விருது

கொடைக்கானல் குல்லா நூலுக்கான முதல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இராஜபாளையம் மணிமேகலை மன்றம் இந்த விருதினை வழங்குகிறது. 

கொடைக்கானல் குல்லா நூலை தேர்ந்தெடுத்த விருதுக்குழுவிற்கும், இந்த நூலை வெளியிட்ட சுட்டி யானை பதிப்பகத்திற்கும், வாசித்து செப்பனிட உதவிய சிறார் எழுத்தாளர் திரு.விழியன் அவர்களுக்கும், படங்களை வரைந்து கொடுத்த திரு.ஜீவா அவர்களுக்கும், நூலை வடிவமைத்த திரு. மதன் அவர்களுக்கும், பிழை திருத்தம் செய்த திரு. பலராமன் அவர்களுக்கும், நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கிய திரு. ரவீந்திரன் நடராஜன், திரு. ராஜமாணிக்கம், திருமதி. பிப்பா முகர்ஜி, திருமதி. திவ்ய பாரதி, திரு. ராம்ஜி, திரு. விஸ்வா ஆகியோருக்கும், சோலைக்குருவி அமைப்புக்கும், பலரிடமும் இந்த நூலை சென்று சேர்த்த தோழர் பூங்கொடி அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



கொடைக்கானல் நகரின் சுற்றுலாத் தளங்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும் குழந்தைகள் கற்றுக்கொள்ளவும், பழனிமலைத் தொடரின் பல்லுயிர்ச் சூழலை புரிந்து கொள்ளவும் இந்த நூல் உதவியாக இருக்கும். அவசியம் வாசியுங்கள்.

ஜூலை 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு, ராஜபாளையத்தில் நிகழ்ச்சி நடைபெறும்.

Post a Comment

0 Comments