Sep 30, 2021

பூ நாரை [Greater Flamingo]

செம்மஞ்சள் வானம் தூவும்

இளஞ்சிவப்புப் பறவைகளால்

வெளிர் நீலக்காயல் ஒன்று

நிறம் மாறும் மாலைப்பொழுதில்

வெண்பஞ்சு மேகம் போல

நிறைந்திருக்கும் பூ நாரைகள்

தரணியை தனதாக்கி

தமிழில் தேன் சேர்க்கும். 


மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

        மரகதப்புறா 

        வல்லூறு 

        தூக்கணாங்குருவி

        தைலாங்குருவி

       தவிட்டுக்குருவி

        நீலமயில் 

        கொம்பன் ஆந்தை

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி


Sep 28, 2021

கதிர்க்குருவி [Ashy Prinia]

பெருநகரத்தின் புதர் மண்டிய 

பூங்கா ஒன்றினை

புனரமைக்கும் பணிகள் தொடங்கிய 

அதே நாளில் 

அப்பூங்காவின் புதரில் 

தன் கூட்டைக் கட்டிமுடிக்கிறது

கதிர்க்குருவி.மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

        மரகதப்புறா 

        வல்லூறு 

        தூக்கணாங்குருவி

        தைலாங்குருவி

       தவிட்டுக்குருவி

        நீலமயில் 

        கொம்பன் ஆந்தை

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி


Sep 25, 2021

Painted Beauty

Since I started birding in 2009, the Greater Painted Snipe (Rostratula benghalensis) has been one of my dream birds that I wish to encounter. Whenever I go birding in wetlands, I look for a suitable habitat for the Painted Snipe and I search for it. Pallikkaranai Marsh in Chennai is one of the good habitats for the Painted Snipe but, unfortunately, we are losing the habitat due to water pollution. Also, noise pollution in recent years is another factor that cannot be ignored. But still, there are sightings of this species and I searched for it whenever I was in Chennai. Once, when I was birding for a long time, I found another secretive bird in the marsh, the Yellow Bittern, but I couldn't find the Painted Snipe. When I moved to Bangalore and I searched for it whenever I went to the wetlands for birding I never got a chance to see it.


There are two wetlands near Palani, my home town. I have recorded many species in these two wetlands over the last 10 years. But I’ve kept on searching for the Painted Snipe. Kothaimangalam is one of the wetlands when many waders come in the winter. Though I have recorded the Common Snipe there a few years before, I got a chance to record another snipe this year, the Pin Tailed Snipe. This is also a migratory bird like the Common Snipe.

Pin Tailed Snipe - Kothaimangalam Wetalnds [Photographer : Satheesh Muthu Gopal]

Another wetland is Idumban Kulam which is very close to Palani town. From the northern bund of the lake the beautiful view of the Palani hills can be seen. A major water source for this lake is the river that flows from the Palani hills. Sandpipers waded on the muddy areas near the lake. Though the Painted Snipe is a resident bird, they are very secretive. A friend of mine, Vishaka Guru, found the Painted Snipe in Idumban Kulam and informed me about it's presence. When I went there with another bird enthusiast, Karthi, he found the Painted Snipes that week and I felt I could photograph it that morning.

We parked our two-wheelers near a well in which we found a lot of Baya weavers (Ploceus philippinus) nesting. They were very active in the early morning hours. But we were focused on the Painted Snipe and moved, reaching the northern bund. The hills across us, glistened in the sunrise. We could see the grasslands near Pazhamputhur in the upper slopes.

It was the beginning of the southwest monsoon. The water level was low and muddy along the periphery, and most places were covered with lilies, blocking our view from what was beneath. We waited for a long time but couldn't spot any Painted Snipe. We decided to walk south and wait. A flock of Cotton Pygmy Goose (Nettapus coromandelianus) was circling above the lake now and then. A lone Lesser Whistling Duck (Dendrocygna javanica) was sitting on an outcrop in the middle of the lake. There were Spot-billed Ducks flying above us and scatting on the lake.

The lake is a very good habitat for the Pheasant-tailed Jacana (Hydrophasianus chirurgus) and there were quite a few that day. There were juvenile darters (Anhinga melanogaster), partially white in colour, perched on a tree. We both observed all these birds but couldn't find a Painted Snipe. We stood apart and searched separately in different areas. Suddenly I heard a call of the Painted Snipe and Karthi was looking at me, wondering whether I had noticed. We heard the call again and again, but the water lilies hid the beauties somewhere. We got tired and came back to where we had begun. Two stray dogs, probably the regular visitors to the lake, jumped into the lake and tried to catch the Black-winged Stilt (Himantopus himantopus). Stray dogs are a major threat to wildlife nowadays. The lucky Stilt escaped from the dogs but the ambience was disturbed.

We would have easily spotted the Painted Snipe by playing a call of the bird on our mobile phones. But we felt it is unethical and decided to give up: our search had begun at exactly 6:00 am and it was 10 am. The four hours yielded many sightings but my wish was not fulfilled. We returned to the well and the Baya weavers were still active. Farmers in Tamil Nadu say that if the Baya Weavers nest at the top of the well the monsoon will bring more rain.

Greater Painted Snipe - Idumban Kulam [Photographer : Karthik Hari]

The next day, Karti and I reached the same place at the same time. We went in different directions and Karthi heard the call. I rushed to the spot and searched. It was a pleasant cloudy morning. A peafowl (Pavocristatus) called just behind us and the gentle breeze gave the air a freshness. There was no human activity and the bird's noise was slowly louder. It was a small bush with grass on the shore of the lake, where a few small birds hid. One of them emerged and it was a Little Grebe (Tachybaptus ruficollis).

I had a deep long breath. Then, after a few minutes, a Common Coot (Fulica atra)appeared. The peafowl still calling behind us. The monsoon clouds were covering the upper Palani hills at a distance. I focused on the place where we heard the call and in another 5 minutes, a pair of Greater Painted Snipe appeared, wading and one behind the other, their tails wagging. We watched them for 10 minutes. Unlike most of the other bird species, sexual dimorphism is reversed in the Painted Snipe, the male being duller than the female. Though the male revealed himself much, the female was still hiding. We took a few photographs and moved on. The Peafowl was still calling and the Baya Weavers’ nests were swaying in the breeze. Karti and I went up to the Palani hills to search for another species.

Article Published in Leaf Litter Magazine Sep 2021. ©Satheesh Muthu Gopal

Read my other articles and leave your comments below.

Lunch With a Falcon

The remaining grasslands of Palani Hills

Palani Hills - Shrinking Heaven

Sep 24, 2021

தைலாங்குருவி [Barn Swallow]

கண்ணிமைக்கும் நேரத்தில் 

மறைந்து மாயமாகி 

பின்தோன்றி,

நாள்முழுதும் பறந்து திரிந்து 

மின்கம்பிகளில் இளைப்பாறும் 

வட துருவத்தில் இருந்து வலசை வந்த 

தைலாங்குருவி..!!மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

        மரகதப்புறா 

        வல்லூறு 

        தூக்கணாங்குருவி

        தைலாங்குருவி

       தவிட்டுக்குருவி

        நீலமயில் 

        கொம்பன் ஆந்தை

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி

Sep 21, 2021

தூக்கணாங்குருவி [Baya Weaver]

கூட்டை ஆய்வு செய்துவிட்டு 

வெளியேவந்த பெண்குருவியின் 

பதிலுக்காக

தொங்கியபடியே காத்திருக்கிறது  

ஆண்குருவி.

நெற்பயிரின் நீண்ட பசுந்தாளை 

கொணர்ந்து வந்த பெண்குருவி 

காதலை சிந்திச்செல்கிறது.மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

        வல்லூறு 

        சிற்றெழால்

       தவிட்டுக்குருவி

        நீலமயில் 

        கொம்பன் ஆந்தை

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

இருவாச்சி

Sep 19, 2021

வல்லூறு [Shikra]

மலைமுகட்டிலிருந்து சீறிப்பாய்ந்து

துரத்திப்பிடித்த ஓணானை

தன் கூர் நகங்களால் 

இருகப்பற்றி பத்திரமாக 

கூட்டிற்கு அழைத்துச் செல்கிறது 

வல்லூறு. 

விருந்துக்கு தயாராகின்றன அதன் 

குஞ்சுகள்.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

       தவிட்டுக்குருவி

        நீலமயில் 

        கொம்பன் ஆந்தை

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி

Sep 18, 2021

மரகதப்புறா [Emerald Dove]

ஈரம் உலராத சோலைக்காட்டில் 

வெண்முகில் கடந்து போகும் 

காலைப்பொழுதில்

வானுயர்ந்த மரங்கள் நடுவே

பரந்து விரிந்த கிளைகள் இடையே

வளைந்தும் நுழைந்தும்

நேர்த்தியாக பறக்கிறது 

மரகதப்புறா 
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

       தவிட்டுக்குருவி

        நீலமயில் 

        கொம்பன் ஆந்தை

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி

Sep 17, 2021

தவிட்டுக்குருவி [Yellow Billed Babbler ]

ஒன்றன்பின் ஒன்றாக 

தாவிச்செல்லும் தவிட்டுக்குருவிகள் 

பருக வைத்திருந்த தண்ணீரில்  

நீராடி 

பவளமல்லிக் கிளைகளில் 

விளையாடி 

கூட்டாக எழுப்பும் கீச்சொலிகளால் 

வாசல் நிறைந்து

வீதிகளில் வழிகிறது

இசை மழை. 

 மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

        தவிட்டுக்குருவி

        நீலமயில் 

        கொம்பன் ஆந்தை

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி

Sep 16, 2021

நீலமயில் [Indian Peafowl]

காட்டுப்பூனைகளும் குள்ளநரிகளும் 

காணாமல் போனபின்பு 

பாலை நிலத்தின் பல்லுயிர்ச்சூழல் 

சிதைந்து போனதனால் 

நிலமெங்கும் நீக்கமற 

நிறைந்துவிட்டன 

நீலமயில்கள் 

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி

Sep 15, 2021

கொம்பன் ஆந்தை [Indian Eagle Owl]

மலைக்குன்றுகளின் மீது படரும் 

பிறை நிலவின் கசியும் ஒளியில்  

பாறை இடுக்கிலிருந்து வெளியேறி 

பட்டுப்போன மரத்தில் அமர்ந்து 

சிறகுகளை கோதியபடி 

வேட்டைக்கு தயாராகிறது 

கொம்பனாந்தை.

Photograph by Karthik Hari


மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி

Sep 14, 2021

கூகை [Barn Owl]

நிலவற்ற இருள்வெளியில் 

சிறகுடைய முழுமதியாய்

இரவாடி பறந்தோடி 

பலநூறு எலிகளுக்கு 

முடிவுரை கணக்கெழுதும் 

வெண்ணிற கூகைக்கு 

கூலி எதுவும் தேவையில்லை.


Photograph by Om Prakash


கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி


Sep 12, 2021

பட்டாணிக்குருவி [Cinereous Tit]

ஆரம் பிறழாது 

வட்டத்துளையமைத்து 

அக்கூட்டில் முட்டையிட்டு 

காடெல்லாம் இரைதேடி 

பின் 

அம்மரத்தின் சிறுகிளையில் 

பக்கவாட்டில் வந்தமரும் 

பட்டாணிக்குருவி.

Photograph by Karthik hari மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

       தவிட்டுக்குருவி

        நீலமயில் 

        கொம்பன் ஆந்தை

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி

Sep 11, 2021

வேதிவால் குருவி [Indian Paradise Flycatcher]

இருள் நிறைந்த மரங்களிடையே
வெண்ணிற வெளிச்சக்கீற்றாய்
நீண்ட வாலை தூரிகையாக்கி
வரைந்து வைத்த ஓவியத்தை
அறிந்திருக்கவில்லை
பறந்தபடியே பூச்சிகளைப் பிடிக்கும்
வேதிவால் குருவிமேலும் சில பறவைகள் - கவிதைகள் :

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி
Sep 10, 2021

சோலைபாடி[White rumped Shama]

பசுமை மாறா மழைக் காட்டில் 

தூறல் நின்ற காலை பொழுதில் 

இருள் விலகா அடர்ந்த புதரிலிருந்து 

பொங்கிவரும் மெல்லிசையால் 

காட்டை உயிர்ப்பிக்கிறது 

சோலைபாடி.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி

Sep 9, 2021

தையல் குருவி [Common Tailor Bird]

இரண்டு இலைகளை 

இடைவெளியின்றி இணைத்து 

நேர்த்தியாக தைத்து 

கூடமைத்து 

போதுமென்று உணர்ந்த பின் 

மூன்றவது இலையை 

அப்படியே விட்டுவைக்கிறது

தையல் குருவி 
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி

ரஜினியும் ஷேர்னியும்

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த அன்னை ஒரு ஆலயம் படத்திற்கும் தற்போது இந்தியில் வெளியான ஷேர்னி திரைப்படத்திற்கும் ஆன கால இடைவெளி மிகப்பெரியது. 

இந்த இரண்டு படங்களுக்கும் உண்டான இடைவெளி மூலமாக விலங்கு நல அபிமானத்திற்கும் (Animal welfare) காட்டுயிர் பேணலுக்கும் (Wildlife Conservation) இருக்கும் வித்யாசத்தை இந்திய சினிமா எப்படி வெளிப்படுத்தியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். 


அன்னை ஒரு ஆலயம் திரைப்படம் விலங்குகள் மீது, அதிலும் குறிப்பாக காட்டு விலங்குகளின் மீது அக்கறை கொள்ளும்படியான கதையை வெளிப்படுத்தியிருக்கும். இந்த அக்கறை என்பது அறிவியல் சார்ந்தது அல்ல. ஆனால் கருணை சார்ந்தது. தற்போது வெளியாகி இருக்கும் ஷேர்னி கருணை சார்ந்தது அல்ல. காட்டுயிர் பேணல் சார்ந்தது. இருப்பினும் அன்னை ஒரு ஆலயத்தில் கருணை அதிகமாவும் காட்டுயிர் பேணல் மிகக் குறைந்த அளவிலும் இருக்கும். ஆனால் ஷேர்னியில் அறிவியல் அதிகமாகவும் கருணை குறைவாகவும் இருக்கும்.


அன்றைய காலகட்டத்திற்கு அன்னை ஒரு ஆலயம் தேவையான படமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய சூழலுக்கு காட்டுயிர் பேனலை அறிவியல் பூர்வமாக பேசுவது அவசியமாகிறது. கருப்பு வெள்ளை, கலர், 3D, Animation என எல்லாவற்றையும் கடந்து இன்றும் துடிப்போடு நடிக்கும் ரஜினி காட்டுயிர் பேணலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது. ஒரு நடிகனாக அவரை போல் யாராலும் கவனம் ஈர்க்க முடியாது. அப்படி ஒரு திரைப்படம் வந்தால் அது விழிப்புணர்வாகவும் அமையலாம். 


தமிழ் சினிமாவில் காட்டுயிர்


நாம் ஏன் யானைகளை நேசிக்கிறோம் ?Sep 6, 2021

புதர்க்காடை[Jungle Bush Quail]

வெயிலேறிய புழுதிக்காட்டில் 

உருமறை கொண்டு உருண்டோடும் 

புதர்க்காடை,

எதிரிகள் அண்டும் வரை காத்திருந்து 

வெடித்துச் சிதறி பறந்த பின்னும் 

அமைதி கொள்ளாது 

பதறிய மனம்.

Photograph by Rajகூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி


Sep 2, 2021

சிறிய மின்சிட்டு [Small Minivet]

செஞ்சாம்பல் நிற ஆணும் 

செம்மஞ்சள் நிற பெண்ணும் 

மரக்கிளையில் கூடமைத்து 

அடர் நிழலில் உயிர்ப்பிக்கும் 

அக்குஞ்சுகளுக்கு பெயர் 

சிறிய மின்சிட்டு.
கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி

Sep 1, 2021

சிரல் [Common Kingfisher]

சாயக்கழிவுகளால் 
நுரையோடு நீர் பாயும் 
சிற்றோடைகளில் 
மீன்களை காணாது 
பசியோடிருக்கும் இணையிடம் 
தலை கவிழ்ந்து நிற்கும் 
சிரல்..!!