யாருக்கானது பூமி ? (2015)
கர்நாடக வனப்பகுதிகளை உள்ளடக்கிய விரிவான கட்டுரைத் தொகுப்பு. பறவைகளை மையப்படுத்திய கட்டுரைகள் பழனிமலைத் தொடர், சென்னை, ஐரோப்பா என விரிகிறது.
தூவி (2022)
“பறவைகளின் உயிர்சூழல்” நூலில் இடம்பெறாத 62 பறவையினங்களைப் பற்றிய கவிதை தொகுப்பு. பறவையினங்களின் வாழ்வியல் முறை, வாழிடச் சிக்கல் ஆகியவற்றை கவிதை வடிவில் பேசுகிற நூல்.
பல்லுயிர்களுக்கானது பூமி (2023)
இயற்கை வரலாறு, பழனிமலைத் தொடரின் சூழலியல் பிரச்சனைகள், நதிநீர் இணைப்பு, ஒலி மாசு, பருவநிலை பிறழ்வு என விரிவாக பேசும் நூல், சிங்கப்பூரின் இயற்கை வளத்தையும் விவரிக்கிறது.
பறவைகளின் உயிர்ச்சூழல் (2024)
நண்பர்கள் கொடுத்த உற்சாகமும், சூழலியலார்கள் கொடுத்த நம்பிக்கையும் தொடர்ந்து பறவைகளை கவிதைகளாக்கும் முயற்சிக்கு வழிவகுத்தது. அதுவே "பறவைகளின் உயிர்ச்சூழல்" எனும் நூலாக உருவெடுத்துள்ளது. "தூவி" நூலில் அறுபத்தி இரண்டு பறவையினங்கள் பற்றி கவிதைகள் எழுதியிருந்தேன். அது போலவே இந்த நூலிலும், "தூவி" நூலில் இடம்பெறாத வேறு அறுபத்து இரண்டு பறவையினங்கள் பற்றி கவிதைகள் எழுதியிருக்கிறேன். எனவே "தூவி" நூலை வாசித்தவர்களுக்கும், வாசிக்காதவர்களுக்கும் "பறவைகளின் உயிர்ச்சூழல்" நல்ல அனுபவத்தை தரும் என நம்புகிறேன்.
எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் நான் அதிகம் விரும்பும் எழுத்தாளர். யானையின் பிரம்மாண்டத்தை விடவும் எறும்பை வியந்து எழுதுபவர். திரு.தியடோர் பாஸ்கரன் நான் விரும்பும் சூழலியல் எழுத்தாளர். சுற்றுச்சூழல் என்பது தனக்கு முற்றிலும் தொடர்பில்லாதது என்று நினைப்பவர்களின் மனதில், நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் சூழலை சார்ந்தே உள்ளது என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். Save Palani Hills என்ற அமைப்பை தொடங்கி நண்பர்களில் ஒத்துழைப்புடன் பழனி மலைகள் பாதுகாப்பிற்காக முயற்சிகள் செய்து வருகிறேன். அமைதியான வனம் ஒன்றில், ஒரு புலியின் உறுமல் எப்படி அதிர்வை ஏற்படுத்துமோ, அதே போன்றதொரு அதிர்வை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தும் முனைப்பில் நான் எழுத்துக்களை கோர்த்துக்கொண்டிருக்கிறேன்.