Jul 27, 2011

கானமயில் கண்டதுண்டா?


 Great Indian Bustard:

இறக்கைகள் இருந்தும் அதிக எடை காரணமாக பறக்க முடியாத பறவைகள் உண்டு. பறக்கும் தன்மை கொண்ட பறவைகளிலேயே அதிக எடை கொண்ட பறவை இந்த கானமயில். வறண்ட புல் வெளி  பகுதிகளில் வாழ்கின்றன. பொதுவாக ஒரே ஒரு முட்டை மட்டுமே இடுகிறது.


அதுவும் தரையில் இடுவதால் ஆபத்தும் அதிகம். இதியா மற்றும் பாகிஸ்தானில் இவை அதிகம் காணப்பட்டன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் காணப்பட்ட இந்த கானமயில் இப்போதும் மிக மிக அருகிவிட்டது. தமிழ் நாட்டிலும் இவை காணப்பட்டதுண்டு. வெளி மான்கள் வாழும் நிலப்பரப்பு இவற்றிற்கு ஏற்றதாக இருப்பதால் அங்கு இவை காணப்படுகின்றன.


அதிக அளவில் இந்த வேட்டயாடப்பட்டதன் விளைவு இன்று இந்த பறவைகளின் எண்ணிக்கை வெறும் 250 என்ற அளவில் குறைந்து விட்டது. மேலும் வருடத்திற்கு ஒரு முட்டை மட்டுமே இடுவதால் இவற்றை காப்பாற்றுவது கடினமாக இருக்கலாம்.


இந்தியாவில் மட்டுமே பார்க்கக்கூடிய எத்தனையோ அரிய உயிரினங்கள் இன்று அழியும் தருவாயில் உள்ளன. இந்த கானமயில்களை பாதுகாக்க சிறப்பு கவனம் எடுத்து அரசு இந்த பறவையை காப்பாற்றவேண்டும்.






13 comments:

  1. தோகையே இல்லையே! இஃது ஆண் பறவையா?

    ReplyDelete
  2. ஆண் பறவைக்கும் தோகை கிடையாது

    ReplyDelete
  3. தினமலர் வழியாக இங்கு வந்துள்ளேன். சுற்றுச்சூழல் சார்ந்த அருமையான முயற்சிக்குப் பாராட்டுகள்.

    கானமயிலின் ஆங்கிலச்சொல் எது? அதன் scientific name என்ன? நான் தமிழ் விக்சனரியின் பங்களிப்பாளர். கானமயில் மற்றும் பறவைகளின் பெயர்களை அங்கு படத்துடன் இணைக்க ஆவலாய் உள்ளேன்.

    நன்றி,
    பழ. கந்தசாமி

    ReplyDelete
  4. கானமயிலின் ஆங்கிலச்சொல் : Great Indian Bustard

    நன்றி
    பா.சதீஸ் முத்து கோபால்

    ReplyDelete
  5. நன்றி, சதீஸ்.

    தமிழ் விக்சனரியில் கானமயில் என்ற சொல்லைச் சேர்த்துள்ளேன்.

    http://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

    ReplyDelete
  6. சதீஸ்,

    பறவைகளின் தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்புப் பட்டியல் இருந்தால், அதைக்கொண்டு விக்சனரியில் உள்ள பறவை சார்ந்த சொற்களைச் சரிபார்க்கவும் இல்லாதவற்றைச் சேர்க்கவும் ஆர்வமாய் உள்ளேன். உங்களிடம் அப்பட்டியல் இருந்தால் தருவீர்களா?

    நன்றி

    ReplyDelete
  7. தங்களுடைய செயல்பாடுகளுக்கு என்னுடைய நன்றிகளும், வாழ்த்துக்களும்...

    பறவைகளின் தமிழ் பெயர்களை நிச்சயம் தருகிறேன். உதாரணமாக இந்த பட்டியல் இருக்கிறதா எனச் சரி பார்க்கவும்..

    நாகணவாய் : Common Myna
    பூ நாரை : Flamingo
    கருங்கரிச்சான் : Common Drongo
    பனங்காடை : Indian Roller
    தேன் சிட்டு : Sun Bird
    மஞ்சள் மூக்கு நாரை : Painted Stork

    ReplyDelete
  8. மேலும் பறவைகளின் தமிழ் பெயர்களை அறிய இந்த வலைப்பூ உதவியாக இருக்கும்.


    http://myexperiencewithbirds.blogspot.com/

    நன்றி

    ReplyDelete
  9. தற்போது மொழிபெயர்ப்பு இவ்வாறு உள்ளது.

    நாகணவாய் - myna, indian
    பூநாரை, கிளிமூக்கு நாரை - flamingo
    கருங்கரிச்சான் - drongo, black
    பனங்காடை - roller
    Painted Stork - செங்கால் நாரை (அ) சங்குவலை நாரை
    ---
    sunbird - தேன்சிட்டு (என இப்போதுதான் சேர்த்தேன்)

    நன்றி

    ReplyDelete
  10. ஒவ்வொரு பறவையிலும் சிறப்பினங்கள் உள்ளன.

    உதாரணமாக

    Purple sun bird :ஊதா தேன் சிட்டு
    என்று இருக்க வேண்டும்

    Barbet என்பது பொதுவாக குக்குறுவான்.

    White cheeked barbet என்பது "வெண் கன்ன குக்குறுவான்" என்பதாக இருக்க வேண்டும்

    நன்றி

    ReplyDelete
  11. நன்றி, விக்சனரியில் பறவை பெயர்களின் மொழிபெயர்ப்பை உங்கள் பட்டியல்படி சரிசெய்து அங்குள்ள பட்டியலை உங்கள் பார்வைக்கு/திருத்த ஆலோசனைக்கு சிலநாட்களில் அனுப்பிவைக்கிறேன்.

    ReplyDelete