Jun 29, 2013

இன்று உத்தரகாண்ட். நாளை கொடைக்கானல் ?

பழனி மலைத் தொடர்ச்சி என்பது பலருக்கும் தெரியாத பெயர். மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 2000 சதுர.கி.மீ பரப்பளவு கொண்ட கிழக்கு நோக்கி நீண்ட இந்த பகுதி, பழனி மலைத் தொடர்ச்சி. கொடைக்கானல் நகரம் அமைந்திருப்பது இந்த மலைப் பகுதியில் தான். நம் அடிப்படை தேவையான நீரை வழங்குவதில் இந்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மிக முக்கியமானது.



ஆனால் இந்த பகுதியை மக்கள் சுற்றுலா தளமாக மட்டுமே பார்ப்பது கொடுமையானது. அதிகரித்து வரும் போக்குவரத்து, புதிய சாலைகள் இந்த மலை பகுதியை பாதிக்கிறது. மேலும் புதிய புதிய தங்கும் விடுதிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசாங்கம் முன்பே விழித்துக்கொண்டு நீலகிரி மற்றும் பழனி மலை தொடர்ச்சியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து கண்காணிக்க வேண்டும். இயற்கையை அழித்து  எந்த வளர்ச்சியையும்  நம்மால் எட்ட முடியாது.

1 comment:

  1. வருடா வருடம் அதிகரித்து வரும் போக்குவரத்து, பயமாகத்தான் இருக்கிறது...

    ReplyDelete