Dec 8, 2021

பொன்முதுகு மரங்கொத்தி [Greater Flameback]

இருகால்களாலும் இறுகப்பற்றிய மரத்தை

கருத்தவாலால் அழுத்தி

தலையை சற்றே பின்தள்ளி

நொடிக்கிருமுறை  

கூரிய அலகால் விசையோடு மோதி

பட்டைகளை பிளந்து

நீண்ட நாவால்

கணுக்காலிகளை பிடித்துண்ணும்

பொன்முதுகு மரங்கொத்தி

ஒளிபுகா அடர்வனத்தின்

சுடர்.







16 comments:

  1. Wowwww...
    அசத்தல் தோழரே
    அசத்தல்,அசத்தல்
    அசத்தலாய் இருக்கு.
    �������� வாழ்த்துகள்.

    - ஆற்காடு ராஜா முகம்மது

    ReplyDelete
  2. மரத்திலும் மனதிலும் ஒவியம் வரைந்து பறக்கிறது மரங்கொத்தி. அழகு

    ReplyDelete
  3. Beautiful lines. As usual 😍🔥🔥🔥

    ReplyDelete
  4. அர்விந்த் December 8, 2021 at 1:32 PM

    "ஒளிபுகா அடர்வனத்தின் சுடர்" -- அழகு!

    ReplyDelete
  5. மிக அருமை தோழா

    ReplyDelete
  6. Amazing beautiful one 👌🏻👏🏻😍

    ReplyDelete