இருகால்களாலும் இறுகப்பற்றிய மரத்தை

கருத்தவாலால் அழுத்தி

தலையை சற்றே பின்தள்ளி

நொடிக்கிருமுறை  

கூரிய அலகால் விசையோடு மோதி

பட்டைகளை பிளந்து

நீண்ட நாவால்

கணுக்காலிகளை பிடித்துண்ணும்

பொன்முதுகு மரங்கொத்தி

ஒளிபுகா அடர்வனத்தின்

சுடர்.