மரகதப் புறா : Emerald Dove

தமிழ் நாட்டின் மாநிலப் பறவையான மரகதப் புறாவை சென்ற வாரம் பழனி மலை பகுதியில் பயணம் செய்த போது அதிகமாக பார்க்க முடிந்தது. பாச்சலூர் அருகே உள்ள வனப்பகுதியில் இவை அதிகம் காணப்படுகின்றன. தரையில் இருந்து சுமார் 1200 மீ உயரத்திற்கு மேலுள்ள பகுதிகளில் இவற்றை பார்க்க முடிந்தது. பசுமை மாறா மழைக் காடுகளில் வாழும் இவை தெற்காசிய முழுவதும் பரவி உள்ளன. பெரும்பாலும் பழங்கள், விதைகளை உண்டு வாழ்கின்றன.

அதிகம் வெளியே தென்படாமல் மறைந்து வாழ்கின்றன. இதற்கு முன் இந்த பறவையை வேறு எந்த வனப் பகுதியிலும் நான் பார்த்ததில்லை. எளிதில் கண்களுக்கு புலப்படாத இந்த பறவையை படம் எடுக்க முயற்சித்து முடியாமல் போனது.

ஐரோப்பாவில் இந்த பறவை கூண்டில் வைத்து வளர்க்கப்படுகிறது.
Post a Comment

2 Comments

  1. அழகான பதிவு! பயனுள்ள பதிவு! கண்கவரும் வலைப்பூ! மரகதப் புறாவின் நல்ல படம் ஒன்றை நான் வெகு நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. தற்போதுதான் புற வகைகளில் இது போன்ற புறா உள்ளதை கேள்விபடுகிறேன். பாதுகாக்க படவேண்டிய ஒன்று

    ReplyDelete