கரடிகள் வாழுமிடம் இந்தியா


பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கமும் பன்னாட்டு கரடிகள் அமைப்பும் இணைந்து நடத்தும் மாநாடு 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் நடக்கிறது. இதற்கான ஒப்புதலை மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வன அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


கரடிகளை அழிவில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் இந்த மாநாட்டில் எடுக்கப்படும். உலகில் வாழும் எட்டு வகையான கரடிகளில் இந்தியாவில் மட்டுமே நான்கு வகை கரடிகள் வாழ்கின்றன. அப்படியானால் இந்தியாவின் நிலப்பரப்பு எவ்வளவு அற்புதமானது..!!
இந்திய முழுவதும் பரவி இருக்கும் கரடிகள் சமீப ஆண்டுகாலக சந்திக்கும் பிரச்சனைகள் :

அதனுடைய அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது
உணவு பற்றாக்குறை
அவற்றில் உடல் பாகங்களை சட்ட விரோதமாக வணிகம் செய்வது
மனிதர்கள் மற்றும் கரடிகள் இடையேயான வாழ்வாதார முரண்பாடுகள் போன்றவைதான்.உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் முந்நூறுக்கும் மேற்பட்டு கரடிகளின் வாழ்வாதார பிரச்சனைகளை ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். கரடிகளின் உடல் பாகங்களை முறைகேடாக சந்தையில் விற்கப்படுவதை தடை செய்யவும் கண்காணிக்கவும் இந்த மாநாட்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மனிதர்களுக்கு கரடிகளுக்கும் இடையே எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
 
 

Post a Comment

0 Comments