Palni Hills Conservation Council அமைப்பின் முன்னாள் தலைவர் திரு.கண்ணன் அவர்கள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
திரு.கண்ணன் அவர்கள் Palni Hills Conservation Council தலைவராக இருந்த போது தான், நான் அந்த அமைப்பில் உறுப்பினரானேன். சிட்டுக்குருவிகளுக்காக ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி செய்யலாம் என்றதும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். அவரும் அருண் சங்கர் அவர்களும் பழனி வந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். எப்போதும் அன்பாக பேசுவார். மரங்களை பற்றிய அவரது அறிவு அபாரமானது. ஆண்டுக் கூட்டங்களின் போதும், பட்டிவீரன்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றிருந்தபோதும் நிறைய பேசியிருக்கிறோம். பழனி மலைகளின் பாதுகாப்பில் அவரது பங்கு போற்றத்தக்கது. அவர் என்றும் நினைவில் இருப்பார்.
ஆழ்ந்த இரங்கல். Miss you Kannan Sir.
0 Comments