகணவாய் ): The interesting factor is the mimicry of this bird. So many times I thought some parakeet is passing over my head. The population is abundant in Bangalore. I found this bird in most of the places. The bird takes their food from garbage waste.
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/common-myna.html
Cormorant (நீர் காகம் ): There is no pond or lake near by my area. So I could see this birds very few times. If I would have monitor the birds near by some good water resource, I might have seen this daily.
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/greater-cormorant.html
Black Drongo (கருங்கரிச்சான்): The dancing bird, comes to one particular location in the evening. I have seen the pair was playing and making noise. The way of flying up and down is magnificent.
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/black-drongo.html
Egret (கொக்கு ): I didn't noted down either it is a little egret or cattle egret. I found this most of the time when it was flying.
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/cattle-egret.html
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/little-egret.html
Greater Coucal (செம்போத்து ): I would call this as a mini Peacock. The beautiful feathers take my attention without my knowledge.
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/greater-coucal.html
House Crow(காகம்): The most common Indian bird helps our society clean.
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/house-crow.html
House Sparrow (சிட்டுக் குருவி): I found very few of this bird. Fortunately, I found the flocks of sparrows near by my locality and obviously there is a reason for this. I know one gentle man feeding sparrows everyday. He made a artificial nest box also. The birds still remains because of his excellent work.
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/house-sparrow.html
Asian Koel (குயில் ): I never failed to hear the song sung by this beautiful singer. There is a pair roaming near by my house. I could easily see this near by jack fruit tree.
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/asian-koel-female.html
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/asian-koel-male.html
.... to be continued
Sep 8, 2011
Possible sighting of Birds in Bangalore : Part 1
The immense pleasure of watching the birds can be substantiate only by bird watchers. I am more interested to watch birds. Though we run a machine life, there are lot to listen from the nature. Nature always teach a lot, which gives you the happiness which can not be compensate by any other. I decided to make a record of birds. But I do not have sufficient time to make an account of it. So instead of counting the birds, I decided to record the possibility of sighting the birds. I live in Marathahalli, Bangalore. I travel 17KM everyday to reach my office. I start making a note of the birds which I could see around my home and my way to office. I start this on 01.08.2011. I recorded this for 21 days (not continuous days).
If I saw either 50 rock pigeon or one single pigeon, I considered that the possibility of sighting is true for that day. I have seen rock pigeon all the 21 days and I saw the Shikra for only 4 days.
In the above list, each bird gives the pleasure in different way.
Ashy Prinia (சாம்பல் கதிர் குருவி): Every day morning, I hear the very first voice made by this little creature. The continuous voice of this bird starts the fine morning. Normally I found this in bushes near by house.
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/ashy-prinia.html
Black Kite (ஊர் பருந்து) : The most important job of this bird is cleaning the city. They do the free service in our living place. Easily available in all over Bangalore. I have seen this bird in all the 21 days.
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/black-kite.html
Brahminy Kite (செம் பருந்து) : The similar size of Black Kite, which has white neck. I found this bird in very few days. I have seen plenty of Brahminy kite in Silk board (Hosur Road, Bangalore).
http://myexperiencewithbirds.blogspot.com/2010/11/brahminy-kite.html

Sep 5, 2011
பல்லுயிரியம் (Bio - Diversity) : திரு.ச.முகமது அலி
நம் நாட்டில் வாழும் பல்வேறு உயிரினங்களையும் தொடர்புபடுத்தி சொல்லப்படும் மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிகிறது இந்த நூல். பறவைகள், விலங்குகள், பூச்சிகள், இரு வாழ்விகள், ஊர்வன, மீன் இனங்கள் பற்றிய பல்வேறு செய்திகளையும் விரிவாக எடுத்துக் கூறுகிறது.
இயற்கை மீதும் உயிரினங்கள் மீதும் பற்று கொண்ட ஒவ்வொருவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம். வன உயிர்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான முறையில் பதில் சொல்லியிருக்கிறார் திரு. முகமது அலி அவர்கள். மூட நம்பிக்கைகளை பற்றி எழுதும் போது ஆசிரியரின் கோபம் கொஞ்சம் கூடுதலாகவே தெரிகிறது.
கல்லுக்குள் தேரை இருக்கிறது, அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும், மரங்கள் ஒன்றோடொன்று மோதி காட்டுத் தீ உருவாகும், பாம்பும் கீரியும் சண்டையிட்டால் கீரி ஒரு குறிப்பிட்ட வேரை தேடித் தின்னும், பூனை குறுக்கே செல்வது, உடும்பை கொண்டு மலை ஏராளம், ஆமை புகுந்தால் ஆகாது, பாம்பு பழிவாங்கும், ஆந்தை அலறுவது அபசகுனம் என நம் சமூகத்தில் மண்டிக்கிடக்கும் குருட்டுத் தனமான நம்பிக்கைகளை கடுமையாக எதிர்க்கிறார். பல்வேறு உயிரினங்கள் பற்றிய அரிய செய்திகளையும் சொல்லி இருப்பது கூடுதல் சிறப்பு.
இந்தியாவில் எப்படி வன வாழ் உயிரினங்கள் பல்வேறு பகுதிகளிலும் பரவி இருந்தது என்பதையும் தற்சமயம் எப்படி இவை தான் வாழ்வாதாரங்களை இழந்தது என்பதையும் தெளிவாக எழுதியிருக்கிறார். இவற்றின் முக்கியமாக ஆசிரியர் குறிப்பிடுவது சிவிங்கப் புலி (Cheeta). இன்று இந்தியாவில் முற்றிலும் இந்த இனம் அழிந்து விட்டது. பலரும் சிறுத்தை புலி தான் Cheeta என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டும் வேறு வேறு. அதே போல கான மயில் பறவையும் தன் வாழ்விடங்களை இழந்து விட்டது. தமிழ் நாட்டில் வாழந்த சிவிங்கப் புலியும், கான மயிலும் இன்று நம்முடன் இல்லை.
இன்றைய எழுத்தாளர்கள் உயிரினங்கள் பற்றிய புரிதலோடு எழுத வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். காட்டுயிர் என்பது நமக்கு தொடர்புடையது என்பதையும், நம்மால் அவை அழிவை சந்திக்கும் போது அது நம்மை நேரடியாக பாதிக்கும் என்பதையும் கவலையோடு பதிவு செய்திருக்கிறார்.
பல்லுயிர் பற்றிய புரிதல் நம் மக்களுக்கு இயல்பாக இருக்க முதல் படியாக மூட நம்பிக்கைகள் கலையப்படவேண்டும். அதற்கு இந்த புத்தகம் தன்னால் இயன்றவரை ஒரு முயற்சியை செய்திருக்கிறது. அதை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நம் எல்லோர் கையிலும் இருக்கிறது.
https://crownest.in/palluyiriyam-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85/
Aug 29, 2011
இன்னும் பிறக்காத தலைமுறைக்காக : திரு.தியடோர் பாஸ்கரன்
அழிந்து வரும் இயற்கையின் மீதான தன்னுடைய வருத்தத்தை "இன்னும் பிறக்காத தலைமுறைக்காக" என்னும் நூலில் கனத்த இதயத்துடன் பதிவு செய்திருக்கிறார் திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள். தமிழ் நாட்டில் காட்டுயிர் பற்றிய ஆர்வம் குறைவாக இருப்பது பற்றியும், காட்டுயிர் தொடர்பான பல சொற்கள் தமிழில் வழக்கொழிந்து வருவது பற்றியும் வேதனை தெரிவிக்கிறார்.
புலிகள் ஏன் பாதுகாக்கப் பட வேண்டும் என்ற இவருடைய விளக்கம் தமிழ் நாடு அரசின் பாட புத்தகங்களில் இருக்க வேண்டும். ஆசிய சிங்கங்கள் குஜராத்தின் ஒரு குறுகிய மூளைக்குள் அடங்கி இருப்பதும் அதை மோடி மற்ற மாநிலங்களுக்கு தர மறுப்பது பற்றியும் பதிவு செய்திருக்கிறார். தமிழ் நாட்டில் வாழ்ந்த கான மயிலும், சிவிங்கப் புலியும் இன்று முற்றிலும் அழிந்து விட்ட செய்தி எத்தனை பேருக்கு தெரியும்?
அமராவதி ஆற்றில் வாழ்ந்த மயில் கெண்டை என்ற மீன் இனம் முற்றிலும் அழிந்து விட்ட செய்தி மிகவும் துயரப்படுத்தியது. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருந்த நதி இன்று வறண்டு போய்க் கிடக்கிறது. திரு.தியடோர் அவர்களின் சிறு வயதில் அமராவதி எப்படி இருந்தது என்பதை வாசிக்கும் போது, நாம் எப்படிப்பட்ட ஒரு ஆற்றை இழந்திருக்கிறோம் என்பது வேதனை அளிக்கிறது. குளங்களையும் ஏரிகளையும் ஆழப்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்காமல், நாடு முழுவதும் அணைகள் கட்டி, இன்று ஆறுகளும் வீணாகி, ஏரிகளும் குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு சீரழிந்து வருவதை பதிவு செய்திருக்கிறார்.
பழனி மலை தொடர்ச்சியில் இருந்த குறிஞ்சி செடிகளின் வாழ்விடங்கள் சிதைக்கப்ட்டு இன்று அவை ஒரு குறுகிய இடத்துக்குள் இருப்பதை பற்ற்யும் கவலை தெரிவிக்கிறார். நம் வீடுகளை சுற்றி இருக்கும் விலங்குகளையும் பறவைகளையும் பற்றிய புரிதல் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். ஆறுகள் இணைக்கப்படுவதால் ஏற்படும் அபாயங்களையும் சுட்டிக் காட்டுகிறார். கங்கை எப்படி உருவாகிறது (இமயமலையின் பனிச் சிகரங்களில்), காவிரியும் வைகையும் (மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை மற்றும் நீரை தன்னுள் தக்கவைத்து ஆண்டு முழுவதும் நீரை வெளிவிடும் அடர்ந்த காடு) எப்படி உருவாகிறது என்ற புரிதல் இருந்தாலே நம்மால் அதன் விளைவுகளை புரிந்து கொள்ள முடியும்.
இயற்கைக்காக இது வரை பாடுபட்டவர்களை பற்றியும் இந்த நூலில் பதிவு செய்திருப்பது கூடுதல் சிறப்பு. திரு.ஜே.சி.குமரப்பா, மா.கிருஷ்ணன், ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (இந்திய காங்கிரசை தோற்றுவித்தவர் என்ற செய்தி மட்டுமே பல வரலாற்று நூல்களில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இவர் பறவைகளை ஆராய்ச்சி செய்து அவற்றின் பெயர்களை பதிவு செய்தவர் என்ற செய்தியை இந்த நூலில் தான் முதல் முறையாக படித்தேன்), பி.கே.மேத்யூ, ழான் ழியோனோ போன்றவர்களின் பணிகளையும் சிறப்பாக எழுதியுள்ளார்.
இன்னும் பிறக்காத தலைமுறைக்காக மட்டும் இல்லை இந்த நூல். இன்றைய தலைமுறையும் கூட இயற்கையில் இழந்தவற்றையும் , இழந்து வருவது பற்றியும் அறிந்து கொள்ள உதவுகிறது.
திண்ணை இணைய இதழில் வெளியானது..
Aug 22, 2011
அழியும் பேருயிர் - யானைகள் : திரு.ச.முகமது அலி & க.யோகானந்த்
"அழியும் பேருயிர் : யானைகள்" என்ற நூலை வாசித்து முடிக்கும் போது, எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி பெற்று உலகின் மிகப் பெரிய தரை வாழ் விலங்காக விளங்கும் யானைகள் எப்படி அழிவை சந்திக்கின்றன என்னும் பேருண்மை நம் முகத்தில் அறைகிறது. நம் பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் யானைகள் பிரிக்க முடியாதவை. ஆனால் அவற்றின் இன்றைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் இந்தயாவில் லட்சக்கணக்கான யானைகள் கொல்லப்பட்டுள்ளன.
ஆப்ரிக்க யானைகளும் லட்சகணக்கில் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டுள்ளன. இன்று யானைகள் அழிந்து வருவதற்கு நம் மக்களின் மூட நம்பிக்கையும், இயற்கையைப் பற்றிய புரிதல் இல்லாததுமே எனச் சாடுகிறார் ஆசிரியர். இன்றைய சூழ்நிலையில் கூட, ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் யானைகளை ஒரு கொடூர விலங்காக சித்தரிப்பதை கடுமையாக எதிர்க்கிறார்.
"மனிதர் அன்போடு வளர்ப்பதாகக் கூறப்படும் யானைகள் வண்டி இழுத்தன, கடும் வெயிலில் ஏர் உழுதன, மூட்டை சுமந்தன, கல்லையும், கட்டைகளையும் இழுக்கின்றன. வழிபாட்டுத்தலங்களில் வெந்ததைத் தின்று விதி வந்து சாகும்வரை வதைபட்டு பெருமை காட்டுகின்றன. சர்க்கஸ் செய்கின்றன, தன் சகோதரனுடன் சண்டையிட வைக்கப்பட்டன. மன்னர்கள் என்ற மமதை கொண்ட குண்டர்களைத் தூக்கிச் சுமந்தன, பிச்சை எடுக்கின்றன, அடிமையாக சந்தைகளில் விற்பனைக்குள்ளாகின்றன, கெட்டவார்த்தைகளால் திட்டு வாங்குகின்றன, அடி உதைகளால் ரத்தம் சிந்தி அழுகின்றன.
வேண்டிய நீரும், உணவும், நிழலும் கிடைக்காமல் துடிக்கின்றன, அழுக்கடைந்த, கூச்சல் மிகுந்த வீதிகளில் அலைக்கழிக்கப்படுகின்றன, தனிமையில் தவிக்கின்றன, மொட்டை வெயில், புகைதூசிகளால் மன உளைச்சலடைகின்றன, இயற்கையான சத்துள்ள ஆகாரமின்றி நோயால் கஷ்டப்படுகின்றன, தன் வாழ்விடத்தை தானே அழிக்கவும், தன் இனத்தை தானே பிடிக்கவும் உள்ளாக்கப்படுகின்றன. “இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’’ என கொல்லப்பட்டு தனது தந்தத்திலேயே செய்த தன் உருவத்தைச் சுமக்கும் கொடுமைக்கு ஆளாகின்றன. ஆனால் இவ்வளவையும் பரிதாபத்திற்குரிய யானைகள் மகிழ்ச்சியோடு செய்வதாகவே நினைக்கிறது `ஆறறிவு கொண்ட’ மாந்தரினம்" என்ற இவருடைய எழுத்துக்கள், யானைகள் மீது ஆசிரியர் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும், நம் சமூகத்தின் மீதான கோபத்தையும் பிரதிபலிக்கிறது.
யானைகள் அக ஒலி மூலம் பேசிக் கொள்கின்றன என்ற செய்திகள் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. ஐந்து கி.மீ தொலைவிலுள்ள யானைகள் அக ஒலி மூலம் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன எனும் செய்தி வியப்பை அளிக்கிறது. இதில் மேலும் ஒரு ஆச்சர்யம் அந்த ஒலி மனிதர்களால் உணர முடியாத அளவுக்கு மிக நுட்பமாக இருப்பதுதான்.
மேலும் ஆப்ரிக்க மற்றும் ஆசிய யானைகளுக்கு இடையேயான வேறுபாடுகளையும் அவற்றின் வாழிடப் பரவலையும் எளிமையாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். ஆசிய யானைகளின் தும்பிக்கை ஒரு விரல் நுனியையும் ஆப்ரிக்க யானைகளின் தும்பிக்கை இரண்டு விரல் நுனியையும் கொண்டிருப்பது போன்ற செய்திகள், யானைகளை எளிதில் வேறுபடுத்தி புரிந்து கொள்ள உதவுகிறது.
பள்ளிபருவத்திலேயே எல்லோரும் இந்த புத்தகத்தை வாசித்து விட வேண்டுமென விரும்புகிறேன்...
https://crownest.in/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/
Aug 18, 2011
நதி சூழ் நகரம் : ஸ்ரீரங்கபட்டணம் (பகுதி 2 )
திப்பு சுல்தான் உருவாக்கியிருந்த சிறைச்சாலையை பார்க்க நேர்ந்தது. இன்று அது ஒரு காட்சிப்பொருள் மட்டுமே. அங்கிருந்த சுற்றுலாப்பயணிகள் அனைவரும் சிறைச்சாலையின் மேல் தளத்தில் இருந்து காவிரியாற்றை ரசித்துக்கொண்டிருந்தனர். அருகில் இருந்த தென்னை மரங்களில் கிளிகள் அமர்வதும் பறப்பதுமாக இருந்தன. காவிரியின் பரந்த அழகை அங்கிருந்து ரசிக்க முடிந்தது.
சம்மர் மஹால். திப்பு சுல்தான் ஆங்கிலேயருடன் போரிட்டதை சித்திரங்களாக பதிவு செய்து வைத்திருக்கிறது. எல்லா சுவர்களிலும் போர் சித்திரங்கள் . திப்பு தன் கடைசி மூச்சு வரை ஆங்கிலேயருடன் போரிட்டிருக்கிறார். எத்தனையோ குறுநில மன்னர்கள் ஆங்கிலேயரின் படையெடுப்பை தாக்குப் பிடிக்க முடியாமல் சரணடைந்திருக்கிறார்கள். ஆனால் திப்புவின் வீரமும் நம்பிக்கையும் நிச்சயம் பாராட்டுக்குரியது. திப்பு அணிந்திருந்த உடைகளை ஒரு கண்ணாடி பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். பட்டு வேலைப்பாடுகள் நிறைந்த ஆடை. ஆடையின் சில பகுதிகள் கிழிந்திருந்தன. அந்த ஆடைகளுக்கு திப்புவின் நினைவுகள் மிச்சமிருக்குமா? வரலாற்றின் சாட்சியங்களே வரலாற்றை உயிர்ப்போடு வைத்திருக்கிறதோ என்று தோன்றியது. திப்புவின் தேகத்தை மூடியிருந்த ஆடை திப்புவின் மூச்சுக்காற்றை எத்தனை முறை உணர்ந்திருக்கும்.
ரங்கநாத சுவாமி கோவிலுக்கு அந்த ஊரின் தெருக்கள் வழியாக நடந்து சென்றேன். இருநூறு வருடங்கள் கடந்த பழமையான வீடுகளும், அருகிலேயே புத்தம் புதிய வீடுகளும் மாறி மாறி இருந்தன. பசு மாடுகளின் போக்குவரத்தும், சாலைகளில் ஆங்காங்கே சாணமும் கிராமத்தை உணர வைத்தது. பெண்கள் மாலை நேரங்களில் தங்கள் வீட்டுத் திண்ணையிலோ படிகளிலோ அமர்ந்து பக்கத்துக்கு வீட்டு பெண்களிடம் அரட்டை அடித்துக் கொண்டிருதனர். தமிழ் நாட்டில் தான் கிராமங்களில் கூட பெண்கள் சின்னத் திரையின் நெடுந் தொடர்களுக்குள் மூழ்கிப் போனது வருத்தமாக இருந்தது. திண்ணைகள் எவ்வளவு அற்புதமான இடம். மாலை நேரங்களில் திண்ணைகள் உயிர்ப் பெறுகின்றன. ஆனால் இன்று திண்ணை வைத்த வீடுகள் கட்டப்படுவதே இல்லை.
கோவிலின் வெளியே குதிரை சவாரிக்காக நிறைய குதிரைகள் நிறுத்தப்பட்டிருந்தன. திப்புவின் ஆட்சியில் குதிரை படையே இருந்தது. இன்றும் குதிரைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றின் பயன்பாடு முற்றிலும் மாறிப் போய்விட்டது. கோவிலை நோக்கி செல்லும் அந்த சாலையில் வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தன. ஒரு காலத்தில் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட குதிரைகள் இன்று வாகனங்களுக்கு வழி விட்டு சவாரிக்காக காத்துக்கொண்டிருந்ததன. எல்லா ஊர்க் கோவிலையும் போல அங்கும் காவி உடையில் சாமியார்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள். கோவிலை சுற்றிலும் காவிரி ஓடிக்கொண்டிருக்கிறது. காவிரியில் இருந்து பிரிந்த ஓடை கோவிலின் அருகே ஓடிக்கொண்டிருந்தது. ஓடையின் கரையில் சிறிது தூரம் நடந்து சென்றேன். ஓடையின் இரு புறமும் கருங்கற்கலாக இருந்தன. மனிதர்களின் நடமாற்றம் எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்தது. கற்களின் ஊடாக ஓடை எழுப்புகிற ஓசை மட்டுமே அந்த பகுதியில் நிறைந்திருந்தது. அடர்ந்த புதர்களும் மரங்களும் அந்த பகுதியை பசுமை கொள்ளச் செய்தன. ஒரு பாறையின் மேல் பெரிய சிவலிங்கம் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் ஒருவர் தியானத்தில் அமர்ந்திருந்தார். நானும் சிவலிங்கத்தின் அருகில் அமர்ந்து கொண்டு ஓடையின் போக்கை கவனித்துக்கொண்டிருந்தேன். நான் அமர்ந்திருந்த பாறையின் அருகில் பச்சை நிறத்தும்பிகள் பறந்து கொண்டிருந்தன. கற்களின் மீது மோதி சுழன்றடித்த படி தண்ணீர் ஓடிக் கொண்டே ஒலி எழுப்பிக் கொண்டே இருந்தது. தண்ணீரின் மொழி இதுதானோ எனத் தோன்றியது. நீரின் போக்கை பொருத்து ஒலியும் மாறுபடும் எனில் தண்ணீரின் மொழியை அதன் கரைகளே முடிவு செய்யும் போலும்.
கோவிலின் வெளிப் பிரகாரம் அகலமானதாக இருந்தது. பழமையான கல் சுவரின் ஊடாக நிறைய மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. கோவிலை கட்டும் போது, கால மாற்றம் கோவிலின் ஊடாக மின்சாரத்தை பாய்ச்சும் என யாரேனும் நினைத்துப் பார்த்திருக்க முடியுமா?
கோவிலில் இருந்து சற்று தொலைவில் படித்துறை இருந்தது. இரவு மெல்ல கசியத் தொடங்கியது. படியில் அமர்ந்துகொண்டு ஆற்றை கவனித்து வந்தேன். ஆற்றின் மறு கரையில் இருந்த மரங்கள் மெல்ல மறையத் தொடங்கின. ஆற்றின் போக்குக்கு இணையாக வௌவால்கள் பறக்கத்தொடங்கின. அவை கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தன. இத்தனை வௌவால்கள் கூட்டமாக பறப்பதை இங்குதான் பார்க்க நேர்ந்தது. பின் நாளில் கோவையிலும் மாலை நேரங்களில் இது போல வௌவால்கள் கூட்டமாக பறப்பதை பார்த்திருக்கிறேன். ஆறு இருளை விழுங்கத் தொடங்கியது. மனிதர்கள் நடமாட்டம் குறையவே ஆற்றின் பேரிரைச்சல் அதிகமானது. மனிதர்கள் உறங்கும் போது இயற்கை பேசத் தொடங்கிவிடும் போல. அல்லது இயற்கையின் பேச்சை மனிதர்கள் கேட்பதில்லையா? ஆறு எப்போதும் போல ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கிறது. ஆறு ஒரு போதும் உறங்குவதில்லை. அதன் உறக்கத்தை மழையே முடிவு செய்கிறது. ஆனால் ஆற்றின் மரணத்தை மனிதன் முடிவு செய்கிறான். இரவு நேரங்களில் ஆற்றில் இறங்க பயமாக இருக்கிறது. அதுவே ஆற்றின் பலமாகவும் இருக்கக் கூடும்.
மறுநாள் விடிந்தவுடன் அதே இடத்திற்கு வந்தேன். ஆற்றில் நிறைய பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள். ஆறு எல்லோரையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டது. ஆற்றோடு சேர்ந்து எல்லோரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆறு எல்லோருடைய கவலைகளையும் மறக்கச் செய்வதாக இருந்தது. ஆற்றோடு சேர்ந்து எல்லோரும் குழந்தைகளாகிப் போனார்கள். ஆனாலும் ஆறுகளை பாதுகாக்க வேண்டும் என்றும் ஏன் யாரும் மெனக் கெடுவதில்லை? ஆறு இவர்களுக்கு ஒரு விளையாட்டு பொருள் ஆகிவிடுமோ என பயமாகவும் இருந்தது. ஆற்றை கடக்கும் ரயிலின் படிகளில் நின்றபடி ஆற்றை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள் பயணிகள். ரங்கன்திட்டு பறவைகளில் ஒன்றிரண்டு ஆற்றின் மேலே பறந்து கொண்டிருந்தது. நான் ஆற்றில் இறங்கினேன். ஆற்றின் நடுவில் இருந்த பாறையின் நடுவில் வந்தமர்ந்த கொக்கு மீண்டும் பறக்கத் தொடங்கியது. நான் ஆற்று நீரில் மூழ்கியிருந்தேன்.
Aug 17, 2011
நதி சூழ் நகரம் : ஸ்ரீரங்கபட்டணம் (பகுதி 1 )
2011 ஜூலை மாதம் இளைஞர் முழக்கம் இதழில் வெளியானது.
ஸ்ரீரங்கபட்டணம், காவிரி உருவாக்கி வைத்த அற்புத தீவு. திப்பு சுல்தான் தன் அரசாங்கத்தை இந்த ஊரை தலைமையிடமாகக் கொண்டு அமைத்திருந்தார். நூற்றாண்டுகளை கடந்த பழமையும், நவீனமும் ஒரே புள்ளியில் சந்திக்கிற தீவு. ஊரின் வடமேற்கில் காவிரி இரண்டாக பிரிந்து மீண்டும் இணைகிறாள். நகரம் முழுக்க இடிந்து போன கோட்டைச் சுவர்களால் நிரம்பி இருக்கிறது. ஊரின் எந்த திசையில் சென்றாலும் கோட்டை சுவர்களின் மிச்சம் தென்படுகிறது. தன் தலைநகரை சுற்றி கோட்டைகள் அமைத்து, நடுவில் தன்னுடைய அரண்மனையை அமைத்துக் கொண்டது தெரிய வந்தது. இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு இன்று வரை இந்த ஊர் மிகப்பெரிய சாட்சி. ஊரை சுற்றி ஓடுகிற காவிரி நகரை எப்போதும் குளிர்ச்சியுறச் செய்கிறது. மிகப் பழமையான ஊர் என்ற போதிலும் கிராமத்து மனமே அதிகம் வீசுகிறது. ஊருக்குள் எங்கு பார்த்தாலும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கிறது. கிளிகளின் சத்தம் மனதை லேசாக்குகிறது.
ஸ்ரீரங்கபட்டினத்தின் வடமேற்கில் காவிரியின் மணல் திட்டுகளில் மையம் கொண்டிருக்கிறது ரங்கன்திட்டு பறவைகள் சரணலாயம். பல வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்துள்ளன. காவிரியின் பரப்பை பறவைகள் மேலும் அழகாக்குகின்றன.
காவிரி ஆற்றில் படகில் சென்று கொண்டே பறவைகளை அருகில் சென்று காண முடிகிறது. பறவைகள் மனிதர்களை கண்டு அச்சம் கொள்ளாமல் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக பறவையின் அருகில் சென்றாலே அவை பயந்து பறந்துவிடுவது, மனதில் அவமானத்தை கீறிச் செல்வது போல இருக்கும். ஆனால் ரங்கன்திட்டு கொஞ்சம் விசித்திரமாக இருந்தது. பறவைகள் பயம் கொள்ளவில்லை. ஆற்றில் இறங்கி நம்மை சீண்ட மாட்டார்கள் என உணர்ந்திருக்குமா எனத் தெரியவில்லை.
படகுகளுக்கு இணையாக ஆற்றில் முதலைகள் நீந்திக் கொண்டு வந்தன. ஆனால் என்னுடன் படகில் பயணித்த யாரும் முதலைகளை கண்டு அச்சம் கொள்ளவில்லை. முதலைகளை ஒரு ஆச்சர்யப் பொருளாகவே பார்த்தார்கள். முதலை பண்ணைகளில் அவற்றை ஒரு சடப்பொருள் போல பார்த்து பழகியவர்களுக்கு முதலையின் இயல்பான ஆக்ரோஷம் புரியாமல் இருப்பது வியப்பாக இருந்தது.
காவிரிக் கரையோர மரங்களில் வௌவால்கள் தொங்கிக் கொண்டிருந்தன. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு தூக்கணாங் குருவிக் கூடுகள் போலவே இருந்தன. பகல் பொழுதில் அசைவற்று இருப்பதால் அவை வௌவால்கள் என்று உணரவே முடியாமல் இருந்தன. அரிதாக ஒன்றிரண்டு வௌவால்கள் இடமாற்றம் அடைந்தது. பறவைகளை போல வௌவால்கள் ரசிக்கப்படுவதில்லை. ஆனால் உண்மையில் மரங்களின் உற்பத்திக்கு அவை மிகப்பெரிய உறுதுணையாக இருக்கிறது.
நான் படகு இல்லம் அருகில் அமர்ந்திருந்தேன். ஒரு தனியார் தொலைகாட்சியின் ஒளிப்பதிவாளர் என் அருகில் வந்து அமர்ந்தார். அவரின் உதவியாளர்கள் நான்கு பேரும் உடன் வந்து அமர்ந்தார்கள். பறவைகளை பற்றிய நிகழ்ச்சியை பதிவு செய்ய வந்திருப்பதாக சொன்னார். பறவைகள் ஆங்காங்கே மரத்தில் அமர்ந்திருந்தன. ஒன்றிரண்டு பறவைகள் மட்டுமே பறக்கவும், பின் மீண்டும் மரங்களில் அமரவுமாக இருந்தன. ஒளிப்பதிவு செய்ய வந்தவருக்கு அது அழகாக தெரியவில்லை. தன் உதவியாளரிடம் கற்களை கொண்டுவரும்படி சொன்னான். தன்னுடைய ஒளிப்பதிவு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பறவைகளின் மீது கல் எறிகிறானே என ஆதங்கமாக இருந்தது.
நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவன் உதவியாளரிடம் மேலும் கற்கள் வேண்டுமென்றான். பறவைகளின் கூட்டம் நோக்கி தன்னிடமிருத கல் ஒன்றை எறிந்தான். அது பறவைகளை அடையவில்லை. அதற்கு முன்னதாகவே ஆற்று நீரில் விழுந்தது. மீண்டும் ஒரு முயற்சி செய்தான். அதுவும் நீருக்குள் விழுந்து மூழ்கிப் போனது. பறவைகள் பயம் கொள்ளாதது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. கற்களோடு சேர்ந்து அவன் எண்ணமும் ஆற்று நீரில் மூழ்கிப்போனது. ஆனால் கரையில் இன்னமும் கற்கள் மீதம் இருக்கின்றன. பறவைகள் மனிதர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின்மையின் சாட்சிகளாகக் கிடந்தன கற்கள்.

தொடரும்...
Aug 8, 2011
Sprint of the Blackbuck: Edited by Mr.S.Theodre Baskaran
Blackbuck என்ற காட்டுயிர் இதழில் வெளியான கட்டுரைகளை தொகுத்திருக்கிறார் திரு.தியடோர் பாஸ்கரன். பல்வேறு வன ஆர்வலர்களாலும் பல்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட இந்த புத்தகம் தென்னிந்திய காடுகள் பற்றிய அரிய தகவல்களை தருகிறது, Sprint of the BlackBuck.
பல்வேறு விலங்கினங்கள், பறவைகள், இரு வாழ்விகள், ஊர்வன மற்றும் பூச்சிகள் பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
மேலும் எல்லா உயிரினங்களின் உயிரியல் (Binomial Name) பெயரோடும் எழுதப்பட்டுள்ளது. காடுகளில் மட்டும் அல்லாது நம்மை சுற்றியே வாழும் எண்ணற்ற உயிரினங்களை பற்றிய புரிதலையும் உருவாக்குகிறது. உயிரினங்களின் கணக்கெடுப்பின் போது ஏற்பட்ட அனுபவங்கள், உயிரினங்களை மீட்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள், வனப் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் பல்வேறு தளங்களில் எழுதப்பட்டுள்ளது.
1950 களில் இந்தியா காடுகளில் வாழ்ந்த சிவிங்கப்புலிகள் (இன்று முடிலும் அழிந்து விட்டது) வெளிமான்களை வேட்டையாடப் பழக்கப்படுத்தப்பட்ட செய்திகள் ஆச்சர்யத்தை அளிக்கிறது. பண்ணைகளில் இருந்த முதலைகளை ஆற்றில் விடப்பட்ட அனுபவங்கள், ஓசூர் அருகே சிறுத்தை புலி ஊருக்குள் புகுந்தபோது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என பல்வேறு தளங்களில் பயணிக்கிறது இந்த நூல்.
Aug 6, 2011
செந்தலைக் கிளி
நான் என் நண்பருடன் பழனி மலை பகுதியிலுள்ள பெத்தேல்புரம் (ஓட்டன்சத்திரத்திலிருந்து பாச்சலூர் செல்லும் வழி) வனப்பகுதியில் பறவைகளை பார்ப்பதற்காக நாள் முழுக்க நடந்து சென்று மாலையில் திரும்பிக் கொண்டிருந்த போது கூட்டம் கூட்டமாக செந்தலை கிளிகளை பார்க்க முடிந்தது. ஆனால் அது Plum Headed Parakeet ஆக இருக்குமா அல்லது Blossom Headed Parakeet ஆக இருக்குமா என சரியாக தெரியவில்லை. ஆனால் இந்த அற்புதமான பறவையை பார்த்த மகிழ்ச்சியில் கொஞ்சம் உள்நோக்கி நடந்து கொண்டிருந்தோம்.
எங்களுக்கு முன்னால் தனியாக பிரிந்து சென்ற நண்பர் என் கைப்பேசியில் அழைத்து சொன்னார். "அங்கிருந்து நகர்ந்து வெளியே வாருங்கள். உங்களுக்கு அருகில் யானைகள் நின்று கொண்டிருக்கின்றன". அங்கிருந்து வெளியே வந்து பார்த்த போது தான் தெரிந்தது, எங்களுக்கு வெகு அருகில் ஒரு யானை கூட்டம் நின்று கொண்டிருந்தது. அதில் ஆண் யானையும் குட்டியும் அடக்கம்.
யானைகள் நின்றிருந்தது கூட கவனிக்க முடியாத அளவில் அந்த பறவை எங்களை ஈர்த்திருந்தது. உடல் பச்சையாகவும் தலை மட்டும் சிவப்பாகவும் இருக்கும். பழனி மலை வனப் பகுதிகளில் இதனை வேறு எங்கும் நான் பார்த்தது கிடையாது.
Aug 1, 2011
எமர்ஜென்சி நடந்தது என்ன? வி.கிருஷ்ணா ஆனந்த்
எமர்ஜென்சி எதற்காக கொண்டுவரப்பட்டது என்பதையும், எமர்ஜென்சியின் போது நடந்த அரசியல் சூழ்நிலைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது இந்த நூல். 1971-ஆம் ஆண்டு இந்திரா காந்திக்கு எதிராக போட்டியிட்ட ராஜ் நாராயண் தொடுத்த வழக்கும் அதற்கான தீர்ப்பும் இந்திரா காந்தியை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
அதிலிருந்து தப்பிக்கவும், தன்னுடைய பதவியை தக்க வைத்துக் கொள்ளவும் அவர் எடுத்த அரசியல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளும் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. அரசியல் சட்ட திருத்தங்களை தன் தேவைக்கு ஏற்றார்போல மாற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களின் செய்திகளை தணிக்கை செய்தது அரசு.
பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் பல பத்திரிக்கைகள் மக்கள் புரிந்து கொள்வதற்காக எதுவும் எழுதாமல் சில பத்திகளை காலியாக விட்டது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசத்தில் சுமார் இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற எண்ணற்ற கைதுகளும், அதன் விளைவாக உருவான அரசியல் குழப்பங்களும் இன்றைய தலைமுறை நிச்சயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்றே.
Jul 29, 2011
ஒரு புலியின் மரணம்
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் மட்டுமே வாழும் "சுமாத்ரா புலிகள்" பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். மிகவும் அழியும் தருவாயில் உள்ள இந்த புலிகள் எப்படி பாதிக்கப்பட்டு இறந்து போகின்றன என்பதற்கு ஆதாரமாக "Green Peace" ஒரு காணொளிக் காட்சியை வெளியிட்டுள்ளது.
வேட்டைக்காரர்களால் வைக்கப்பட்ட பொறியில் தன் காலை சிக்கவைத்து அங்கிருந்து தப்பமுடியாமல் ஒரு வாரகாலம் பசியில் போராடிய அந்த புலி செத்துப் போனது. Asia Pulp and Paper என்ற நிறுவனம் அதிக அளவில் காடுகளை அழித்து வருவதன் விளைவால் பல்வேறு உயரினங்களும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மனிதனின் அகோரப் பசிக்கு இரையாகும் இந்த புலி இதயத்தை கனக்க வைக்கிறது.

Jul 27, 2011
கானமயில் கண்டதுண்டா?
Great Indian Bustard:
இறக்கைகள் இருந்தும் அதிக எடை காரணமாக பறக்க முடியாத பறவைகள் உண்டு. பறக்கும் தன்மை கொண்ட பறவைகளிலேயே அதிக எடை கொண்ட பறவை இந்த கானமயில். வறண்ட புல் வெளி பகுதிகளில் வாழ்கின்றன. பொதுவாக ஒரே ஒரு முட்டை மட்டுமே இடுகிறது.
அதுவும் தரையில் இடுவதால் ஆபத்தும் அதிகம். இதியா மற்றும் பாகிஸ்தானில் இவை அதிகம் காணப்பட்டன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் காணப்பட்ட இந்த கானமயில் இப்போதும் மிக மிக அருகிவிட்டது. தமிழ் நாட்டிலும் இவை காணப்பட்டதுண்டு. வெளி மான்கள் வாழும் நிலப்பரப்பு இவற்றிற்கு ஏற்றதாக இருப்பதால் அங்கு இவை காணப்படுகின்றன.
அதிக அளவில் இந்த வேட்டயாடப்பட்டதன் விளைவு இன்று இந்த பறவைகளின் எண்ணிக்கை வெறும் 250 என்ற அளவில் குறைந்து விட்டது. மேலும் வருடத்திற்கு ஒரு முட்டை மட்டுமே இடுவதால் இவற்றை காப்பாற்றுவது கடினமாக இருக்கலாம்.
இந்தியாவில் மட்டுமே பார்க்கக்கூடிய எத்தனையோ அரிய உயிரினங்கள் இன்று அழியும் தருவாயில் உள்ளன. இந்த கானமயில்களை பாதுகாக்க சிறப்பு கவனம் எடுத்து அரசு இந்த பறவையை காப்பாற்றவேண்டும்.
Jul 25, 2011
ஆம் நம்மால் முடியும்: திரு.வைகோ
திரு.வைகோ எழுதிய "ஆம் நம்மால் முடியும்" என்ற நூலை வாசித்தேன். ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் போது நடந்த அரசியல் சம்பவங்களை வரலாற்று பின்னணியோடு எழுதியிருக்கிறார். நெல்சன் மண்டேலா, மார்டின் லூதர் கிங் என வெள்ளையர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக போராடியவர்களின் வரலாற்றையும் சேர்த்தே பதிவு செய்திருக்கிறார். சுமார் முந்நூறு ஆண்டுகளாக கறுப்பின மக்களை அடிமைகளாக்கி வைத்திருந்த சமயத்தில் வெள்ளையர்கள் கையாண்ட அடக்கு முறைகளும், அதற்கு எதிராக எழுந்த போராட்டங்களும் ஒபாமா அமெரிக்கா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது எவ்வளவு பெரிய ஆச்சர்யம் என்பதை உணர வைக்கிறது.
ஒபாமாவின் வெற்றிக்கு அவருடைய பேச்சு திறமை மிக முக்கிய காரணம். யாரையும் கண்மூடித் தனமாக எதிர்க்காமல், எல்லாருடைய விமர்சனங்களுக்கும், பொறுமையாகவும், நேரடியாகவும் அவர் பதில் சொன்ன பாங்கு அமெரிக்கர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விட்டார். கறுப்பின மக்களை சங்கிலியில் கட்டி வைத்து வேலை வாங்கி, பயன் படாத பொருட்களை குப்பையில் போடுவது போல, அவர்களை தூக்கிலிட்டு கொன்ற தேசம் இன்று ஒரு கறுப்பின மனிதனை ஜனாதிபதியாக கொண்டாடுகிறது.
ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதற்காக ஹிலாரியும் ஒபாமாவும் கடுமையாக மோதிக்கொண்ட போதிலும், ஒபாமா எப்போதும் தரக் குறைவாக பேசவில்லை. திறமையான மேடை பேச்சும், நேரடியான பதிலும், ஒபாமாவுக்கு பெரும் வெற்றியை தேடித் தந்தது. காலம் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது. ஆனால் இதற்கு பின்னால் எத்தனையோ பேரின் தியாகம் அடங்கியுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக தென் ஆப்ரிக்காவில் போராடிய மகாத்மா காந்தியின் புகைப்படம் இன்று வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியின் அறையில் புன்னகை சிந்தியபடி இருக்கிறது.
Jul 20, 2011
மரகதப் புறா : Emerald Dove
தமிழ் நாட்டின் மாநிலப் பறவையான மரகதப் புறாவை சென்ற வாரம் பழனி மலை பகுதியில் பயணம் செய்த போது அதிகமாக பார்க்க முடிந்தது. பாச்சலூர் அருகே உள்ள வனப்பகுதியில் இவை அதிகம் காணப்படுகின்றன. தரையில் இருந்து சுமார் 1200 மீ உயரத்திற்கு மேலுள்ள பகுதிகளில் இவற்றை பார்க்க முடிந்தது. பசுமை மாறா மழைக் காடுகளில் வாழும் இவை தெற்காசிய முழுவதும் பரவி உள்ளன. பெரும்பாலும் பழங்கள், விதைகளை உண்டு வாழ்கின்றன.
அதிகம் வெளியே தென்படாமல் மறைந்து வாழ்கின்றன. இதற்கு முன் இந்த பறவையை வேறு எந்த வனப் பகுதியிலும் நான் பார்த்ததில்லை. எளிதில் கண்களுக்கு புலப்படாத இந்த பறவையை படம் எடுக்க முயற்சித்து முடியாமல் போனது.
ஐரோப்பாவில் இந்த பறவை கூண்டில் வைத்து வளர்க்கப்படுகிறது.
ஐரோப்பாவில் இந்த பறவை கூண்டில் வைத்து வளர்க்கப்படுகிறது.
Jul 18, 2011
தேவதைகளின் தேவதை: திரு.தபூ சங்கர்
என்னுடைய கல்லூரி நாட்களில் அதிகம் பேசப்பட்ட புத்தகம் "தேவதைகளின் தேவதை". இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு குறுங்கதையும் கவிதையும் என் நண்பர்களால் விமர்சனம் செய்யப்படும். இன்றும் பலராலும் இது பேசப்படுகிறது. அது தானே ஒரு எழுத்தாளனின் வெற்றியாகவும் இருக்க முடியும். காதல் வழிந்தோடும் தபூ சங்கரின் இந்த புத்தகம் எப்போது படித்தாலும் முக்கனியில் பால் ஊற்றி தேன் பிழிந்தார் போலத் தான்.
ஒரு சில கவிதைகள்:
கண்ணாடித் தொட்டியில்
நான் வளர்க்கும் மீன்கள்
உன் மீது புகார் வாசிக்கின்றன
'அந்த ரெண்டு மீன்களுக்கு மட்டும்
ஏன் அவ்வளவு அழகான தொட்டி?' என்று.
உனக்கு வாங்கி வந்த
நகையை பார்த்து
'அய்...எனக்கா இந்த நகை'
என்று கத்தினாய்.
நகையோ
'அய் எனக்கா இந்த சிலை'
என்று கத்தியது.
அன்று
நீ குடை
விரித்ததற்காகக்
கோபித்துக் கொண்டு
நின்றுவிட்ட
மழையைப் பார்த்தவனாகையால்
இன்று
சற்றெண்டு மழை நின்றால்
நீ
எங்கோ குடை
விரிப்பதாகவே
நினைத்துக்கொள்கிறேன்
Jul 13, 2011
திருமதி.ஜெயந்தி நடராஜன்
தமிழகத்தின் முன்னால் முதல்வர் திரு.பக்தவச்சலத்தின் பேத்தி.
சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி.ஜெயந்தி நடராஜன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறைக்கு கேபினட் அந்தஸ்து இல்லாமல் இன்னமும் இணை அமைச்சரே பொறுப்பேற்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இன்னமும் சுற்றுச் சூழலுக்கான முக்கியத்துவத்தை இந்திய அரசு உணராமல் இருப்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
திருமதி.ஜெயந்தி நடராஜன் அவர்களுக்கு நிறையவே பணிகள் காத்திருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை அவர் செய்ய வேண்டிய உடனடி பணிகள் :
- சத்தியமங்கலம் வனப் பகுதியை தேசிய பூங்காவாகவும், புலிகள் காப்பகமாகவும் அறிவிக்க வேண்டும். மேலும் இந்த வனப் பகுதியை பாதுகாக்க தேவையான அதிகாரிகளையும் உடனடியாக பணியமர்த்த வேண்டும்.
- வனப்பகுதிகளில் இரவு நேர போக்குவரத்தை தடை செய்ய வேண்டும்.
- சுமார் 2000 ச.கி.மீ பரப்பளவுள்ள பழனி மலை பகுதியை தேசிய பூங்காவாகவும், வன விலங்கு சரணாலயமாகவும் தரம் உயர்த்த வேண்டும் இது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கிவிட்டதால், மாநில அரசிடம் வலியுறுத்தி, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மேகமலை வனப் பகுதியை வனவிலங்கு சரணலாயமாக தரம் உயர்த்த வேண்டும்.
- புலிகளின் வாழ்விடங்களை முறையாக கண்காணித்து, அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தனித் தனியாக உள்ள வனப்பகுதிகளை இணைக்க வேண்டும். இதன் மூலம் வனவிலங்குகள் தடையின்றி பயணம் செய்ய முடியும்.
- வன விலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கு தண்டனைகளை உடனுக்குடன் பெற்றுத் தர, வனத் துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
- வறட்சி காலங்களில் விலங்குகளின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண, நீர் தொட்டிகளை அமைக்க வேண்டும்.
- வன விலங்குகளால் பொதுமக்கள் இழப்பை சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப் படவேண்டும்.
- வறட்சி காலங்களில் காட்டுத்தீ பரவமால் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கடற்கரையோரங்களில் உள்ள அலையாத்தி காடுகளை பாதுகாக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.
- வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் தங்குமிடங்களை முறையாக கண்காணித்து, மேலும் புதிய பறவைகள் சரணாலயங்கள் அமைக்கப்பட வேண்டும்.
மேலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான பணிகளும் நிறையவே உள்ளது.
இதே போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுத்த வேண்டிய பணிகளை தாமதம் செய்யாமல் உடனடியாக நிறைவேற்றுவதன் மூலம், உலகின் அழகிய நிலத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம்.
Jul 11, 2011
கானுறை வேங்கை : திரு.தியடோர் பாஸ்கரன் (தமிழில்)
இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் - இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின்
என்ற நாலடியார் பாட்டில் இருந்து பெறப்பட்ட தலைப்பு "கானுறை வேங்கை". ஆங்கிலத்தில் கே.உல்லாஸ் காரந்த் எழுதிய "The Way of the Tiger" என்ற இந்த நூலை தமிழில் திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள் அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார். புலிகள் வாழ்க்கை முறை பற்றியும், அவற்றை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட/எடுக்க வேண்டிய நடை முறைகள் பற்றியும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தை திரு.தியடோர் அவர்கள் சிறப்பாக கையாண்டிருக்கிறார். குறிப்பாக ஆங்கிலத்தில் மட்டுமே சொல்லப்படும் சில சொற்களை முதன் முதலாக இந்த நூலில் தான் தமிழில் படிக்க நேந்தது. உதாரணமாக, உருமறை தோற்றம் ( Camouflage ), நிலைத்து நீடிக்கும் வளர்ச்சி (Sustainable Development) போன்ற வார்த்தைகள் முக்கியமானவை. ஆங்கிலம் மற்றும் தமிழில் புலமைவாய்ந்த ஒருவராக மட்டும் இருந்து இதை புத்தகத்தை மொழி பெயர்த்துவிட முடியாது. இயற்கையின் மீதான காதல் இல்லாமல் இந்த நூலை மொழி பெயர்ப்பது சிரமம். அந்த வகையில் திரு.தியடோர் அவர்கள் இதற்கு சரியான தீர்வாக இருந்து செயல்பட்டிருக்கிறார்.
இந்த நூலை ஆங்கிலத்தில் படித்ததை விட, தமிழில் இன்னும் சிறப்பாக இருந்தது. மொழிபெயர்ப்பு நூலாக இருந்தாலும் சொற்கள் எப்படி கையாளப்படுகிறது என்பதே முக்கியம். பொருளும் மாறாமல் சொற்களையும் சிறப்பாக கையாண்டிருக்கிறார். அதற்கு ஒரு உதாரணம் :
"நாம் காட்டில் ஒரு புலியைக் காணும்பொழுது அது 'தனியாக' நடக்கிறது என்று நினைக்ககூடும். ஆனால் மற்றப் புலிகளுக்கு அது பல செய்திகளைத் தன் நெடியின் மூலம் விட்டுச் செல்கிறது. ஒரு புலி தனியாக இருக்கலாம். ஆனால் அது தனிமையில் இருப்பதில்லை". (பக்கம் : 68 )
புலியின் பாதுகாப்பை விரும்புவோர், புலிகள் தொடர்ந்து இந்த பூமியில் உயிர் வாழ வேண்டும் என்று விரும்புவோர் இந்த புத்தகத்தை படித்தால், "என்ன செய்ய வேண்டும்" என்ற ஒரு தெளிவான நிலையை அடைய முடியும். புலிகளின் பாதுகாப்பிற்கு தனி மனிதனின் பங்கு என்ன என்பதை உணர்ந்து செயல்பட முடியும்.
காலச்சுவடு பதிப்பகத்தால் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
Jul 7, 2011
மேகமலை விடிவு எப்போது?
தேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது மேகமலை. கேரள மாநிலத்தின் பெரியார் புலிகள் காப்பகத்துக்கும், தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன விலங்கு சரணாலயத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது மேகமலை. மேகமலை பகுதியை வனவிலங்கு சரணாலயமாக மாற்றுவதற்கான முயற்சிகள் கிடப்பில் உள்ளது.
சுமார் 600 சதுர கி.மீ பரப்பளவுள்ள இந்த வனப்பகுதி, பல்வேறு அரிய உயிரினங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. மேலும் இரண்டு முக்கிய வனப்பகுதிகளை இணைக்கும் பகுதியாக இருப்பதால் விலங்குகள் நடமாட இங்கு வாய்ப்புகள் அதிகம். இந்த வனப் பகுதியை வன விலங்கு சரணாலயமாக மாற்றுவதன் மூலம், விலங்குகள் வேட்டையாடப் படுவதை பெருமளவு குறைக்க முடியும். மேலும் இந்த வனப் பகுதிகளில் பயிரிடப்படும் கஞ்சாவையும் அடியோடு ஒழிக்க முடியும்.
இந்த வனப் பகுதியானது புலி, யானை, கரடி, சிறுத்தை புலி, வரையாடு, மிளா, கேளையாடு, புள்ளி மான், காட்டெருமை, சோலை மந்தி, மலை அணில், நீர் நாய் மற்றும் இன்னும் பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மிகவும் அரிய பறவையான இருவாச்சிகள் இங்கு காணப்படுகின்றன. சிறிய அளவிலான தேவாங்குகள் இந்த மலை பகுதியில் வாழ்கின்றன.
பல்வேறு அரிய வகை தாவரங்கள், மரங்கள் மற்றும் பறவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது மேகமலை. எனவே இந்த வனப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக மாற்ற வேண்டியது அவசியம், அவசரம். இந்த வனப்பகுதி, மேலும் இரண்டு முக்கிய வனங்களை இணைப்பதால் பெரிய அளவில் விலங்குகளையும் பறவைகளையும் பாதுகாக்க முடியும்.
Jul 4, 2011
உழவுக்கும் உண்டு வரலாறு : திரு. கோ.நம்மாழ்வார்
ஒரு வருடத்திற்கும் முன்பே நான் வாசித்த நூல் "உழவுக்கும் உண்டு வரலாறு". திரு. கோ.நம்மாழ்வார் எழுதிய இந்த புத்தகம் ஏற்படுத்திய வலி ஒரு ஆறாத் துயரமாக நீடிக்கிறது. வேளாண்மை என்றாலே என்னவென்று தெரியாமல் இருக்கும் இன்றைய நகரத்து குழந்தைகள் இயற்கை வேளாண்மை பற்றி எப்படி தெரிந்து கொள்வார்கள் என்ற கேள்வியை எனக்குள் எழுப்பியது.
நம் சமூகத்தில் பெரும்பாலும் விவசாயிகளின் குறைகளையோ வேளாண்மையில் நடக்கும் தவறுகளையோ குறித்து அதிகம் பேசுவதில்லை. வேளாண்மை தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று பொதுவான வார்த்தைகளை பேசிவிட்டு விலகி நின்று கொள்கிறோம். இதன் விளைவு, அடுத்த தலைமுறை பற்றி கூட கவலைப்படாத வேளாண்மை இன்று இந்த தேசம் எங்கும் நடக்கிறது.
இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பது தொடர்பான எந்த சிறப்பான முயற்சிகளையும் மத்திய மாநில அரசுகள் எடுப்பது போலவும் தெரியவில்லை. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் திரு.நம்மாழ்வார் போன்ற இயற்கை மகத்துவம் தெரிந்த மாந்தர்கள் போராடுவது ஆறுதலான விஷயம் தான். ஆனால் இன்றும் இந்த மனிதர்கள் போராடிக் கொண்டிருக்க, நாம் வேடிக்கை மட்டுமே பார்ப்பது தான் இதில் கொடூரமானது.
இவர்கள் நமக்காகத்தான் போராடுகிறார்கள் என்பதே பலரும் புரிந்து கொல்லாத சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த புத்தகத்தை இன்றைய விவசாயிகள் படிப்பதை விடவும் இன்றைய நகரத்து இளைஞர்கள் படிக்க வேண்டியதே அவசியம் என நினைக்கிறேன். வேளாண்மை செய்ய முடியாதவர்கள், குறைந்தது இயற்கை வேளாண்மையில் ஈடுபடுபவர்களை ஆதரிக்கவாவது முன் வரவேண்டும்.
திரு. கோ.நம்மாழ்வார் அவர்களுடைய உரையையும் கேட்டுப்பாருங்கள்.
Jul 3, 2011
நில முதலை
உலகின் மிகப்பெரிய பல்லி இனம் "நில முதலை" என தமிழில் அழைக்கப்படும், கொமோடோ டிராகன். இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் இவை, அது வாழும் வனப்பகுதியில், முதன்மையான ஊன் உண்ணி. முதுகெலும்பிலிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் போன்றவரை உணவாக கொள்ளும்.
எருமை மாடுகளை கூட கொன்று, உண்டு விடும் தன்மை கொண்டவை இந்த கொமோடோ டிராகன். பொதுவாக வறண்ட வானிலை நிலவும் நிலப்பரம் மற்றும் புல் வெளிப் பகுதிகளிலும் வாழ்கின்றன. மூன்று மீட்டர் நீளமும், 150 கிலோ எடை கொண்டதாகவும் இருக்கின்றன. சுமார் இருபது முட்டைகள் வரை இடுகின்றன. ஐம்பது ஆண்டுகள் வாழ்கின்றன. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்இதனை அழிய வாய்ப்புள்ள இனமாக அறிவித்துள்ளது.
மனிதர்கள் தரும் இடையூறுகளால் இவை நெருக்கடிக்கு ஆளாகின்றன. தற்சமயம் சுமார் 3000 முதல் 5000 எண்ணிக்கையில் தான் மிச்சம் உள்ளன. அதிக மோப்ப சக்தி கொண்ட இவை தனக்கான இரை ஒன்பது கி.மீ தூரத்தில் இருந்தாலும் அவற்றை உணரும் தன்மை கொண்டவை.
Jun 30, 2011
திரு.கே.எம்.சின்னப்பா (ಕೆ.ಎಂ.ಚಿನ್ನಪ್ಪಾ)
கர்நாடக மாநிலத்தின் வன விலங்கு ஆர்வலர்கள் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருப்பவர் திரு.கே.எம்.சின்னப்பா. அவரை நேரில் சந்தித்து பேசினேன். பிரம்மகிரி மலைப் பகுதிகளுக்கு சென்ற போது, எங்கள் அமைப்பை சேர்ந்த அனைவரும் அவருடைய இல்லம் சென்று அவரை நேரில் சந்தித்து பேசினோம். நாகர்ஹோலே வனப் பகுதியை ஒட்டிய கிராமத்தில் வளர்ந்த இவர் சிறு வயதில் இருந்தே வனத்தின் மீதும், வன விலங்குகளின் மீதும் அதிக நேசம் கொண்டவாராக இருந்தார். அறுபதுகளில் வன அலுவலராக நாகர்ஹோலே வனப் பகுதியில் பணியில் சேர்ந்தார்.
சுமார் இருபது ஆண்டுகள் வன அதிகாரியாக பணியாற்றிய இவர், நாகர்ஹோலே வனப் பகுதியை இந்தியாவின் மிக முக்கிய பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக மாற்றியவர். இவர் பணியில் சேர்ந்த போது, மான்களை காண்பதே அரிதாக இருந்தது. இன்று இது புலிகள் சரணாலயமாக விளங்குகிறது. நேர்மையாகவும், சிரத்தையுடனும் போராடிய இவர், நிறைய சிக்கல்களையும் சந்திக்க நேர்ந்தது.
1993 ல், பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று அதன் பின்னரும் தொடர்ந்து வனப் பாதுகாப்பிற்காக பணியாற்றியவர். தன்னார்வு தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து இவர் பணியாற்றத் தொடங்கிய போது, இவருக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை பெற மறுத்து, தன்னுடைய ஓய்வூதிய பணமே போதும் என்று சொன்னவர். தன்னுடைய சொந்த நிலத்தை வனப் பாதுகாப்பிற்காக விட்டுக் கொடுத்தவர்.
ஆசிய யானைகளை பற்றி மிகச் சிறந்த அனுபவம் கொண்டவர். இன்று வரை வனப் பாதுகாப்பிற்காக தொடர்ந்து பணியாற்றுபவர். அவருடைய அனுபங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்றும் கர்நாடக மாநிலத்தில் புலிகள் அதிகம் இருப்பதற்கு இவரே மிக முக்கிய காரணம்.
Jun 27, 2011
ஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி
நாகர்கோவில் பகுதி மக்களின் வட்டார வழக்கு தமிழை இவ்வளவு சுவையாக எழுதி இதற்கு முன் நான் படித்ததில்லை. ஒரு புளிய மரம், அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் - நகரும் கதைகள். ஒரு மரம் எங்கும் நகர்ந்து போவதில்லை. ஆனால் அது வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதை சுற்றிலும் எத்தனை மாற்றங்கள் நடந்தாலும் அது அப்படியே தான் இருக்கிறது. எத்தனை மனிதர்கள் வந்து போனாலும் அதனிடம் எந்த மாற்றமும் இல்லை. அது தனக்கான வாழ்க்கையை வாழ்கிறது. வாழ்ந்து கொண்டே இருக்கிறது. இது எல்லா மரத்துக்கும் பொருந்தும் விஷயம் தான். அப்படி ஒரு புளிய மரத்தை சுற்றி நடக்கிற சம்பவங்களை எல்லாம் கோர்த்து நாவலாக்கியிருக்கிறார் திரு.சுந்தர ராமசாமி அவர்கள். 1960-களில் எழுதப்பட்ட நாவல் இன்றும் வாசிக்க வாசிக்க சுவை மிகுந்த அனுபவமாகவே இருக்கிறது.
ஒரு குளத்தின் நடுவில் வளரும் புளிய மரம் தான் இறக்கும் போது நகரின் மையத்துக்கு வந்து விடுகிறது. மரத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அப்படி. மற்றபடி மரம் நகரவில்லை. புளிய மரம் மரணிக்கும் போது கூட, அது பூ பூப்பதை போலவும் காய் காய்ப்பதை போலவும் இயல்பாக மரணிக்கிறது. மரணத்தை வெகு இயல்பாக ஏற்றுக் கொள்கிறது.
இந்த நாவல் ஒரு மரத்தை பற்றி மட்டுமல்ல. மரத்தை அடிப்படையாக வைத்து, சுதந்திர இந்தியா அறுபதுகளில் எப்படி இருந்தது என்பதையும் அழகாக எடுத்துச் செல்கிறது. காதர், தாமு, செல்லப்பன், கடலை தாத்தா, இசக்கி இவர்களுக்கு இடையிலான அரசியல் இன்றும் நிஜ வாழ்க்கையில் மாறாமல் இருப்பது வருத்தமாகத் தான் இருக்கிறது.
தாமோதர ஆசான் என்ற கதாபாத்திரம் யதார்த்தத்தின் உச்சம் என்றே சொல்லலாம். இன்று அது போன்ற மனிதர்களை காண்பதே அரிதாகிவிட்டது. தன் அனுபவங்களை வண்டு சிண்டுகளிடம் சொல்லி மகிழும் தாதாக்களை காண்பதே அரிதாகிவிட்டது. எல்லாவற்றையும் இன்று தொலைகாட்சிகள் தின்று விட்டன.
புளிய மரத்தின் அருகிலிருந்த காற்றாடி மரத் தோப்பை வெட்டி சாய்த்து அங்கே ஒரு பூங்காவை அமைக்க அரசாங்கம் முன்வருகிறது. மரங்கள் வெட்டப்படுவதை கூட்டமாக நின்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு முதியவர்க்கும் ஒரு இளைஞனுக்கும் இடையேயான உரையாடல் இந்த நாவலின் தேன் சொட்டு:
"தம்பி எதுக்குடேய் மரத்தே வெட்டிச் சாய்க்கிறாங்க?"
"செடி வெக்கப் போறாங்க"
"எதுக்குடேய் செடி வெக்கப் போறாங்க?"
"காத்துக்கு"
"மரத்தெக் காட்டிலும் செடியாடேய் கூடுதல் காத்துக் தரும்?"
"அளகுக்கு"
"செடி தான் அளகாட்டு இருக்குமோ?"
"உம்"
"செடி மரமாயுடாதொவ்?"
இளைஞன் கிழவர் முகத்தை பார்த்தான். பொறுமையிழந்து "மரமாட்டு வளராத செடிதான் வைப்பாங்க. இல்லை, வெட்டிவெட்டி விடுவாங்க" என்றான்.
"வெட்டி வெட்டி விடுவாங்கள?"
"ஆமா"
"அட பயித்தாரப் பயக்களா!"
Jun 23, 2011
மயில்களை கொல்ல வேண்டாம்
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அவ்வப்போது நடக்கும் முரண்பாடுகளால், பலமுறை யானைகள், காட்டெருமைகள், மான்கள், காட்டுப் பன்றிகள் என ஏராளமான உயிரினங்கள் மடிந்துள்ளன. பல சமயங்களில் தங்கள் மாடுகளை கொன்று விடுவதாக கூறி புலிகளுக்கும் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்ததுண்டு. தற்போது, அந்த பட்டியலில் மயிலும் சேர்ந்துள்ளது. பெருந்துறையில் இருபது மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன.
விளை நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி விடுவதாக கூறி தற்போது விவசாயிகள் போராட்டத்திலும் இறங்கி உள்ளனர். மயில்கள் பயிர்களை நாசம் செய்வதாக சொல்பவர்கள் சில விஷயங்களை மறந்து விடுகின்றனர். வேளான் நிலங்களில் பாம்புகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பது மயில்கள். பயிர்களை தாக்கும் பல பூச்சி இனங்களை உண்டு அவற்றின் பெருக்கத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பது மயில்கள் தான்.
விவசாயிகளுக்கு ஒரு வகையில் மயில்கள் நன்மையே உண்டாக்குகின்றன. மயில்கள் நம் தேசத்தின் பொக்கிஷம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு இல்லாத பெருமை மயில்களால் இந்தியாவிற்கு உண்டு. இவை விஷம் வைத்துக் கொல்லப்படுவதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கான தீர்வாக மயில்களுக்கு என்று புதிய சரணாலயங்கள் அமைக்கப்பட வேண்டும்.
வேளான் நிலங்களுக்கு இடையே பயிர் செய்ய முடியாமல் வெறும் குன்றுகளாக, சிறிய மலைகளாக இருக்கும் பயன்படாத இடங்களை மயில்களுக்கான இடமாக மாற்ற வேண்டும். அவற்றின் உணவிற்கான தேவையும் அந்த இடங்களில் உறுதி செய்யப்பட வேண்டும். மயில்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மயில்களால் பயிர்கள் சேதம் அடைந்தால் அதற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். எனவே மயில்களை கொல்ல வேண்டும் என்ற அவசியம் ஏற்படாது.
Jun 22, 2011
தெற்காசிய ஆவுளியா
ஆவுளியா
இந்தியா, இலங்கை, வங்க தேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கடல் பகுதிகளில் காணப்படும் ஆவுளியாக்களை அழிவில் இருந்து காப்பாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த நான்கு நாடுகளும் கலந்து கொண்ட தெற்காசியாவின் ஆவுளியாக்களை காப்பாற்றும் வழிமுறைகள் குறித்த பயிலரங்கம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
இந்திய துணை கண்டத்தின், கட்ச் வளைகுடா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி ஆகிய பகுதிகளில் அதிகம் வாழ்கின்றன ஆவுளியாக்கள். வேட்டையாடுதல், இயந்திரங்களை கொண்டு மீன் பிடித்தல், பவளப் பாறைகளை அழித்தல் மற்றும் கடற்கரை புல் வெளிப் பகுதிகளை அழிக்கப்படுதல் போன்றவற்றின் காரணமாக இவை அதிக அழவில் உயிரிழக்க நேரிடுகிறது. வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி இவற்றை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், IUCN அறிவிப்புப்படி அருகி வரும் உயிரினமாகவே இது கருதப்படுகிறது.
முதல் முறையாக இந்தியா தொடங்கி வைத்திருக்கும் இந்த மாநாடு,ஆவுளியாக்களை பாதுகாப்பற்கான ஒத்துழைப்பை தெற்காசிய நாடுகள் இணைந்து செயல்பட வழி வகுத்துள்ளது.

Jun 21, 2011
சிறகடிக்கட்டும் சிட்டுக்குருவிகள்
சிட்டுக் குருவிகளின் மறுமலர்ச்சிக்கான செயல்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக மேலும் சில பணிகளை செய்ய வேண்டியுள்ளது.
- பழனி, ஒட்டன்சத்திரம், பூம்பாறை மற்றும் கொடைக்கானல் நகரங்களில் சிட்டுக் குருவிகள் அதிகம் உள்ள இடங்கள் பதிவு செய்யப்படும்.
- மேலும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை பொருத்து, மற்ற மாவட்டங்களிலும் இந்த வழிமுறைகள் பின்பற்றப்படும்.
- புவியிடங்காட்டி (Global Positioning System : GPS) மூலம் இந்த இடங்கள் பதிவு செய்யப்படும்.
- மேலும் சில கூடு பெட்டிகள் வழங்கப்படும். பெற முடியாதவர்கள் மண் கலயங்களை பயன்படுத்தலாம்.
- ஒவ்வொரு இடத்தில் பொருத்தப்படும் கூடு பேட்டிகள் மற்றும் மண் கலயங்களுக்கு ஒரு "எண்" வழங்கப்படும்.
- கூடு பேட்டிகள் மற்றும் மண் கலயங்கள் பொருத்தப்படும் வீட்டின் உரிமையாளர்களிடம் தொடர்ந்து தானியங்கள் வைக்கவும் தண்ணீர் வைக்கவும் வலியுறுத்தப்படும்.
- சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை கண்காணித்து பதிவு செய்வதற்காக "பதிவுத் தாள்" (Data Sheet) வழங்கப்படும்.
- வாரம் ஒரு முறை தன்னார்வலர்கள், கூடு பெட்டிகள் மற்றும் மண் கலயங்கள் பொருத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று பதிவு செய்ய வேண்டும்.
- மாதம் ஒரு முறை இதற்கான கலந்தாய்வு நடைபெறும்.
- இந்த தொடர் நடவடிக்கைகள் மூலம் அவற்றின் எண்ணிக்கை பெருகுவது கண்காணிக்கப்படும்.
மேலும் இதை நடைமுறைபடுத்த தன்னர்வலர்களும் தேவைப்படுகிறார்கள்.
உங்கள் ஊரில் இருந்தபடியே, உங்கள் வீட்டில் இருந்தபடியே இதை செய்ய முடியும். தேவை உங்கள் பங்களிப்பு மட்டுமே.
தொடர்புக்கு: +91-9742128975
satheesh.balu.m@gmail.com
Jun 20, 2011
அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்
திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதை தொகுப்பு. அவரின் இயல்பான நடையில், காற்றில் அடித்துச் செல்லப்படும் இறகை போல, இந்த நூலை வாசிக்கும்போது பறக்கத் தொடங்கி விடுவீர்கள். பல்வேறு தளங்களில் எழுதப்பட்டிருக்கும் இந்த சிறுகதை தொகுப்பில் மிகச் சிறந்த கதையாக நான் விரும்புவது, "குதிரைகள் பேச மறுக்கின்றன".
பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் கணவன் மனைவியின் வாழ்க்கையில், நின்று நிதானிக்க நேரம் இல்லை. ஊரில் இருந்து வரும் அவனின் அப்பா வீட்டில் வளரும் நாயை வெளியே கூட்டிச் செல்கிறார். திரும்பி வரும் பொது அது குதிரையாக இருக்கிறது. நாய் குதிரையாக மாறி விட்டதாக சொல்லி விட்டு, எதுவும் நடக்காதது போல அமைதியாகிவிடுகிறார். அதை தொடர்ந்து நகரும் இந்த கதை நடைமுறை வாழ்க்கையில் நாம் தொலைந்து போன பொறுமையை, அமைதியை எடுத்துக் காட்டுகிறது.
குதிரை என்ன தின்னும் என்பதை இணயத்தில் தேடுவது, ஏரிக்கு அருகில் வந்ததும் கேமிரா எடுத்துவரவில்லை என்று யோசிப்பது, குதிரை ஏறத் தெரியாமல் அதை பிடித்துக் கொண்டு நடந்து செல்வதை அவமானமாக நினைப்பது, தன்னுடைய குதிரை என்று சொல்ல கூச்சப்படுவது என இயல்பான மனிதனின் பிரதிபலிப்புகளை அழகாக எடுத்துக் காட்டுகிறது.
நாய் குதிரையாக மாறியதை ஏற்றுக் கொள்ளாத மகனுக்கும் எதையும் அலட்டிக் கொள்ளாமல் செய்தித்தாள் படிக்கும் தந்தைக்கும் இடையிலான உரையாடல்களில் இருக்கும் குசும்புகள் அசத்தல் ரகம்.
எஸ்.ரா அவர்களின் இணையத்தில் இந்த கதையை படிக்கலாம்.
Jun 18, 2011
கரடிகள் வாழுமிடம் இந்தியா
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கமும் பன்னாட்டு கரடிகள் அமைப்பும் இணைந்து நடத்தும் மாநாடு 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் நடக்கிறது. இதற்கான ஒப்புதலை மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வன அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கரடிகளை அழிவில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் இந்த மாநாட்டில் எடுக்கப்படும். உலகில் வாழும் எட்டு வகையான கரடிகளில் இந்தியாவில் மட்டுமே நான்கு வகை கரடிகள் வாழ்கின்றன. அப்படியானால் இந்தியாவின் நிலப்பரப்பு எவ்வளவு அற்புதமானது..!!
இந்திய முழுவதும் பரவி இருக்கும் கரடிகள் சமீப ஆண்டுகாலக சந்திக்கும் பிரச்சனைகள் :
அதனுடைய அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது
உணவு பற்றாக்குறை
அவற்றில் உடல் பாகங்களை சட்ட விரோதமாக வணிகம் செய்வது
மனிதர்கள் மற்றும் கரடிகள் இடையேயான வாழ்வாதார முரண்பாடுகள் போன்றவைதான்.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் முந்நூறுக்கும் மேற்பட்டு கரடிகளின் வாழ்வாதார பிரச்சனைகளை ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். கரடிகளின் உடல் பாகங்களை முறைகேடாக சந்தையில் விற்கப்படுவதை தடை செய்யவும் கண்காணிக்கவும் இந்த மாநாட்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மனிதர்களுக்கு கரடிகளுக்கும் இடையே எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
Jun 13, 2011
வீரத் துறவி விவேகானந்தர் : திரு.பசுமை குமார்
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய "வீரத் துறவி விவேகானந்தர்" என்ற நூலை படித்தேன். விவேகானந்தரின் வாழ்க்கை குறிப்புகளோடு, அவர் போதித்த தத்துவங்களையும் ஆங்காங்கே சிதறவிட்டிருக்கிறது இந்த நூல்.
உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று இந்தியாவை பற்றிய புதிய பிம்பத்தை ஏற்படுத்திய விவேகானந்தர், இந்தியாவின் முக்கிய தேவை மதம் அல்ல. கல்வியே என்று வலியுறுத்துகிறார். ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை என்பதை எல்லா சமயங்களிலும் உறுதிபடச் சொன்னவர்.
சிகாகோ சர்வ சமய மாநாட்டிற்கு சென்ற போதும் கூட, பலருடைய உதவியினால் தான் சென்றிருக்கிறார். அதன் பிறகு இந்தியா திரும்பியதும், பின் ஒவ்வொரு ஊராக சென்ற மக்களை சந்தித்து, சொற்பொழிவாற்றி பலரையும் கிளர்ந்தெழச் செய்தவர் விவேகானந்தர்.
கன்னியாகுமரி வந்த போது, கடலின் நடுவே இருக்கும் பாறையில் தவம் செய்ய விரும்பி, படகோட்டிகளை உதவிக்கு அழைத்த போது, கையில் பணம் இல்லாததால் யாரும் அவரை கொண்டுபோய் விட முன்வரவில்லை. பின் நீந்தியே பாறையை அடைந்தார். இன்று அந்த பாறைக்கு செல்வதற்கு, மக்கள் கட்டணம் கட்டி வரிசையில் காத்திருக்கிறார்கள்.
Jun 10, 2011
விஞ்ஞானியின் கவிதை
சென்ற வார ஆனந்த விகடனில் திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கவிதை ஒன்றினை வாசிக்க நேர்ந்தது.
அந்த கவிதை:
நவீன இந்தியாவின் விஞ்ஞானிகளில் முக்கியமான ஒருவர், தாய் மொழிவழிக் கல்வி பற்றி எழுதியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ் வழி கல்வி என்பதை நம் மக்கள் அவமானதாக கருதும் இன்றைய சூழலில், கோவையில் நடந்த சம்பவத்தை அடுத்து, சரியான நேரத்தில், இந்த கவிதை எழுதியிருக்கிறார். "நாங்க தான் தமிழ்ல படிச்சோம் எங்க பிள்ளைகளாவது இங்கிலீஷ் மீடியத்துல படிக்கட்டுமே" என்பது தான் பலரது வாதமாக இருக்கிறது.
ஆங்கில வழி கல்வி என்றாலே மேலானது என்ற தவறான மனோபாவம் நம் சமூகத்தில் விரவிக் கிடக்கிறது. எந்த மொழியில் நம் மூளை சிந்திக்குமோ அந்த மொழியில் படிப்பதே சிறந்தது. தமிழ் வழி கல்வியில் பயின்றால் ஆங்கிலம் பேச முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமும் நம் மக்களிடையே உண்டு. ஆங்கிலம் என்பது மொழி மட்டுமே என்பதை உணரவேண்டும்.
திரு.மயில்சாமி அவர்களின் கவிதையை ஆயிரம் தமிழ் அறிஞர்களின் கருத்துக்கு இணையாக எடுத்துக் கொள்ளலாம். தமிழில் படித்து இவ்வளவு பெரிய உயரத்தை அடைய முடியுமென்பதற்கு அவர் உதாரணமாக திகழ்கிறார். அதே நேரம் கல்வித் திட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டுவந்து, தரமான கல்வியை அளிக்கவும் அரசு முன்வர வேண்டும்.
இந்த கவிதையை எழுதிய திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கும், அதை வெளியிட்ட ஆனந்த விகடனுக்கும் நன்றிகள்.
Jun 9, 2011
மைசூருக்குள் புகுந்த யானைகள்
மைசூர் நகருக்குள் யானை புகுந்த செய்தியை நேற்று முழுவதும் பல்வேறு கன்னட ஊடகங்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தன. ஏ டி எம் காவலாளி ஒருவரை யானை மிதித்துக் கொன்ற காட்சியை ஒளிபரப்பியது, செய்தி ஊடகங்கள். ஒரு பசு மாடு யானையால் முட்டிக் கொல்லபட்ட காட்சியையும் தொடர்ந்து ஒளிபரப்பியது. யானையை ஒரு கொடூர விலங்கு போல சித்தரித்துக் காட்டியது. யானையால் சேதமடைந்த வாகனங்களையும், பொது மக்கள் ஓடுவதையும், தொடர்ந்து காட்டி யானைகளின் மீது வெறுப்பு ஏற்படும் படி செய்ய தன்னால் ஆன முயற்சிகளை செய்தது. யானை ஊருக்குள் வந்தது செய்தியாக்கப்பட்டதே தவிர, அது ஏன் வந்தது என சொல்லப்படவில்லை.
ஒரு நாள் யானை ஊருக்குள் புகுந்து செய்த நாசங்களை இவ்வளவு தெளிவாக காட்டும் ஊடகங்கள், மனிதர்கள் காட்டிற்குள் சென்று செய்யும் அக்கிரமங்களை காட்டியதில்லை.
மாடுகளின் மேய்ச்சலுக்காக வனங்கள் தீ வைக்கப்படுகின்றன. அவை கட்டுக்கடங்காது பரவி பல சமயங்களில் ஏராளமான வனப் பகுதிகள் தீக்கிரையாகின்றன.
வனப் பகுதிகளில் சாலைகள் போடப்படுகின்றன.
வனப் பகுதிகளில் ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. அவற்றால் பல யானைகள் உயிரிழந்தன.
வாகனங்கள் பயன்படுத்தும் அதிக டெசிபல் ஒலிப்பான்களால் வன விலங்குகள் அச்சமடைந்து வேறு பகுதிக்குள் நுழைகின்றன.
ஞெகிழிக் கழிவுகள் வனங்களில் போடப்பட்டு, அவற்றை உண்டு ஏராளமான உயிர்கள் மடிகின்றன.
வெட்டப்படும் மரங்களால் உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. இன்று வனங்களில் விலங்குகளுக்கு போதுமான தண்ணீர் கூட இல்லாத சூழல் நிலவுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுகின்றன.
இவை எல்லாவற்றையும் என்றைக்காவது, தொடர்ந்து ஆறு மணி நேரம் எந்த ஊடகமாவது செய்தி ஒளிபரப்பியதுண்டா? எல்லா தீமைகளையும் செய்யும் மனிதர்கள் பற்றி எதுவும் சொல்வதில்லை. ஒரு நாள் யானை ஊருக்குள் வந்தால் தாம் தூம் என குதிக்கின்றன ஊடகங்கள்.
Jun 6, 2011
மஹாபாரதம் :திரு. ராஜாஜி
ராஜாஜி எழுதிய "மஹாபாரதம்" வாசித்தேன். குருக்ஷேத்திர போரில் நடந்த யுத்த முறைகள் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு புத்தகம் எழுதப்பட்டு அரை நூற்றாண்டுகளை கடந்த பின்னரும் அதன் சுவாரஸ்யம் குறையாமல் இருப்பது, ஒரு எழுத்தாளரின் மிகச் சிறந்த திறமையின் வெளிப்பாடாகவே இருக்கும்.
மஹாபாரதத்தின் எண்ணற்ற கதாப்பதிரங்களின் வழியாக சொல்லப்படும் கிளைக்கதைகள் யாவும் எளிதில் புரிந்துகொள்ளும் படியாக எழுதப்பட்டிருக்கிறது. பாண்டவர்கள் வனவாசத்தின் கடைசி வருடத்தை வேடமிட்டு, விராட ராஜனிடம் வேலைசெய்து காலம் நகர்த்தும் போது, விராடனின் சேனாதிபதி கீசகன், பாஞ்சாலியை அடைய நினைத்து பின் பீமனால் கொல்லப்பட்டான். இந்த கீசகன் தான் பழனி அருகே இருக்கும் கீரனூரை ஆண்டான் என்பது பற்றி செய்தி இல்லை. தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும்.
சிகண்டி பீஷ்மரின் மேல் தொடுத்த அம்புகள் தொடங்கி இறுதியாக பீமன் துரியோதனனின் தொடையை கிழித்தது வரை எதுவும் யுத்த தர்ம முறைகளின்படி நடக்கவில்லை. கர்ணன் தேர் சக்கரத்தில் மாட்டிக்கொண்ட போது வீழ்த்தப்பட்டான். ஜகத்ரஜன் அர்ச்சுனனால் கொல்லப்பட்ட போது கண்ணன் இருளை உண்டாக்கி ஏமாற்றினான். பூரிசிரவசு கை வெட்டப்பட்டதும், சாத்யகி பூரிசிரவசை கொன்றதும், யுதிஷ்டிரன் துரோணரை கொன்றதும், அதற்காக அசுவத்தாமன் இறந்துவிட்டதாக சொன்ன பொய் யாவும் யுத்த விதிகளுக்கு முரணானதே.
துரியோதனனும் சகுனியும், யுதிஷ்டிரனை அழைத்து பகடையாடி தோற்கடித்து, வனவாசம் அனுப்பி, செய்த அத்தனை துரோகங்களுக்கும் பழி தீர்க்கப்பட்ட யுத்தத்தில், தருமம் தவறுதல் பிழை இல்லையா? அந்த பிழை தான் போரின் வெற்றிக்குப் பிறகும் யுதிஷ்டிரனை நிம்மதி இழக்கச் செய்கிறது. குற்ற உணர்ச்சியற்ற வாழ்க்கையே மேலானது என்பதை தான் மகாபாரதமும் உணர்த்துகிறது என நினைக்கிறேன்.
May 28, 2011
வாரணம் ஆயிரம்; வழி செய்வோம்
யானைகளை அழிவில் இருந்து காப்பாற்ற மத்திய அரசு புதிய முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது. உலகில் யானைகள் அதிகம் வாழும் எட்டு நாடுகளை சேர்ந்த வனத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட மாநாடு டெல்லியில் நடைபெற்றது. ஆசிய மற்றும் ஆப்ரிக்க யானைகள், சுமார் ஐம்பது தேசங்களில் வாழ்கின்றன.
போட்ஸ்வானா, காங்கோ, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, கென்யா, தான்சானியா, மற்றும் தாய்லாந்து நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், யானைகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும், அவற்றை அழிவில் இருந்து காக்கவும் செய்ய வேண்டிய முயற்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இந்த நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மூன்று முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
ஐம்பது சதவீதம் ஆசிய யானைகள் இந்தியாவில் மட்டுமே வாழும் சூழ்நிலையின் அவை சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் ஆராயப்பட்டது. வெவ்வேறு இயற்கை சூழ்நிலையில் வாழும் இந்த யானைகள், சாலை மற்றும் ரயில் திட்டங்களின் காரணமாக நிறைய சிக்கல்களை சந்திக்கின்றன. இதனால் அவற்றின் வசிப்பிடங்கள் பிரச்சனைக்கு உள்ளாகின்றன.
1992 -ல் தொடங்கப்பட்ட யானைகள் செயல்திட்டம் (Project Elephant), யானைகள் வாழும் மாநிலங்களுக்கு, யானைகளின் வாழும் வனப்பகுதியை பாதுகாக்கவும், யானைகளை அழிவில் இருந்து காப்பாற்றவும் நிதி உதவி அளிக்கிறது. தற்போது, புலிகளுக்கு செயல்படும் தேசிய ஆணையத்தை (National Tiger Conservation Authority) போல, யானைகளுக்கும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது (National Elephant Conservation Authority).
உணவுக்காகவும், தண்ணீர் தேவைக்காகவும் யானைகள் வனங்களை விட்டு வெளியேறுவதும் அவற்றை மக்கள் விரட்டுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. யானைகள் தேசிய ஆணையம் இந்த பிரச்சனைக்கு நிச்சயம் தீர்வு காண வேண்டிய அவசியத்தில் உள்ளது. இல்லையேல் "யானைகள் அட்டகாசம்" என்ற செய்தி தொடர்ந்து ஒளிபரப்பாகும். உண்மையில் யார் அட்டகாசம் செய்வது? யானைகளா? இல்லை மனிதர்களா?

- வேட்டைகளை தடுப்பதற்கும், சட்ட விரோதமாக யானையின் உடல் பாகங்களை கடத்தப்படுவதை தடுப்பதற்காகவும் தகவல் பரிமாற்றங்களை இந்த நாடுகள் மேற்கொள்ளும். மனிதர்களுக்கும் யானைகளுக்கும் ஆன சிக்கல்களை களைவதற்காக உள்ளூர் அமைப்புகள் உருவாக்கப்படும்.
- யானைகளின் எண்ணிக்கையை கண்காணிக்க புதிய அறிவியல் முறைகள் பின்பற்றப்படும்.
- தொலைநோக்கு அடிப்படையில், விழிப்புணர்வு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
ஐம்பது சதவீதம் ஆசிய யானைகள் இந்தியாவில் மட்டுமே வாழும் சூழ்நிலையின் அவை சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் ஆராயப்பட்டது. வெவ்வேறு இயற்கை சூழ்நிலையில் வாழும் இந்த யானைகள், சாலை மற்றும் ரயில் திட்டங்களின் காரணமாக நிறைய சிக்கல்களை சந்திக்கின்றன. இதனால் அவற்றின் வசிப்பிடங்கள் பிரச்சனைக்கு உள்ளாகின்றன.
1992 -ல் தொடங்கப்பட்ட யானைகள் செயல்திட்டம் (Project Elephant), யானைகள் வாழும் மாநிலங்களுக்கு, யானைகளின் வாழும் வனப்பகுதியை பாதுகாக்கவும், யானைகளை அழிவில் இருந்து காப்பாற்றவும் நிதி உதவி அளிக்கிறது. தற்போது, புலிகளுக்கு செயல்படும் தேசிய ஆணையத்தை (National Tiger Conservation Authority) போல, யானைகளுக்கும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது (National Elephant Conservation Authority).
உணவுக்காகவும், தண்ணீர் தேவைக்காகவும் யானைகள் வனங்களை விட்டு வெளியேறுவதும் அவற்றை மக்கள் விரட்டுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. யானைகள் தேசிய ஆணையம் இந்த பிரச்சனைக்கு நிச்சயம் தீர்வு காண வேண்டிய அவசியத்தில் உள்ளது. இல்லையேல் "யானைகள் அட்டகாசம்" என்ற செய்தி தொடர்ந்து ஒளிபரப்பாகும். உண்மையில் யார் அட்டகாசம் செய்வது? யானைகளா? இல்லை மனிதர்களா?
May 20, 2011
குறும்படம் : பிடாரன்
திரு.அருண் பிரசாத் சிறப்பாக இயக்கியிருக்கிறார்
May 19, 2011
மிளா (Sambar Deer)
தெற்கு ஆசியாவின் பல்வேறு நாடுகளிலும் பரவி இருக்கும் மான் மிளா. நம்முடைய வனப் பகுதியில் வாழும் மான்களிலேயே அதிக உயரமும் பருமனும் கொண்ட மான்கள் மிளா மான்கள் தான். சுமார் 300 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கின்றன. புள்ளி மான்களை போன்று பெரிய குழுக்காளாக இவை வாழ்வதில்லை.
ஆண் மான்களுக்கு பெரிய கொம்புகளும், பெண் மான்கள் கொம்புகள் இல்லாமலும் இருக்கும். வனப்பகுதிகளில் தண்ணீர் அதிகம் இருக்கும் பகுதிகளில் இவற்றை பார்க்க முடியும். மிளா பெரும்பாலும் ஒரு குட்டி மட்டுமே ஈனுகிறது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இதனை அழியு வாய்ப்புள்ள இனம் என்று அறிவித்துள்ளது. சமயங்களில் வனங்களை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் வந்து விடுவதுண்டு. தமிழ் நாட்டில் மேற்கு பகுதியை ஒட்டிய வனங்களில் இவை வாழ்கின்றன.
கர்நாடகாவின் பெரும்பாலான தேசிய பூங்காக்களில் இவை காணப்படுகின்றன. புலிகள் தன் உணவின் தேவையை பெரிதாக தேர்ந்தடுப்ப்பதால் இவை புலிகளால் வேட்டையாடப்படுகின்றன.புலிகள் இவற்றை மறைந்திருந்தே தாக்குகின்றன. இவற்றின் கொம்புகள் புலியை பதம் பார்த்துவிடக் கூடும். எனவே மற்ற மான்களை துரத்துவது போல இவற்றை துரத்தி தாக்குவதை விடவும் மறைந்திருந்தே கொல்கின்றன.
நாகர்ஹோலே மற்றும் பிலிகிரி ரங்கம் பெட்டா வனப் பகுதிகளில் இவற்றை அதிகம் பார்த்திருக்கிறேன். நீரோடைகளில் காத்திருந்தால் இவை தென்படக் கூடும். ஓடுவதற்கு முன்பு நம்மை நன்கு உற்று பார்த்துவிட்டுத் தான் ஓடத் தொடங்கும்.

May 18, 2011
(திருக்குறள்) Thirukkural about Biodiversity
மார்ச் மாத "பூ உலகு" இதழை வாசித்தபோது, திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள், தன்னுடைய கட்டுரையில் ஒரு திருக்குறளை குறிப்பிட்டிருந்தார்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் இயற்கை சமநிலைக்கு அவசியமானது என்பதை இந்த குறள் வலியுறுத்துகிறது. வள்ளுவர் குறிப்பிட்டிருப்பது பல்லுயிரியம். இந்த உலகம் படைக்கப்பட்டது மனிதர்களுக்கு மட்டுமல்ல. எல்லா உயிர்களுக்கும் இங்கு பங்கு உண்டு.
ஒவ்வொரு உயிரியும் ஒன்றையொன்று சார்ந்தே வாழ்கிறது. எப்படி பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதை இயற்கை எல்லா உயிரினங்களுக்கும் சொல்லி வைத்திருக்கிறது. அதை எல்லா உயிரினங்களும் இயல்பாகவே பின்பற்றுகின்றன. ஒரு புலி தன் உணவின் தேவைகேற்ப தன் எல்லையை நிர்ணயிக்கிறது. தன் எல்லையை விரிவு படுத்தி ஒட்டு மொத்த வனத்தையும் தன் கைக்குள் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. எல்லா உயிர்களும் தனித்தோ, குழுவாகவோ எல்லைகளை தன் உணவு சார்ந்து நிர்ணயிக்கிறது.
மனிதன் தன் எல்லைகளை வளர்த்துக் கொண்டே போகிறான்.வனத்தையும் வன வாழ் உயிர்களையும் துன்புறுத்துகிறான். இதையெல்லாம் வள்ளுவனால் எப்படி முன்கூட்டியே உணர்ந்து உபதேசிக்க முடிந்தது என்பது புரியவில்லை. வள்ளுவன் விஞ்ஞானியோ என்று கூட தோன்றுகிறது.

May 17, 2011
கேளையாடு (Muntjac)
கேளையாடு என்ற சொல்லே இதை ஒரு வகை ஆடு என நினைக்கத் தோன்றும். ஆனால் இது ஒரு வகை மான். தெற்காசியாவின் பெரும்பாலான இடங்களில் பரவி காணப்படும் இவை, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய வனப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை எழுப்பும் ஒலி நாய் குரைப்பதை போன்று உள்ளதால் இது ஆங்கிலத்தில் Barking Deer (Muntjac) என அழைக்கப்படுகிறது. புள்ளி மான்களை போல கூட்டமாக வாழாது. இவை பெரும்பாலும் தனித்தே வாழ்கிறது.
ஆபத்து நேரங்களில் இவற்றின் ஒலி தனித் தன்மையுடன் இருக்கும். அதன் மூலம் மற்ற மான்களுக்கு இது ஆபத்தை உணர்த்தும். பலமுறை வனப் பகுதிகளில் இந்த மானை நேரடியாக பார்த்திருக்கிறேன். நொடியில் ஓடி மறைந்துவிடும். பிறந்து இரண்டு ஆண்டுகளில் இனப்பெருக்கம் செய்யும். ஆண் மான்களுக்கு சிறிய கொம்புகள் உண்டு.வேட்டையின் காரணமாக இவை அச்சுறுத்தலை சந்திக்கின்றன.
சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த மான்கள் வாழ்ந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அளவில் சிறியதாக இருப்பதால் சிறுத்தை புலிகளுக்கு ஏற்ற உணவாக இது இருக்கிறது. அடர்ந்த வனப் பகுதிகளில் இயற்கை சமநிலைக்கு முக்கிய காரணியாக இவை விளங்குகின்றன.
1925-ஆம் ஆண்டு இங்கிலாத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, இவை தற்போது அதிக அளவில் ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளிலும் உலவுகின்றன.

May 14, 2011
காணாமல் போகும் நீர் நாய்கள்
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருந்த நீர் நாய்கள் இன்று அரிதாகிவிட்டன. நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்ட இந்த நீர் நாய்கள் பல்வேறு சீதோசன நிலைகளிலும் வாழக் கூடியது.
சுமார் 10 ஆண்டுகள் வரை வாழும் இவை, பிறந்து இரண்டு ஆண்டு முதல் குட்டி போடத் துவங்கும். பிறந்து இரண்டு மாதம் தொடங்கி நீரில் நீந்துகிறது. பெரும்பாலும் மீன்களையே உண்டு வாழும். இது தவிர தவளை, நண்டு போன்றவற்றையும் உணவாக எடுத்துக் கொள்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு வகையான நீர் நாய்கள் வாழ்கின்றன. குறிப்பாக கடலில் வாழும் நீர் நாய்கள் பசிபிக் பெருங்கடலில் அதிகமாக காணப்படுகின்றன.
நீர் நிலைகளின் தரத்தை அங்கு வாழும் நீர் நாய்களை வைத்து தெரிந்து கொள்ளலாம். நீர் நாய்கள் வாழாத இடம் இயற்கை சுழற்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்திக்கொள்ளலாம்.
அதிகப்படியான மீன் பிடிப்புகளால் இவை பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேலும் இவற்றின் தோல்களுக்காக அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன. 2000 -ல் மட்டும் சுமார் 326 நீர் நாய்களின் தோல்கள் வட இந்தியாவில் கைப்பற்றப்பட்டன. இவற்றை வேட்டைகளில் இருந்து பாதுகாத்தால் நம் ஊரை சுற்றி இருக்கும் குளம், ஏரிகளில் கூட இவை விளையாடுவதைக் காண முடியும். மிகவும் எளிமையாக பாதுகாக்கப்படக் கூடிய உயிரினங்களைக்கூட நாம் இழந்து வருகிறோம்.
May 6, 2011
வெளி மான் (Black Buck)
இன்றைய இந்தியாவில் வாழும் விலங்குகளில் மிகவும் வேகமாக ஓடும் திறன் மிக்கது வெளி மான் (Black Buck). ஆண் மான்கள் கரும்பழுப்பு நிறமாகவும், பெண் மான்கள் செம்பழுப்பு நிறமாகவும் காணப்படும். ஆண் மான்களுக்கு திருகு அமைப்பிலான கொம்புகள் உண்டு.
அடர்ந்த காடுகளை விடவும், ஓரளவு சமவெளிப் பகுதிகளில் தான் இவை தங்களின் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டிருந்தன. இன்று இவற்றின் வாழ்நிலை தீவுகளை போலாகிவிட்டது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வாழும் இவை தமிழ் நாட்டின் சில பகுதிகளிலும் வாழ்கின்றன.
தமிழ் நாட்டில் கோடியக்கரை, சத்தியமங்கலம் மற்றும் வல்ல நாடு ஆகிய வனவிலங்கு சரணலாயங்களில் வாழ்கின்றன. வல்ல நாடு வன விலங்கு சரணாலயம் இந்த மான்களுக்கு என்று உருவாக்கப்பட்டது. "வல்ல நாடு வெளி மான்கள் சரணாலயம்" தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ளது.
சென்ற ஆண்டு, இங்கு நான் நேரடியாக சென்ற போது, அங்கிருந்த வனத் துறை அதிகாரிகளிடம் பேசினேன். தற்சமயம் வெறும் 20 மான்கள் மட்டுமே அங்கு உள்ளதாக சொன்னார். மான்கள் சரணாலயத்தில் இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் மான்கள் இருப்பது மிகவும் வேதனை. இந்த மான்கள் ஒரு சிறிய வனப் பகுதிக்குள் தஞ்சம் அடைந்துள்ளன.
கோடியக்கரைக்கும் வல்ல நாட்டுக்கும் மான்களால் இடம்பெயர முடியாது. இது போன்ற சமயங்களில், குறைந்தபட்சம் அருகில் உள்ள வேறு சில வனப் பகுதிகளுக்கு செல்லும்வகையில் பாதை (Corridor ) அமைக்கப்பட்டால் இவற்றின் எண்ணிக்கை பெருக வாய்ப்புள்ளது.
சிங்கங்கள் அதிகம் வாழும் குஜராத்தின் கிர் காடுகளில் இவை அதிகம் வாழ்கின்றன. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN) இது அச்சுறு நிலையை அண்மித்த இனம் ( Near Threatened) என்று அறிவித்துள்ளது. சல்மான் கானால் வேட்டையாடப்பட்டது இந்த வகை மான்தான்.

May 5, 2011
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் : பகுதி 3
IUCN - International Union for Conservation of Nature - பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம், உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் முறையாக வகைப்படுத்துகிறது.
உலகில் வாழும் உயிரினங்களை மூன்று முக்கிய நிலைகளில் பிரிக்கிறது.
குறைந்த சூழ் இடர் ( At low risk)
இன அச்சுறுத்தல் ( Threatened)
இன அழிவு (Extinction)
"குறைந்த சூழ் இடர்" என்ற நிலையில் உள்ள உயிரினங்கள் மூன்றாக பிரிக்கப்படுகின்றன.
அ. காப்பு சார்ந்த இனம் (Conservation Dependent )
உதாரணம் : சிறுத்தை சுறா. (Leopard Shark) இவை முறையாக பாதுகாக்கப்படாவிட்டால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் அச்சுறுத்தல் பட்டியலில் சேர்ந்து விடும்.
ஆ. அச்சுறு நிலையை அண்மித்த இனம் ( Near Threatened)
உதாரணம் : வேங்கை புலி. (Jaguar) தென் அமெரிக்காவில், அமேசான் காடுகளில் அதிகம் வாழும் இவையும், வேட்டைகளை சந்திப்பதால் சிக்கலில் உள்ளன.
இ. தீவைப்புக் கவலை குறைந்த இனம் (Least Concern )
உதாரணம் : மயில். (Indian Peafowl) அழியும் வாய்ப்புகள் ஏதும் இல்லை. இருப்பினும் ரசாயன, பூச்சி கொல்லி மருந்துகளால் பாதிக்கப்படுவதுண்டு.

Leopard Shark
ஆ. அச்சுறு நிலையை அண்மித்த இனம் ( Near Threatened)
உதாரணம் : வேங்கை புலி. (Jaguar) தென் அமெரிக்காவில், அமேசான் காடுகளில் அதிகம் வாழும் இவையும், வேட்டைகளை சந்திப்பதால் சிக்கலில் உள்ளன.
Jaguar
Gray Parrot
Striped Hyena
இ. தீவைப்புக் கவலை குறைந்த இனம் (Least Concern )
உதாரணம் : மயில். (Indian Peafowl) அழியும் வாய்ப்புகள் ஏதும் இல்லை. இருப்பினும் ரசாயன, பூச்சி கொல்லி மருந்துகளால் பாதிக்கப்படுவதுண்டு.
Peafowl
Read more Articles...
- The Remaining Grasslands of Palani hills
- The Mudflats of Singapore
- The little-known tressures of Kongur Lake
- The Gateway to Paradise
- Reflections from a museum [Zürich, Switzerland]
- Reclamation in Kuthiraiyar
- Palani Hills : Shrinking Heaven
- Painted Beauty
- Melodies of Bombay Shola
- Lunch with a Falcon
- Incidental Lifers
- Glatt : A Swiss River
- Fort Canning Park [Singapore]
Birds of Palani Hills
- Birds of Palani Hills - Page 1
- Birds of Palani Hills - Page 2
- Birds of Palani Hills - Page 3
- Birds of Palani Hills - Page 4
- Birds of Palani Hills - Page 5
- Birds of Palani Hills - Page 6
- Birds of Palani Hills - Page 7
- Birds of Palani Hills - Page 8
- Birds of Palani Hills - Page 9
- Birds of Palani Hills - Page 10
- Birds of Palani Hills - Page 11
- Birds of Palani Hills - Page 12