விஞ்ஞானியின் கவிதைசென்ற வார ஆனந்த விகடனில் திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கவிதை ஒன்றினை வாசிக்க நேர்ந்தது.

அந்த கவிதை:நவீன இந்தியாவின் விஞ்ஞானிகளில் முக்கியமான ஒருவர், தாய் மொழிவழிக் கல்வி பற்றி எழுதியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ் வழி கல்வி என்பதை நம் மக்கள் அவமானதாக கருதும் இன்றைய சூழலில், கோவையில் நடந்த சம்பவத்தை அடுத்து, சரியான நேரத்தில், இந்த கவிதை எழுதியிருக்கிறார். "நாங்க தான் தமிழ்ல படிச்சோம் எங்க பிள்ளைகளாவது இங்கிலீஷ் மீடியத்துல படிக்கட்டுமே" என்பது தான் பலரது வாதமாக இருக்கிறது.

ஆங்கில வழி கல்வி என்றாலே மேலானது என்ற தவறான  மனோபாவம் நம் சமூகத்தில் விரவிக் கிடக்கிறது. எந்த மொழியில் நம் மூளை சிந்திக்குமோ அந்த மொழியில் படிப்பதே சிறந்தது. தமிழ் வழி கல்வியில் பயின்றால் ஆங்கிலம் பேச முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமும் நம் மக்களிடையே உண்டு. ஆங்கிலம் என்பது மொழி மட்டுமே என்பதை உணரவேண்டும்.

திரு.மயில்சாமி அவர்களின் கவிதையை ஆயிரம் தமிழ் அறிஞர்களின் கருத்துக்கு இணையாக எடுத்துக் கொள்ளலாம். தமிழில் படித்து இவ்வளவு பெரிய உயரத்தை அடைய முடியுமென்பதற்கு அவர் உதாரணமாக திகழ்கிறார். அதே நேரம் கல்வித் திட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டுவந்து, தரமான கல்வியை அளிக்கவும் அரசு முன்வர வேண்டும்.

இந்த கவிதையை எழுதிய திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கும், அதை வெளியிட்ட ஆனந்த விகடனுக்கும் நன்றிகள்.Post a Comment

2 Comments

  1. நீர் சொல்லுவதேலம் உண்மைதான், ஆனால் மக்கள் எப்போதுதான் உணருவர்களோ இந்த உண்மையை ...

    இவன்,
    கைராக்.

    ReplyDelete
  2. மயில்சாமி அண்ணாத்துரையைப் பற்றி கவிதை எழுதும்படி எனக்கு ஆணை பிறபிக்கப்பட்டது . அவரைப் பற்றி என்ன எழுதுவது எனறு யோசித்துக் கொண்டிருந்தேன் . தங்களுடைய தகவல் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது . மிக்க நன்றி

    ReplyDelete