நியாயமாரே............

 ஆன்மிகம் என்றால் என்ன என்ற புரிதல் இல்லாத போது சமூகம் நிறைய இழப்புகளை சந்திக்கிறது. குறிப்பாக சுற்றுச்சூழல். ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களால் கொண்டாடப்படும் விநாயகர் சதூர்த்தி என்ற விழா காரணமாக நம்முடைய நீர் நிலைகள் பெருமளவில் மாசுபடுகின்றன.நான் இந்த விழாவுக்கு எதிரானவனோ அல்லது இந்த மதத்துக்கு எதிரானவனோ அல்ல. குளங்களிலும் ஏரிகளிலும் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் முன்பு கரைக்கப்பட்டன. பிறகு ரசாயன கலவைகளால் செய்யப்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. அது நீரில் கரைந்து நீரை மாசுபடுத்தியது. இப்போது குளங்களிலும் ஏரிகளிலும் தண்ணீர் இல்லாத நிலையை நாம் உருவாக்கிவிட்டோம். இப்போது இந்த சிலைகள் கரைக்கப்படுவதில்லை. கொட்டப்படுகிறது.

இதை கடவுள் ஏற்றுக் கொள்வாரா? எதற்காக இதை செய்கிறோம் என இதை செய்பவர்கள் அறிவார்களா? நம் அடுத்த தலைமுறை நீர் இல்லாமல் தவிக்கப்போகிறது என்ற கவலையாவது உண்டா? பழனியில் இந்த ஆண்டு கொட்டப்பட்ட சிலைகளை கரைக்க வழியில்லாமல் போனதால் விவேகானந்தா சேவா டிரஸ்ட் அமைப்பு கொட்டப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தி குளத்தை சுத்தப்படுத்தியுள்ளது.

 கடவுளை உண்மையாக நம்புகிறவன் கடவுள் படைத்த உலகை காப்பற்ற உழைப்பான். கெடுக்க மாட்டான்.

http://vivekananthasevatrust.blogspot.ch/2013/09/normal-0-false-false-false-en-us-x-none.html?utm_source=dlvr.it&utm_medium=facebook 

Post a Comment

0 Comments