Jan 28, 2023

2022-ல் வாசித்தவை


2022-ல் நான் வாசித்த நூல்கள் : 

 1. வேள்பாரி - திரு.சு.வெங்கடேசன் 
 2. வைகை நதி நாகரிகம் - திரு.சு.வெங்கடேசன்
 3. தமிழகத்தில் பறவை காப்பிடங்கள் - திரு.ஏ.சண்முகானந்தம் & முனைவர்.சா.செயக்குமார் 
 4. கடல் - திரு.சமஸ்
 5. கழுதைப் புலி - திரு.கோவை சதாசிவம்
 6. தவளை - திரு.கோவை சதாசிவம்
 7. விண்ணளந்த சிறகு - திரு.தியடோர் பாஸ்கரன் 
 8. பறவைகள் சூழ் உலகு - திரு.விக்ரம் குமார்
 9. இந்திய வானம் - திரு.எஸ்.ராமகிருஷ்ணன்
 10. எனதருமை டால்ஸ்டாய் - திரு.எஸ்.ராமகிருஷ்ணன்
 11. ஆதியில் யானைகள் இருந்தன - திரு.கோவை சதாசிவம்
 12. நீர் எழுத்து - திரு.நக்கீரன்
 13. அந்தரப்பூ - திரு.கல்யாண்ஜி
 14. அதோ அந்தப் பறவை போல - திரு.முகமது அலி

Jan 27, 2023

திருப்பத்தூர் புத்தகத் திருவிழா

திருப்பத்தூரில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் "யாருக்கானது பூமி" மற்றும் "தூவி" நூல்கள் கிடைக்கும்.

அரங்கு : காக்கைக்கூடு (எண் : 96)

ஜனவரி 28 முதல் பிப்ரவரி 5 வரை 
Jan 23, 2023

மஞ்சள் குருகு [Yellow Bittern]

அடர்ந்த நாணல் புதரிலிருந்து 

வெளியே வரும் மஞ்சள் குருகு,

புற்களை இறுகப்பற்றி 

சலனமின்றிக் காத்திருந்து

கழுத்தின் நீளம் கூட்டி

இரையைத் தாக்கும்

கணநேரத்தை புரிந்து கொள்ள

நீங்கள் 

கண்சிமிட்டாதிருக்க வேண்டும். 
Jan 22, 2023

பட்டாணி உப்புக்கொத்தி [Little ringed Plover]

கரைமணலில் தடம்பதிக்கும் 

உப்புக்கொத்திக்கூட்டம்,

சிற்றெழால் வருகையினால்

ஒத்திசைந்து ஒலியெழுப்பி

பொழியெங்கும் சுழன்றுவர,

ஆபத்து நீங்கியபின்

தரையிரங்கக் கேட்கிறது 

அலையோசை.

Photograph by Raj


Jan 21, 2023

Birds of Singapore - Page 7

 
Jan 18, 2023

மாங்குயில் [Indian Golden Oriole]

மஞ்சள் நிற மாங்குயில்கள் 

கவிகையின் மேல் சுற்றி வர,

சிறகசைவில் சிதறுமதன் 

மஞ்சளில் கொஞ்சத்தை, 

சித்திரையில் பூத்திருக்கும் 

சரக்கொன்றை பெற்றுவிட, 

மிச்சமிருக்கும் மஞ்சள் கொண்டு 

மார்கழியில் உதித்தெழுகிறது ஞாயிறு. Jan 16, 2023

கண்கிலேடி [Indian Thick-Knee]

உயிர்வேலிப் புதர்களுக்கிடையில்

உருமறையாய் நின்றிருந்த

கண்கிலேடிப் பறவைகளை,

சுருள்வேலிக் கம்பிகளிடையே

காணாது போனபின்னும்,

உயிர்வேலிப் பறவைகளின்

உன்னதங்கள் அறியாமல்

உயிர்க்கொல்லி மருந்துகளை

நாடுகின்ற மானுடத்தால்

நஞ்சாகிறது நிலம்.

Photograph by Kathick Hari


Jan 12, 2023

சுடலைக்குயில் [Jacobin cuckoo]

பருவ மழை தொடங்கும் முன்

வடநாட்டில் வலசை வரும்.

பருவம் தவறாது

தென்னாட்டில் நிலைத்திருக்கும்.

உழவனுக்கு தோழமையாய் 

உதவி வரும் மழைப்பறவை

சுடலைக்குயில்.Jan 9, 2023

வரையாடுகள் காப்பாற்றப்படுமா?

வரையாடுகளை பாதுகாக்க தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்கள் வரவேற்புக்குரியது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் ஓரிட வாழ்வியான வரையாடுகளின் மிகவும் குறைந்துவிட்டது. இது தமிழ் நாட்டின் மாநில விலங்காகவும் இருக்கிறது. மேற்குத்  தொடர்ச்சி மலையில் உருவான சுற்றுலாத் தளங்கள், வேளாண்மைக்காக காடுகள் அழிக்கப்பட்டது, வேட்டை உள்ளிட்ட பல காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து இதன் வாழிடமும் சுருங்கிவிட்டது. 


ஆங்கிலேயர்களால் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட அயல் தாவரங்கள் இவற்றின் வாழிடத்தை சூறையாடின. தற்போது தமிழக அரசு அறிவித்திருக்கும் திட்டத்தில் வரவேற்கத் தகுந்த சில அம்சங்கள் உள்ளன. ஆனால் அவற்றை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதில் சில கேள்விகள் எழுகின்றன.

பழைய வாழிடங்களில் மீண்டும் வரையாடுகளை அறிமுகம் செய்வது :

அவற்றின் வாழிடங்களில் அயல் தாவரங்கள் இருந்தால் எப்படி மீண்டும் அறிமுகம் செய்வது ? சுற்றுலாத் தளமாக மாறிய இடங்களில் அவற்றை அறிமுகம் செய்ய முடியுமா? பாவப்படும் புதிய சாலைகள் அவற்றின் வாழிடத்தை பாதிக்கிறதே.

சோலைப் புல்வெளிகளை சீரமைப்பது:

தைலம், சீகை, பைன் உள்ளிட்ட அயல் மரங்களை எப்படி அப்புறப்படுத்துவது? அதற்கான திட்டங்கள் என்ன? அந்த இடங்களில் சோலைப்புல்வெளிகளை எப்படி உறுதி செய்வது? புதிதாக உருவாகும் சுற்றுலாத் தலங்களை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவது?

வரையாடுகளை பாதுகாப்பதால் என்ன நன்மை?

வரையாடுகளை பாதுகாக்க வேண்டுமானால், சோலைக்காடுகளையும், சோலைப்புல்வெளிகளையும் பாதுகாத்தாக வேண்டும்.

அவ்வாறு பாதுகாக்கப்படும் காடுகள், அங்கே உள்ள புல்வெளிகளில் வருடம் முழுவதும் பெய்யும் மழையை ஒரு பஞ்சை போல தன்னுள்ளே தக்க வைத்துக்கொள்கிறது. இது மெல்ல மெல்ல நீரை வெளியிடுவதால் ஆற்றில் எப்போதும் நீர் ஓடிக்கொண்டே இருக்கும். 

இது சமவெளிப்பகுதியில் மனிதர்களுக்குத் தேவையான குடிநீரையும், வேளாண்மைக்குத் தேவையான நீரையும் பூர்த்தி செய்கிறது. 

Jan 8, 2023

சோலைக்குருவிகளுக்கு நன்றி..!!

கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி என்னை சிறப்பு அழைப்பாளராக வரவழைத்துப்  பேச வாய்ப்பளித்த சோலைக்குருவி அமைப்புக்கு என் மனமார்ந்த நன்றி. பழனி மலைத் தொடரில் சோலைக்குருவி அமைப்பு செய்துவரும் அரும்பணி பற்றி நான் ஏற்கனவே எழுதியிருந்தேன். https://www.writersatheesh.com/2022/03/blog-post_10.html
கொடைக்கானலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பழனி மலைத் தொடருக்கும் எனக்குமான நெருக்கத்தையும், பல்லுயிர் வளங்களையும், அவை சந்திக்கும் பிரச்சனைகளையும் பற்றி உரை நிகழ்த்தினேன். எல்லா நண்பர்களிடமும் நீண்ட நேரம் பேசிய பிறகும் கிளம்ப மனமின்றி கிளம்பி வந்தேன். அவர்கள் காட்டிய அன்பும் அர்ப்பணிப்பும் மறக்கவியலாதது.

சோலைக்குருவி அமைப்பு இதுவரை 10000 கிலோ அளவிலான குப்பைகளை சோலைக்காடுகளுக்குள் இருந்து அகற்றியுள்ளது. இந்த காடுகள் தான் பழனி உள்பட கீழே உள்ள பல நகரங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த அமைப்புக்கு பழனி மக்கள் நிச்சயமாக நன்றிக் கடன்பட்டிருக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் முனைவர்.ராஜமாணிக்கம், திரு.பாலா (PHCC), திரு.மார்க் (PHCC), பறவையியலாளர் திரு.ரவி ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். 


Jan 7, 2023

செங்குயில் [Banded Bay Cuckoo]

எப்பறவை

எக்காலம் 

எந்நிறத்தில் 

முட்டையிடும் 

என்பதெல்லாம் நன்கறிந்த 

செங்குயில்கள்,

அப்பறவை அறியாமல் 

அதன் கூட்டில் முட்டையிட்டு 

கூடொட்டிப் பிழைத்திருத்திருக்கும்.

தகுதியுள்ள உயிரினங்கள் 

இப்புவியில் நிலைத்திருக்கும்.
Jan 6, 2023

சென்னை புத்தகக் கண்காட்சி 2023

இன்று சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. என்னுடைய நூல்கள் "காக்கைக் கூடு" அரங்கில் கிடைக்கும். 


#ChennaiBookFair #crownest #யாருக்கானதுபூமி #தூவி
Jan 5, 2023

The little-known tressures of Kongur Lake

The very first time I came to know about the Kongur lake was from the Tamil book Iyarkkai Varalarru (Natural History) written by Mr Mohammed Ali. The Kongur lake is located 25 km from Palani and the lake receives water from Shanmuga Nadhi which originates from the Palani Hills in Tamil Nadu, South India. I came to know that the lake is a heavenly location for many migratory birds. So I began visiting the lake since 2009 and recorded the birds. Once I shared my experience with the writer Mr Theodore Baskaran, well-known for his wonderful essays on nature. He acknowledged my views and shared his experiences as he too comes from the nearby town of Dharapuram. This remote location without noise and light pollution has become a peaceful habitat for the avifauna which migrates from distant places.


We heard about a few poaching incidents of birds and conducted an awareness campaign among the villagers, explaining why birds are important, and how they are linked to agriculture. We also distributed cloth bags with various environmental ‘quotes’. The Acacia nilotiaca (babul) trees inside the lake provide a roosting place for many bird species. We requested the local people not to cut the trees in the summer when the water level goes down. I have visited the lake during all the seasons of the year and each time I have had a wonderful experience and new lifers. I usually go birding in the evening to see the birds return to roost on the babul trees. 


A myriad of Woolly-necked storks, Painted Storks, Asian Openbill storks, Spot-billed Pelicans, Darters, Cormorants, egrets and starlings can be seen in and around the lake. In addition, there are Spot-billed ducks, Northern Shoveler, Garganey and Pin-tailed ducks. The most common resident is the Eurasian Collar-Dove which I observed in all the seasons. Once I saw a flock of Littler Ringed Plovers rolling near a waterhole in April when the lake was almost dry. Though I have visited this lake for over 10 years I have never seen the water hyacinth. As there are no effluents that are polluting the water here, the quality of water is still good and helps both the farmers and the birds. There are palmyra trees on the lake bund which provide good shelter for the Rose-ringed parakeets, the Spotted Owlet and the Indian rollers. In October 2012, we sighted 2 Greater Flamingos in the lake. Usually, the flamingos prefer the coastal areas for their habitat. So it was a surprise to see them in the lake, and one of them was a juvenile.


The local birder, the Late Mr.Shanmugam Kalidass recorded 113 bird species in the lake alone. He spent a good amount of time around this lake and did some great documentation. The Western-reef heron and Whiskered tern are his remarkable records in the lake. As both species are mainly found in the coastal regions his records are important. The water level was too low in October as the dams were closed, storing the monsoon rain. Man made dams control the natural flow of water which impact wildlife that depend on fresh water. As the main source of water for this lake is the Palani hills, the protection of natural habitat is important in the hills too. For instance, due to the encroachment of exotic trees in the upper Palanis, the Nilgiri Pipit lost its habitat. In addition, the grasslands are unable to store the monsoon rain and the water flows down to the dam. Once the natural habitat of the Nilgiri Pipit provided water for many freshwater species in the plains.

Whiskered Tern - Late.Mr.Shanmugam Kalidass

The lake is surrounded by agricultural fields, with millets being one of the common crops. There are many bird species that feed on millet and these can be spotted here. The Indian Silverbill is one of the species common around the lake. The Green Bee-eaters can be seen commonly too and the Bay Backed Shrike, a migratory bird, can be seen between October and March. Egrets and Cormorants prefer to perch on the snags in the lake during the evening. During sunset, it is always a pleasure to see the birds coming back to the lake to roost.


The water management in Tamil Nadu was well-planned and many centuries old, and Kongur is one of the best examples. The water comes from the river through a canal and once the lake is full the discharge flows through the canal to the next lake. The connectivity between the lakes is very good in the state but, due to the loss of habitat in the hills, and new dams, natural cycles of these water bodies are being adversely affected.


Though there is not much disturbance for the birdlife here, the boom of windmills coming up in recent years need to be considered. Are they a threat to birdlife? The larger issue of climate change has made states move to renewable energy, which is understandable. But installing the windmills near the birding hotspots should be considered before taking this step.


Article Published in Leaf Litter Magazine Dec 2022. ©Satheesh Muthu Gopal

Read More Articles :