சிறகடிக்கட்டும் சிட்டுக்குருவிகள்


சிட்டுக் குருவிகளின் மறுமலர்ச்சிக்கான செயல்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக மேலும் சில பணிகளை செய்ய வேண்டியுள்ளது. • பழனி, ஒட்டன்சத்திரம், பூம்பாறை மற்றும் கொடைக்கானல் நகரங்களில் சிட்டுக் குருவிகள் அதிகம் உள்ள இடங்கள் பதிவு செய்யப்படும்.

 • மேலும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை பொருத்து, மற்ற மாவட்டங்களிலும் இந்த வழிமுறைகள் பின்பற்றப்படும்.

 • புவியிடங்காட்டி (Global Positioning System : GPS) மூலம் இந்த இடங்கள் பதிவு செய்யப்படும்.

 • மேலும் சில கூடு பெட்டிகள் வழங்கப்படும். பெற முடியாதவர்கள் மண் கலயங்களை பயன்படுத்தலாம்.

 • ஒவ்வொரு இடத்தில் பொருத்தப்படும் கூடு பேட்டிகள் மற்றும் மண் கலயங்களுக்கு ஒரு "எண்" வழங்கப்படும்.

 • கூடு பேட்டிகள் மற்றும் மண் கலயங்கள் பொருத்தப்படும் வீட்டின் உரிமையாளர்களிடம் தொடர்ந்து தானியங்கள் வைக்கவும் தண்ணீர் வைக்கவும் வலியுறுத்தப்படும்.

 • சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை கண்காணித்து பதிவு செய்வதற்காக "பதிவுத் தாள்" (Data Sheet) வழங்கப்படும்.

 • வாரம் ஒரு முறை தன்னார்வலர்கள், கூடு பெட்டிகள் மற்றும் மண் கலயங்கள் பொருத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று பதிவு செய்ய வேண்டும்.  

 • மாதம் ஒரு முறை இதற்கான கலந்தாய்வு நடைபெறும்.  

 • இந்த தொடர் நடவடிக்கைகள் மூலம் அவற்றின் எண்ணிக்கை பெருகுவது கண்காணிக்கப்படும்.

மேலும் இதை நடைமுறைபடுத்த தன்னர்வலர்களும் தேவைப்படுகிறார்கள்.


உங்கள் ஊரில் இருந்தபடியே, உங்கள் வீட்டில் இருந்தபடியே இதை செய்ய முடியும். தேவை உங்கள் பங்களிப்பு மட்டுமே.

தொடர்புக்கு: +91-9742128975
satheesh.balu.m@gmail.com

Post a Comment

4 Comments

 1. நான் கொல்கத்தாவில் வசிக்கும் தமிழ் பெண்.இந்த சிட்டுக்குருவிகள் மேல் எனக்கும் அலாதி பிரியம்.தமிழ் நாட்டில் காண முடியாத குருவிகளை இங்கு அதிகம் பார்க்கிறேன்.அவை இங்கு அதிகம் இருப்பதர்க்கு இங்கு உள்ள மரங்கள் தான் காரணம் என்பது என் கருத்து. ஆகவே மரங்களை நிறைய வளர்த்தால் குருவிகள் இனமும் வளரும்.

  ReplyDelete
 2. கொல்கத்தாவில் சிட்டுக் குருவிகள் அதிகம் இருப்பது மகிழ்ச்சி. மரங்கள் வளர்க்கப்பட வேண்டும் என்பதும் 100% சரி. அதே நேரம் தொடர்ந்து குருவிகளுக்கு உணவளியுங்கள்.

  ReplyDelete
 3. எங்கள் வீட்டு ஜன்னல் ஓரம் காக்கைகளூக்கு என்று தனியாகவும் குருவிகளுக்கென்று தனியாகவும் உணவு வைப்பேன். காக்கைகள் வந்து சென்ற பின் குருவிகள் வரும்.

  ReplyDelete
 4. மிக்க மகிழ்ச்சி.... தொடர்ந்து செய்யுங்கள்

  ReplyDelete