ரஜினியும் ஷேர்னியும்

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த அன்னை ஒரு ஆலயம் படத்திற்கும் தற்போது இந்தியில் வெளியான ஷேர்னி திரைப்படத்திற்கும் ஆன கால இடைவெளி மிகப்பெரியது. 

இந்த இரண்டு படங்களுக்கும் உண்டான இடைவெளி மூலமாக விலங்கு நல அபிமானத்திற்கும் (Animal welfare) காட்டுயிர் பேணலுக்கும் (Wildlife Conservation) இருக்கும் வித்யாசத்தை இந்திய சினிமா எப்படி வெளிப்படுத்தியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். 


அன்னை ஒரு ஆலயம் திரைப்படம் விலங்குகள் மீது, அதிலும் குறிப்பாக காட்டு விலங்குகளின் மீது அக்கறை கொள்ளும்படியான கதையை வெளிப்படுத்தியிருக்கும். இந்த அக்கறை என்பது அறிவியல் சார்ந்தது அல்ல. ஆனால் கருணை சார்ந்தது. தற்போது வெளியாகி இருக்கும் ஷேர்னி கருணை சார்ந்தது அல்ல. காட்டுயிர் பேணல் சார்ந்தது. இருப்பினும் அன்னை ஒரு ஆலயத்தில் கருணை அதிகமாவும் காட்டுயிர் பேணல் மிகக் குறைந்த அளவிலும் இருக்கும். ஆனால் ஷேர்னியில் அறிவியல் அதிகமாகவும் கருணை குறைவாகவும் இருக்கும்.


அன்றைய காலகட்டத்திற்கு அன்னை ஒரு ஆலயம் தேவையான படமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய சூழலுக்கு காட்டுயிர் பேனலை அறிவியல் பூர்வமாக பேசுவது அவசியமாகிறது. கருப்பு வெள்ளை, கலர், 3D, Animation என எல்லாவற்றையும் கடந்து இன்றும் துடிப்போடு நடிக்கும் ரஜினி காட்டுயிர் பேணலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது. ஒரு நடிகனாக அவரை போல் யாராலும் கவனம் ஈர்க்க முடியாது. அப்படி ஒரு திரைப்படம் வந்தால் அது விழிப்புணர்வாகவும் அமையலாம். 


தமிழ் சினிமாவில் காட்டுயிர்


நாம் ஏன் யானைகளை நேசிக்கிறோம் ?Post a Comment

7 Comments

 1. Nice, will watch. Appreciate your thoughts and thinking

  ReplyDelete
 2. Krishnakumar KanniappanSeptember 3, 2022 at 4:12 PM

  Very good perspective explained simply in your unique style. I’ll add Sherni in movies list to watch. I wish your wish for Super star to act in such a movie gets fulfilled shortly🤝

  ReplyDelete
  Replies
  1. Thanks, athan. Sherni is an interesting movie. It speaks about the real issues in Wildlife Conservation. 

   Delete
 3. மிகச்சிறப்பு, பாராட்டுக்கள் தோழரே..

  ReplyDelete
 4. மிகச்சிறப்பு, பாராட்டுக்கள் தோழரே.. - ஆர்க்காடு ராஜா முகம்மது.

  ReplyDelete