சோலைக்குருவிகளுக்கு நன்றி..!!

கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி என்னை சிறப்பு அழைப்பாளராக வரவழைத்துப்  பேச வாய்ப்பளித்த சோலைக்குருவி அமைப்புக்கு என் மனமார்ந்த நன்றி. பழனி மலைத் தொடரில் சோலைக்குருவி அமைப்பு செய்துவரும் அரும்பணி பற்றி நான் ஏற்கனவே எழுதியிருந்தேன். https://www.writersatheesh.com/2022/03/blog-post_10.html




கொடைக்கானலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பழனி மலைத் தொடருக்கும் எனக்குமான நெருக்கத்தையும், பல்லுயிர் வளங்களையும், அவை சந்திக்கும் பிரச்சனைகளையும் பற்றி உரை நிகழ்த்தினேன். எல்லா நண்பர்களிடமும் நீண்ட நேரம் பேசிய பிறகும் கிளம்ப மனமின்றி கிளம்பி வந்தேன். அவர்கள் காட்டிய அன்பும் அர்ப்பணிப்பும் மறக்கவியலாதது.

சோலைக்குருவி அமைப்பு இதுவரை 10000 கிலோ அளவிலான குப்பைகளை சோலைக்காடுகளுக்குள் இருந்து அகற்றியுள்ளது. இந்த காடுகள் தான் பழனி உள்பட கீழே உள்ள பல நகரங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த அமைப்புக்கு பழனி மக்கள் நிச்சயமாக நன்றிக் கடன்பட்டிருக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் முனைவர்.ராஜமாணிக்கம், திரு.பாலா (PHCC), திரு.மார்க் (PHCC), பறவையியலாளர் திரு.ரவி ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.







 


Post a Comment

4 Comments

  1. சிறப்பு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் அண்ணா..👏

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete