Dec 30, 2010

பாண்டா கரடிகள் : சீனாவின் சூப்பர் ஸ்டார்

சீனாவில் மட்டுமே காணப்படும் மிகவும் அரிய வகை விலங்கு பாண்டா கரடிகள். அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, தாய்லாந்து, மெக்ஸிகோ மற்றும் பல நாடுகளின் மிருக காட்சிசாலைகளிலும் இவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. சீனாவின் சிச்சுவான், ஷான்சி மற்றும் கன்ஷி வனப்பகுதிகளில் இவை வாழ்கின்றன. உலகின் தற்போது 2000க்கும் குறைவான பாண்டா கரடிகளே உள்ளன. பெரும்பாலும் மூங்கிலை மட்டுமே உண்டு வாழும் இவை தற்போது தட்டுப்பாடான உணவின் காரணமாக நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

Giant Panda - Singapore [River Wonders] - Photographer : Satheesh Muthu Gopal


இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் ஈனும் இந்த பாண்டா கரடிகள் பிறக்கும் போது 15 செ.மீ நீளமும் 200 கிராம் எடை கொண்டதாக மட்டுமே இருக்கும். சுமார் 15 முதல் 20 வருடங்கள் வாழக்கூடியது. பெரும்பாலும் ஒரு குட்டியை மட்டுமே தாயால் பராமரிக்க முடியும். எனவே மிருக காட்சிசாலைகளில் பிறக்கும் குட்டிகள் மனிதர்களால் பராமரிக்கப்பட்டாலும் இவற்றை எளிதில் பாதுகாக்கமுடியாமல் போனது. எனவே அதன் உணவு முறை மற்றும் மரபணு குறித்த ஆராய்ச்சியை பின்பற்றி தற்போது உணவு கொடுக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. பாண்டா கரடிகள் அரிய வகை உயிரினம் மட்டுமின்றி மிகவும் விலை உயர்ந்த உயிரினமாகவும் பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம், இவற்றைப் பராமரிப்பதற்கு ஆகும் அதிகப்படியான செலவுகளே.

சீனாவிடம் இருந்து பாண்டா கரடிகளை வாங்குவதற்காக அமெரிக்கா நிறைய பணம் செலவு செய்கிறது. வருடத்திற்கு சராசரியாக மூன்று மில்லயன் டாலர்களை அமெரிக்க செலவிடுகிறது. ஒரு பாண்டா குட்டியை வாங்குவதற்கு 6,00,000 டாலர்களை அமெரிக்க சீனாவிற்குக் கொடுக்கிறது. இந்த பணம் வனப்பகுதிகளில் வாழும் பாண்டா கரடிகளின் வாழ்கை மேம்பாட்டிற்காக செலவு செய்யப்படுகிறது. அழிந்து வரும் மூங்கில் காடுகள் இவற்றிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. மிருகக்காட்சி சாலைகளில் பராமரிக்கப்படும் பாண்டா கரடிகளின் எண்ணிக்கையில் தற்போது முன்னேற்றம் காணப்பட்டாலும், வனப்பகுதியில் வாழும் பாண்டா கரடிகளின் எண்ணிக்கையில் முன்னேற்றம் ஏற்ப்படவில்லை. United Nations Convention on International Trade in Endangered Species(CITES) மற்றும் U.S Endangered Species Act தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறது.

Giant Panda - Singapore [River Wonders] - Photographer : Satheesh Muthu Gopal

 
இன்று உலகம் முழுவதும் பாண்டா கரடிகளுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாகி விட்டாலும் இவற்றை முறையாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சீனாவின் கையில் மட்டுமே உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் சீனாவின் வனப்பகுதிகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டன. வனப்பரப்பை அதிகப்படுத்தி நிறைய மூங்கில் காடுகளை உற்பத்தி செய்தாகவேண்டியுள்ளது. முதல் முறையாக 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் செயற்கை கருவூட்டல் முறையில் பாண்டா கரடி பிறந்தது (Tai Shan). பாண்டா கரடிகளை வைத்து சீனா பணம் பண்ணும் வித்தை கற்றது பாண்டவிற்குத் தெரியாது போனாலும், அவற்றை அழிவில் இருந்து பாதுகாக்க சீனா முயற்சி எடுத்தால் மகிழ்ச்சியே.


பெயரிடப்பட்ட பொம்மைகள்

பெயரிடப்படாத யானை ஒன்று
செத்துக் கிடந்தது.
தந்தம் உடைந்து
துதிக்கை கிழிந்து
குருதி தெறிக்க
அடங்கிப் போனது மூச்சு.
மேலும் ஒரு யானைக் கூட்டம்.
தொடர்ந்து செல்கிறது,
பெயரிடப்பட்டிருந்த தொடர்வண்டி.
உயிருள்ள யாவும் கொல்லும்
உயிரற்ற இயந்திரத்தில்
உறங்கிப் போயிருந்தன
உயிருள்ள பொம்மைகள்.
தினசரிகளில் வண்ணப் படம்
பார்த்துவிட்டு
மெதுவடை தின்று கொண்டிருந்தன,
மேலும் சில பொம்மைகள்.
--
பா.சதீஸ் முத்து கோபால் satheesh.balu.m@googlemail.comsatheesh.balu.m@googlemail.comThis e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
பெயரிடப்படாத யானை ஒன்று
செத்துக் கிடந்தது.
 
தந்தம் உடைந்து
துதிக்கை கிழிந்து
குருதி தெறிக்க
அடங்கிப் போனது மூச்சு.
 
மேலும் ஒரு யானைக் கூட்டம்.
 
தொடர்ந்து செல்கிறது,
பெயரிடப்பட்டிருந்த தொடர்வண்டி.
உயிருள்ள யாவும் கொல்லும்
உயிரற்ற இயந்திரத்தில்
உறங்கிப் போயிருந்தன
உயிருள்ள பொம்மைகள்.
 
தினசரிகளில் வண்ணப் படம்
பார்த்துவிட்டு
மெதுவடை தின்று கொண்டிருந்தன,
மேலும் சில பொம்மைகள்.Dec 22, 2010

சுமத்திரா புலிகள் - இன்னும் கொஞ்சமே மிச்சம் இருக்கு

இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவுகளில் மட்டுமே காணப்படும் அரிய விலங்கு சுமத்திரா புலிகள். உருவத்தில் மற்ற புலி இனங்களைக் காட்டிலும் அளவில் சிறியதாக இருக்கும். இவற்றின் நிறமும் மற்ற புலி இனங்களைக் காட்டிலும் வேறுபட்டு காணப்படும். ஆண் புலிகளுக்கு பிடரி மயிர் உண்டு. வேகமாக நீந்தும் தன்மை கொண்ட இந்த புலிகள், நீர் வாழ் உயிரினங்களை எளிதில் வேட்டையாடி உண்ணும். இது தவிர காட்டுப் பன்றி, மான் போன்றவற்றையும் வேட்டையாடும்.

sumatran_tiger


பொதுவாக அடர்ந்த மழைக் காடுகளில் இவை வசிக்கும். 12000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்தில் ஏற்பட்ட உயர்வு காரணமாக சுமத்ரா தீவுக்குள் மட்டுமே முடங்கிய புலிகள் பரிணாம வளர்ச்சியில் இன்று தனித்தன்மையோடு உருவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. நானூறுக்கும் குறைவான புலிகளே உள்ளதாகக் கூறப்படும் நிலையில் இவற்றைப் பாதுகாக்க தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 
 
 
வேளான் நிலங்களுக்காக தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதும், புலிகள் தொடந்து வேட்டையாடப்படுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. மிகவும் அருகிவிட்ட (Critically Endangered) இனமாக இந்த புலிகள் International Union for Conservation of Nature ஆல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
 

Dec 4, 2010

"சிதறாத எழுத்துக்கள்" கிடைக்குமிடங்கள்:

சென்னை: நாதம் கீதம் புத்தக நிலையம் மற்று ஜனவரி மாத புத்தக கண்காட்சி ...

பாண்டிச்சேரி: வரும் 18 ஆம்... தேதி தொடங்கும் புத்தக கண்காட்சி 
 
சேலம் : வரும் 18 ஆம் தேதி தொடங்கும் புத்தக கண்காட்சி

கோவை:
விஜயா பதிப்பகம்

பழனி :
சிட்டி லைப் ஸ்டைல்

உடுமலை :
udumalai.com

பெங்களூரு :
மகாபஜார்

இணையம் மூலம் பெற: http://ivansatheesh.blogspot.com/

Dec 2, 2010

மகாத்மா காந்தி கவிதை


காவிகள் செய்யும்
விளம்பர அரசியலில்
காந்தியம் தேடலாமோ?

காந்தியம் தேடுகிற
விழிகளில் யாவும்
கானல் நீர் தானோ?

குற்றங்கள் செய்வதை
மற்றவர் நோக்கினும்
பெருமை கொள்வதெனோ?

குற்ற உணர்ச்சிகள்
அற்று வாழ்வதில்
அக்கறையில்லை ஏனோ?

கண்ணியம் தவறா
அரசியல்வாதிகள் இன்னும்
எத்தனை பேரோ?

பத்து விரலுக்குள்
எண்ணி முடிப்பதே
பாரதம் செய்த கேடோ?

சாதிக்கொரு கட்சியும்
சந்தர்ப்ப அரசியலும்
சாக்கடை நீர் தானோ?

உத்தமர் காந்தியின்
சத்திய சோதனைகள்
பரணில் ஏறத்தானோ?


உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் செய்யுங்கள்.

Nov 3, 2010

யார் மிருகம்?

சுட்டு வீழ்த்தப்பட்ட புலி
சிறகுகளை இழந்து
சிலுவையின் வடிவில் கிடந்தது.

புன்னகையுடன் திரும்பிச் சென்றது
மிருகம்.Oct 31, 2010

தென்றல்


மாநகரம் பெற்றெடுத்த
நெரிசல்மிகு பேருந்துகள்

பேருந்தின் நேரிசலூடே
குழந்தையொன்று அழுகிறது

பெற்றெடுத்த தாயுமவள்
தென்றலைத்தான் தேடுகிறாள்

தென்றலின் திசை அறியா
அவனுமங்கே அமர்ந்திருந்தான்.

அடுக்குமாடி குடியிருப்பின்
அடர்த்தியான இல்லமொன்றில்

மின்சாரம் தடைபட்ட
பகல்பொழுது வேளைகளில்

நரைபழுத்த  கிழமொருவன்
தென்றலைத்தான் தேடுகிறான்

தென்றலின் திசை அறியா
அவனுமங்கே அமர்ந்திருந்தான்.

தன்மகனின் கைபிடித்து
காலாற  நடந்துசென்று

கடற்கரையில் காற்றுவாங்க
எத்தனிக்கும் தந்தையவன்

அனல்காற்றின் ஊடாக
தென்றலைத்தான் தேடுகிறான் 

தென்றலின் திசை அறியா
அவனுமங்கே அமர்ந்திருந்தான்.

நிலாச்சோறு ஊட்டுகையில்
தொழிற்சாலை கரும்புகையில்

நிலவின்முகம் மறையக்கண்டு
அழுதுவடியும் குழந்தையிடம்

பச்சைவயிறு பசியாற்ற
தென்றலைத்தான் தேடுகிறாள்

தென்றலின் திசை அறியா
அவனுமங்கே அமர்ந்திருந்தான்.

மொழியறியா தென்றலிடம்
கவிதை பேசி பயனில்லை.
நேரம்கடத்த  விரும்பவில்லை.

தென்றலை மீட்டெடுக்க
மரக்கன்றை நட்டுவைத்தான்.

அடுத்த தலைமுறைக்காகுமென்று
நீரூற்றி அவன் வளர்த்தான்.

அடர்ந்து வளர்ந்த மரநிழலில்
இளைப்பாறும் நேரமதில்
விரலிடுக்கின் வேர்வைகூட
துடைதேடுக்கும்,
அவன் வளர்த்த அன்பு மரம்.

நல்ல விலை போகுமென்று
அவன் மகனே வெட்டிவிட்டான்.

மிச்சமிருந்த பணத்திலொரு
பனையோலை வாங்கித்  தந்தான்.

பனையோலை படபடக்க
மணிக்கட்டு வலித்தபடி
தென்றலைத்தான் தேடுகிறான்... 

தென்றலின் திசை அறியா
அவனுமங்கே அமர்ந்திருந்தான்.