என்ன சொன்னது லூசியானா - ஸ்ரீராம் - மதிவதனி

சிறார்கள் ஸ்ரீராம் மற்றும் அவரது தங்கை மதிவதனி இணைந்து எழுதிய "என்ன சொன்னது லூசியானா" என்ற நூலை வாசித்தேன். முதலில் அவர்களுடைய பெற்றோர்களுக்கு என் வாழ்த்துகள். சிறார்கள் கையில் கைப்பேசியை கொடுத்துவிட்டு, அவர்களை வாசிக்க வைப்பதற்கே சிரமப்படும் பெறோர்களுக்கு இடையே, அவர்களை எழுத வைப்பது சவாலான காரியம். அதை அவர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள். வாசிப்பு என்பதே குறைந்து வரும் இன்றைய காலகட்டத்தில், பெற்றோர்களும் குழந்தைகள் கண் முன்னால் கைப்பேசியை பார்த்துக் கொண்டே இருப்பதை குறைத்துக் கொண்டு, வாசிக்கத் தொடங்க வேண்டும். அதுவே குழந்தைகளுக்கும் ஊக்கமாக அமையும். ஸ்ரீராமும் மதிவதனியும் இன்னும் நிறைய நூல்களை படைக்க வாழ்த்துகிறேன். அவர்கள் எழுத்தில் அன்பும் அறமும் நிறைந்து இருக்கிறது. அது காலத்தின் தேவையும் கூட. 



Post a Comment

0 Comments