விண்மீன் பிடித்தீவு

சிங்கப்பூரின் அறுபதாவது தேசிய தினத்தை முன்னிட்டு, கவிமாலை அமைப்பு  சிங்கப்பூரில் இருக்கும் அறுபது கவிஞர்களிடம் இருந்து சிங்கபூரைப் பற்றிய அறுபது கவிதைகளை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளது. இது மிகச் சிறந்த பாராட்டுக்குரிய முயற்சி. "விண்மீன் பிடித்தீவு" என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்த நூல், சிங்கப்பூரின் வரலாறை, கலாச்சாரத்தை, மக்களின் வாழ்வியலை, சூழலியலை (நான் எழுதியது) என எல்லா பரிமாணங்களிலும் பேசுகிறது. 

கவிஞர்கள் சுரேஷ், அக்ஷய், நான், தீபக் (இடமிருந்து வலமாக)

நேற்றைய நிகழ்வு அருமையாக இருந்தது. திரு. சித்துராஜ் அவர்கள் பேச்சு அருமை. அவர் திரு. ஐ. உலகநாதன் அவர்களை குறிப்பிட்ட போது மகிழ்ச்சி அடைந்தேன். என்னுடைய முதல் நூலான "சிதறாத எழுத்துகள்" என்ற கவிதை நூலுக்கு வாழ்த்துரையாக 2010-ஆம் ஆண்டு கவிதை வழங்கினார். அப்போது பெங்களூரில் இருந்தார். நேற்றைய நிகழ்ச்சி அவருடைய நினைவுகளை தூண்டியது. கவிமாலைக்கு நன்றி.



Post a Comment

0 Comments