தேவதைகளின் தேவதை: திரு.தபூ சங்கர்



என்னுடைய கல்லூரி நாட்களில் அதிகம் பேசப்பட்ட புத்தகம் "தேவதைகளின் தேவதை". இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு குறுங்கதையும் கவிதையும் என் நண்பர்களால் விமர்சனம் செய்யப்படும். இன்றும் பலராலும் இது பேசப்படுகிறது. அது தானே ஒரு எழுத்தாளனின் வெற்றியாகவும் இருக்க முடியும். காதல் வழிந்தோடும் தபூ சங்கரின் இந்த புத்தகம் எப்போது படித்தாலும் முக்கனியில் பால் ஊற்றி தேன் பிழிந்தார் போலத் தான்.

ஒரு சில கவிதைகள்:

கண்ணாடித் தொட்டியில்
நான் வளர்க்கும் மீன்கள்
உன் மீது புகார் வாசிக்கின்றன
'அந்த ரெண்டு மீன்களுக்கு மட்டும்
ஏன் அவ்வளவு அழகான தொட்டி?' என்று.


உனக்கு வாங்கி வந்த
நகையை பார்த்து
'அய்...எனக்கா இந்த நகை'
என்று கத்தினாய்.
நகையோ
'அய் எனக்கா இந்த சிலை'
என்று கத்தியது.


அன்று
நீ குடை
விரித்ததற்காகக்
கோபித்துக் கொண்டு
நின்றுவிட்ட
மழையைப் பார்த்தவனாகையால்
இன்று
சற்றெண்டு மழை நின்றால்
நீ
எங்கோ குடை
விரிப்பதாகவே
நினைத்துக்கொள்கிறேன்

Post a Comment

0 Comments