தெற்காசிய ஆவுளியா

ஆவுளியாஇந்தியா, இலங்கை, வங்க தேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கடல் பகுதிகளில் காணப்படும் ஆவுளியாக்களை அழிவில் இருந்து காப்பாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த நான்கு நாடுகளும் கலந்து கொண்ட தெற்காசியாவின் ஆவுளியாக்களை காப்பாற்றும் வழிமுறைகள் குறித்த பயிலரங்கம் தூத்துக்குடியில் நடைபெற்றது.


இந்திய துணை கண்டத்தின், கட்ச் வளைகுடா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி ஆகிய பகுதிகளில் அதிகம் வாழ்கின்றன ஆவுளியாக்கள். வேட்டையாடுதல், இயந்திரங்களை கொண்டு மீன் பிடித்தல், பவளப் பாறைகளை அழித்தல் மற்றும் கடற்கரை புல் வெளிப் பகுதிகளை அழிக்கப்படுதல் போன்றவற்றின் காரணமாக இவை அதிக அழவில் உயிரிழக்க நேரிடுகிறது. வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி இவற்றை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், IUCN அறிவிப்புப்படி அருகி வரும் உயிரினமாகவே இது கருதப்படுகிறது.


முதல் முறையாக இந்தியா தொடங்கி வைத்திருக்கும் இந்த மாநாடு,ஆவுளியாக்களை பாதுகாப்பற்கான ஒத்துழைப்பை தெற்காசிய நாடுகள் இணைந்து செயல்பட வழி வகுத்துள்ளது.

Post a Comment

4 Comments

 1. இந்த உயிரினத்தின் தமிழ் பெயர் ஆவுளியா. கடல் பசு என்பது ஆங்கில பெயரான Sea cow வின் தமிழ் மொழிபெயர்ப்பு. Theodore Baskaran

  ReplyDelete
 2. மதிப்பிற்குரிய திரு.தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு,

  தவறை திருத்தியமைக்கு மிக்க நன்றி. கடல் பசுக்கள் என எழுதியிருந்த இடங்களில் ஆவுளியா என மாற்றி இருக்கிறேன்.

  ReplyDelete
 3. மிக்க நன்றி. காட்டுயிர் பேணலின் முதல் படி அதன் தமிழ்ப்பெயரை பயன்படுத்துவதான் என்று நான் நினைக்கின்றேன். பாஸ்கரன்.

  ReplyDelete