மஞ்சள் நிற மாங்குயில்கள் 

கவிகையின் மேல் சுற்றி வர,

சிறகசைவில் சிதறுமதன் 

மஞ்சளில் கொஞ்சத்தை, 

சித்திரையில் பூத்திருக்கும் 

சரக்கொன்றை பெற்றுவிட, 

மிச்சமிருக்கும் மஞ்சள் கொண்டு 

மார்கழியில் உதித்தெழுகிறது ஞாயிறு.