பைங்கிளி [Rose Ringed Parakeet]

பட்டுப்போன பனைதானே 

வெட்டிவிடலாம் என்றெண்ணி 

இயந்திரத்தின் துணைகொண்டு 

அடியோடு சாய்த்துவிட, 

பனைமரப் பொந்துகளில் 

வாழ்ந்துவந்த பைங்கிளிகள் 

கூடடைய திரும்புகையில் 

எழுப்புமந்த கீச்சொலியை 

மொழிபெயர்க்க தேவையில்லை Post a Comment

13 Comments

 1. அசத்தல் தோழரே..,

  பைங்கிளிகள் பாசங்களை
  பாருலகில் மொழிபெயற்க
  மொழிகளிலே வழிகளில்லை
  தூங்கிடும் மனிதங்கள்
  பொங்கிடும் வரையினிலே..!

  - ராஜா முகம்மது

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. வலிகொண்ட வரிகள் அருமை

  ReplyDelete
 4. Amazing 😍 Beautiful words 🤩👌🏻👏🏻

  ReplyDelete