Aug 8, 2011

Sprint of the Blackbuck: Edited by Mr.S.Theodre Baskaran


 

Blackbuck என்ற காட்டுயிர் இதழில் வெளியான கட்டுரைகளை தொகுத்திருக்கிறார் திரு.தியடோர் பாஸ்கரன். பல்வேறு வன ஆர்வலர்களாலும் பல்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட இந்த புத்தகம் தென்னிந்திய காடுகள் பற்றிய அரிய தகவல்களை தருகிறது, Sprint of the BlackBuck.
பல்வேறு விலங்கினங்கள், பறவைகள், இரு வாழ்விகள், ஊர்வன மற்றும் பூச்சிகள் பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.


மேலும் எல்லா உயிரினங்களின் உயிரியல் (Binomial Name) பெயரோடும் எழுதப்பட்டுள்ளது. காடுகளில் மட்டும் அல்லாது நம்மை சுற்றியே வாழும் எண்ணற்ற உயிரினங்களை பற்றிய புரிதலையும் உருவாக்குகிறது. உயிரினங்களின் கணக்கெடுப்பின் போது ஏற்பட்ட அனுபவங்கள், உயிரினங்களை மீட்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள், வனப் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் பல்வேறு தளங்களில் எழுதப்பட்டுள்ளது.


1950 களில் இந்தியா காடுகளில் வாழ்ந்த சிவிங்கப்புலிகள் (இன்று முடிலும் அழிந்து விட்டது) வெளிமான்களை வேட்டையாடப் பழக்கப்படுத்தப்பட்ட செய்திகள் ஆச்சர்யத்தை அளிக்கிறது. பண்ணைகளில் இருந்த முதலைகளை ஆற்றில் விடப்பட்ட அனுபவங்கள், ஓசூர் அருகே சிறுத்தை புலி ஊருக்குள் புகுந்தபோது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என பல்வேறு தளங்களில் பயணிக்கிறது இந்த நூல்.




No comments:

Post a Comment