அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்
Dec 1, 2013
Sep 29, 2013
செங்கால் நாரை (White Stork)
1700 ஆண்டுகளுக்கு முன்பு சத்திமுற்றப் புலவர் பாடிய செங்கால் நாரையை முதன் முதலாக சுவிட்சர்லாந்தில் பார்த்தேன்.
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே....
பறவைகள் என்னை பேச வைக்கின்றன.
பறவைகள் என்னை எழுத வைக்கின்றன.பறவைகள் என்னை பறக்க வைக்கின்றன......................
Sep 23, 2013
நியாயமாரே............
ஆன்மிகம் என்றால் என்ன என்ற புரிதல் இல்லாத போது சமூகம் நிறைய இழப்புகளை
சந்திக்கிறது. குறிப்பாக சுற்றுச்சூழல். ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களால்
கொண்டாடப்படும் விநாயகர் சதூர்த்தி என்ற விழா காரணமாக நம்முடைய நீர்
நிலைகள் பெருமளவில் மாசுபடுகின்றன.
நான் இந்த விழாவுக்கு எதிரானவனோ அல்லது இந்த மதத்துக்கு எதிரானவனோ அல்ல. குளங்களிலும் ஏரிகளிலும் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் முன்பு கரைக்கப்பட்டன. பிறகு ரசாயன கலவைகளால் செய்யப்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. அது நீரில் கரைந்து நீரை மாசுபடுத்தியது. இப்போது குளங்களிலும் ஏரிகளிலும் தண்ணீர் இல்லாத நிலையை நாம் உருவாக்கிவிட்டோம். இப்போது இந்த சிலைகள் கரைக்கப்படுவதில்லை. கொட்டப்படுகிறது.
இதை கடவுள் ஏற்றுக் கொள்வாரா? எதற்காக இதை செய்கிறோம் என இதை செய்பவர்கள் அறிவார்களா? நம் அடுத்த தலைமுறை நீர் இல்லாமல் தவிக்கப்போகிறது என்ற கவலையாவது உண்டா? பழனியில் இந்த ஆண்டு கொட்டப்பட்ட சிலைகளை கரைக்க வழியில்லாமல் போனதால் விவேகானந்தா சேவா டிரஸ்ட் அமைப்பு கொட்டப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தி குளத்தை சுத்தப்படுத்தியுள்ளது.
கடவுளை உண்மையாக நம்புகிறவன் கடவுள் படைத்த உலகை காப்பற்ற உழைப்பான். கெடுக்க மாட்டான்.
http://vivekananthasevatrust.blogspot.ch/2013/09/normal-0-false-false-false-en-us-x-none.html?utm_source=dlvr.it&utm_medium=facebook

Sep 5, 2013
Aug 10, 2013
Jun 29, 2013
இன்று உத்தரகாண்ட். நாளை கொடைக்கானல் ?
பழனி மலைத் தொடர்ச்சி
என்பது பலருக்கும் தெரியாத பெயர். மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 2000
சதுர.கி.மீ பரப்பளவு கொண்ட கிழக்கு நோக்கி நீண்ட இந்த பகுதி, பழனி மலைத்
தொடர்ச்சி. கொடைக்கானல் நகரம் அமைந்திருப்பது இந்த மலைப் பகுதியில் தான்.
நம் அடிப்படை தேவையான நீரை வழங்குவதில் இந்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி
மிக முக்கியமானது.
ஆனால் இந்த பகுதியை மக்கள் சுற்றுலா தளமாக மட்டுமே பார்ப்பது கொடுமையானது. அதிகரித்து வரும் போக்குவரத்து, புதிய சாலைகள் இந்த மலை பகுதியை பாதிக்கிறது. மேலும் புதிய புதிய தங்கும் விடுதிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசாங்கம் முன்பே விழித்துக்கொண்டு நீலகிரி மற்றும் பழனி மலை தொடர்ச்சியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து கண்காணிக்க வேண்டும். இயற்கையை அழித்து எந்த வளர்ச்சியையும் நம்மால் எட்ட முடியாது.

Jun 7, 2013
May 12, 2013
Apr 29, 2013
Apr 7, 2013
பாம்பு என்றால்? : திரு.முகமது அலி
பாம்புகளை பற்றிய ஒரு அறிவியல் நூல் இது. பாம்புகள் உருவான விதம் அவற்றின் வாழ்க்கை முறை, பல்வேறு வகையான பாம்புகள் மற்றும்அவற்றை பற்றிய அறிய தகவல்களை தருகிறது இந்த நூல். பாம்புகள் பற்றி நம் சமூகத்தில் மண்டிக்கிடக்கும் மூட நம்பிக்கைகளை கடுமையாக சாடுகிறது இந்த நூல். நம் சமூகத்தின் மூட நம்பிக்கைகளில் முதல் இடத்தில் இருப்பதே இந்த பாம்புகள் தான். பாம்புகள் பற்றிய எண்ணற்ற கட்டுக்கதைகளுக்கு மத்தியில் இந்த அறிவியல் நூல் வந்திருக்கிறது. திரைப்படங்கள், தொலைக்காட்சி, நாளிதழ்கள் என எங்கு பார்த்தாலும் பாம்புகள் பற்றிய அறிவியல் பூர்வமான செய்திகள் புறந்தள்ளப்படுகின்றன. பாம்பு என்றாலே மக்கள் பயப்படவும் அது ஆபத்தானது என்பதும் மக்கள் மனதில் நிலைத்து நின்று விட்டன.
அடிப்படையில் பாம்புகள் சுற்றுச் சூழலை சம நிலையில் வைப்பதில் பெரும் பங்கு வகிக்ன்றன என்பதை அழுத்தமாக பதிய வைக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் திரு.முகமது அலி அவர்கள். பல்லிகளில் இருந்து பாம்புகள் பரிணாம வளர்ச்சியில் உருவாயின. இன்று உலகில் சுமார் 3000 வகையான பாம்புகள் வாழ்கின்றன. பாம்புகளை அவற்றின் குடும்பங்களின் அடிப்படையில் விளக்கி இருக்கிறார் ஆசிரியர். மேலும் இந்தியாவில் வாழும் சில முக்கியமான பாம்புகளை பற்றியும் அவற்றின் நச்சுத் தன்மை பற்றியும் விளக்கியுள்ள செய்திகள் நிச்சயம் அனைவராலும் அறியப் படவேண்டியது.
கருநாகம் அல்லது ராஜ நாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், சுருட்டை விரியன், கடல் பாம்பு, பச்சைபாம்பு, மலைப்பாம்பு, கொம்பேறி மூக்கன், சாரைப்பாம்பு, மன்னுளிப்பாம்பு, சிறுபாம்பு, தண்ணீர் பாம்பு போன்ற பாம்புகளை பற்றிய குறிப்புகளை நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் காணப்படும் சுமார் 270 வகையான பாம்புகளில் 4 இனப் பாம்புகள் மட்டுமே நஞ்சுள்ளவை என்பது முக்கியமான செய்தி. பரவலாக வாழும் சாரைப்பம்புகள் நஞ்சற்றவை. ஆனால் நம் சூழலில் இருக்கும் மூட நம்பிக்கைகள் காரணமாக அடித்துக் கொல்லப்படுகின்றன.
பாம்புகளை பற்றி எத்தனயோ சினிமாக்கள் வந்து விட்டன. இவற்றில் எதுவுமே பாம்புகளை பற்றி அறிவியல் பூர்வமாக இல்லை மக்கள் ஏற்கனவே பாம்புகள் மீது வைத்திருக்கும் மூட நம்பிக்கை மற்றும் பயத்தை வளர்ப்பதே இந்த சினிமாக்களின் வேலை. இப்படி பாம்புகள் பற்றி மூட நம்பிக்கையை புகுத்தும் சினிமாக்கள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார் ஆசிரியர்.
பாம்பு கடித்தால் எப்படி முதலுதவி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியமான செய்தி. மேலும் சில கூடுதலான தகவல்களை கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பாம்புகளுடைய உடல் அமைப்பு மற்றும் அவை வேலை செய்யும் விதம் போன்ற தகவல்கள் பாம்புகள் மீதான புதிய பார்வையை நமக்கு ஏற்படுத்துகிறது. பாம்புகள் பொதுவாக தன் எல்லையை தீர்மானிப்பதற்காக சண்டையிட்டுக் கொள்கின்றன. ஆனால் இதை பாம்புகளின் காதல், புணையல் என்று இந்த சமூகம் நம்புகிறது.
பாம்புகளை பற்றிய ஏராளமான துணுக்குகளையும் தகவலையும் உள்ளடக்கிய இந்த புத்தகம் நிச்சயம் எல்லோராலும் வாசிக்கப்பட வேண்டும்.
பாம்புகள் பற்றிய மூட நம்பிக்கைகள் ஏராளம். அவற்றை எல்லாம் தோலுரித்துக்காட்டியுள்ளார் திரு.முகமது அலி அவர்கள். கூடவே பாம்புகள் தோலுரிப்பது பற்றியும்..!!
இந்த நூலை வாங்க விரும்புகிறவர்களுக்கு : http://www.panuval.com/index.php?route=product/product&filter_name=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D&product_id=1592
Apr 6, 2013
Mar 31, 2013
சென்னையில் ஒரு நாள்
சென்னை என்றதும் எல்லோருக்கும் ஏதெனும் ஒரு ஞாபகம் வரும். ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் "பறவைகள்". சென்னையில் மட்டும் சுமார் 200 வகையான பறவைகளை பார்க்க முடியும். இவற்றில் இங்கேயே வாழும் பறவைகள் மட்டும் அல்லாது வலசை வரும் பறவைகளும் அதிகம். இதற்கு முக்கிய காரணம் இங்குள்ள பல்வேறு வகையான நீர் நிலைகள்.
கடற்கரை, கழிமுகங்கள், ஏரிகள், ஆறுகள், காடுகள் (நன்மங்கலம், கிண்டி), அலையாத்திக் காடுகள், குளங்கள், சதுப்பு நிலக் காடுகள் போன்றவற்றை நம்பி எண்ணற்ற பறவைகள் வருகின்றன. ஆண்டு தோறும் குளிர் காலங்களில் வரும் பறவைகளை சென்னையில் எளிதாக பார்க்க முடியும். ஆனால் சுற்றுச் சூழல் சீர்கேடு காரணமாக இந்த நீர் நிலைகள் யாவும் சீரழிந்து வருகின்றன.
சென்னையில் உள்ள பறவைகளை பற்றி மெலும் தெரிந்து கொள்ள :
http://en.wikipedia.org/wiki/Birding_in_Chennai
சென்னையில் ஒரு நாள் முழுதும் செலவு செய்தாலும் எல்லா இடங்களையும் பார்த்து விட முடியாது. எல்லா பறவைகளயும் பார்து விட முடியாது. சினிமாவுக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை, சென்னை மக்கள் தங்களுடைய நீர் நிலைகளை பாதுகாப்பதிலும் செலுத்த வேண்டும்.
Feb 10, 2013
ஞெகிழிப் பைகள் (Plastic Bags)
நாம் எவ்வளவு பெரிய முட்டாள்கள் என்பதற்கு மிகச்
சிறந்த உதாரணம் ஞெகிழிப் பைகள். தமிழ் நாட்டில் எந்த ஊருக்கு சென்றாலும்
மக்கள் சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி பிளாஸ்டிக் பைகளை
பயன்படுத்துகிறார்கள். பால் வாங்கச் சென்றால் கூட பிளாஸ்டிக் பைகளில் தான்
வாங்கி வருகிறார்கள்.
ஒவ்வொரு தெருவிலும் குப்பை மேடுகள் வளர்ந்து வருகின்றன. அந்த குப்பைகளில் பெரும்பாலும் இருப்பது மக்காத பிளாஸ்டிக் குப்பைகளே. வீட்டில் இருந்து பணம் எடுத்துச் செல்லும் எவரும் பைகளை எடுத்துச் செல்வதில்லை. தன் அடுத்த தலைமுறை பற்றிய சிறிதும் அக்கறை இல்லாத சுயநல சோம்பேறிகலாக மாறிப்போய்விட்டது நம் சமூகம்.
நம் நீர் நிலைகள் முற்றிலும் நாசமாகிவருகிறது. ஒவ்வொரு நாளும் எத்தனை ப்ளாஸ்டிக் பைகளை நாம் கடைகளில் இருந்து பெறுகிறோம்? வீட்டில் இருக்கும் கூடைகளையோ பைகளையோ பயன்படுத்தினால் எத்தனை ப்ளாஸ்டிக் பைகளை நம்மால் தவிர்க்க முடியும்? தயவுசெய்து ப்ளாஸ்டிக் பைகளை தவிர்த்திடுங்கள். என்னை சந்திக்க வருகிறவர்கள் ப்ளாஸ்டிக் பைகளில் ஏதேனும் வாங்கி வந்தால் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
சில நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சொல்லி யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. சென்ற ஆண்டு என்னுடைய பிறந்த நாளுக்கு என் தந்தை ப்ளாஸ்டிக் பையில் கேக் வாங்கி வந்தார். நான் அதை பெற்றுக் கொள்ள மறுத்தேன். என் தந்தையை புண்படுத்த வேண்டும் என்பது என் விருப்பமல்ல. ஆனால் நம் அடுத்த தலைமுறை இந்த பூமியில் நிம்மதியாக வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்.

Feb 9, 2013
நன்றி : "புதிய தலைமுறை"
பழனி மலைத் தொடர்ச்சியை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எங்கள்
அமைப்பின் செயல்பாடுகள் குறித்து செய்தி வெளியிட்ட "புதிய தலைமுறை"
இதழுக்கு நன்றி.
கொங்கூர் குளம் பற்றிய கூடுதல் செய்தி வெளியிட்டதற்கும் நன்றி..!!
Wildlife Conservation Group of Palani Hills
கொங்கூர் குளம் பற்றிய கூடுதல் செய்தி வெளியிட்டதற்கும் நன்றி..!!
Wildlife Conservation Group of Palani Hills
Jan 6, 2013
கொம்பனை ஏன் கொன்றார்கள்?
தமிழ் சினிமா முதல் முறையாக யானையை
யானையாக காட்டியிருக்கிறது. ஆனால் யானையின் பிரச்சனைகளை பேசுவதற்கு பதிலாக
யானையை வில்லனாக காட்டிவிட்டது. இதுவரை வெளியான தமிழ் சினிமாக்களில் யானை
கிரிக்கெட் விளையாடவும், குழந்தை நட்சத்திரங்களின் அழுககையை நிறுத்தவும்
மட்டுமே பயன்பட்டு வந்தது.
முதல் முறையாக காட்டு யானையை காட்டிய இயக்குனர், ஜுராசிக் பார்க்கில் டைனோசரை காட்டுவது போல காட்டு யானையை (கொம்பன்) அறிமுகப்படுத்தியிருக்கிறார். கட்டிடங்கள் கட்டப்பட்டு காடுகள் அழிக்கப்படுவதால் யானைகள் காடுகளை விட்டு வெளியேறுவதாக ஒரே ஒரு காட்சியில் மட்டும் சொல்லி முடித்துவிட்டார்கள்.
காட்சிகள் நகர நகர கொம்பன் வில்லனாக சித்தரிக்கப்பட்டு இறுதியில் கொல்லப்படுவது காட்டு யானைகளின் மீதான வெறுப்பை மக்களிடம் அதிகரிக்கச் செய்வது போலாகிவிடுகிறது. இறுதிக் காட்சியில் கொம்பன் சாகும் போது ஒட்டு மொத்த திரையரங்கமும் கைதட்டி கொண்டாடுகிறது. காட்டுயிர்களின் மீதான புரிதல் இல்லாத நம் சமூகத்தில் இது போன்ற காட்சிகள் காட்டுயிர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும்.
வனத்துறை அதிகாரிகள் இந்த படத்தில் ஏன் வருகிறார்கள்? வனத்துறை அதிகாரிகளை கெட்டவர்கள் போல காட்டவேண்டும் என்று திணிக்கப்பட்ட காட்சிகளாகவே இருக்கிறது. மறுபக்கம் வனத்துறை அதிகாரிகளுக்கு இருக்கும் பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களை பேசவில்லை. போதிய மாத சம்பளம் கூட சரியாக வழங்கப்படமால் வேட்டை தடுப்பு முகாம்களில் பணியாற்றும் ஊழியர்களை பற்றி காட்சிகள் எதுவும் வைக்கப்படவில்லை. ஒளிப்பதிவு நிச்சயம் பாராட்டப்பட வேண்டும்.
காடுகளை நேரடியாக சென்று ரசிக்க முடியாதவர்களுக்கு படத்தில் வரும் காட்சிகள் விருந்து. ஆனால் இந்த காட்சிகள் படமாக்கப்பட்ட போது காட்டிற்கும் காட்டுயிர்களுக்கும் தீங்கு ஏற்படாதவாறு செயல்பட்டார்களா எனத் தெரியவில்லை. படம் எடுக்கிறோம் என்ற பெயரில் காட்சிகளை அழகாக காட்டிவிட்டு காட்டை குப்பையாக்காமல் படமாக்கியிருந்தால் நன்றி. வாழ்த்துக்கள். காட்டுயிர்களின் மீதான அன்பை அதிகரிக்கச்செய்யும் ஒரு தமிழ் சினிமா வர வேண்டும். காட்டுயிர்களின் பிரச்சனைகளை உரக்க பேசி அவற்றுக்கு குரல் கொடுக்க வேண்டும். வரும் என்று நம்புவோம்.

Jan 5, 2013
Birds of North India [Rajasthan, Delhi, Uttar Pradesh, Chandigarh]
![]() |
Tufted Duck |
Black Redstart |
Yellow Throated Sparrow |
![]() |
Bank Myna |
Brahminy Starling |
![]() |
Common Pochard |
Common Hawk Cuckoo |
Comb Duck |
Egyptian Vulture |
Darter |
![]() |
Lesser Goldenback |
Grey Heron |
Jungle Babbler |
Purple Heron |
Ruddy Shelduck |
Shikra |
Sarus Crane |
Lesser Whistling Duck |
Spotted Owlet |
![]() |
White Wagtail |
Yellow-footed Green Pigeon |
White-breasted Waterhen |
Read more Articles...
- The Remaining Grasslands of Palani hills
- The Mudflats of Singapore
- The little-known tressures of Kongur Lake
- The Gateway to Paradise
- Reflections from a museum [Zürich, Switzerland]
- Reclamation in Kuthiraiyar
- Palani Hills : Shrinking Heaven
- Painted Beauty
- Melodies of Bombay Shola
- Lunch with a Falcon
- Incidental Lifers
- Glatt : A Swiss River
- Fort Canning Park [Singapore]
Birds of Palani Hills
- Birds of Palani Hills - Page 1
- Birds of Palani Hills - Page 2
- Birds of Palani Hills - Page 3
- Birds of Palani Hills - Page 4
- Birds of Palani Hills - Page 5
- Birds of Palani Hills - Page 6
- Birds of Palani Hills - Page 7
- Birds of Palani Hills - Page 8
- Birds of Palani Hills - Page 9
- Birds of Palani Hills - Page 10
- Birds of Palani Hills - Page 11
- Birds of Palani Hills - Page 12