Aug 24, 2022

நீர் நாய்கள்

ஆயுதம் செய்தோம். 

நல்ல காகிதம் செய்தோம். 

ஆலைகள் செய்தோம். 

உலகத் தொழில் அனைத்தும் 

உவந்து செய்தோம்.

அணைகள் செய்தோம்.

அதிலே கழிவுகள் கலந்தோம்.

வளர்ச்சி என நினைத்தே 

சூழலை ஏன் மறந்தோம்.

ஓடைகளில் ஆறுகளில் 

நீர் நாய்கள் இருந்தனவே.

அவை விளையாடிக் களிப்புறவே 

கரை மணலும் இருந்ததுவே.

நீரோட்டம் தடைபட்டு 

நதியாவும் வறண்டனவே.

அதில் உணவேதும் கிடைக்காமல் 

நீர் நாய்கள் மடிந்தனவே.

பெரு வெள்ளம் வரும்போது 

வாழிடங்கள் தொலைத்தனவே.

அடர் காட்டில் வேட்டையினால் 

உயிர் பிழைக்க தவித்தனவே.

நன்னீரில் நண்டறிந்து 

பசியாறும் நீர்நாயின் 

வாழிடத்தை காத்துவிட்டால் 

ஆறுகளை காத்திடலாம்.

அவை களிப்புற விளையாடும் 

கரை மணலும் காத்திடலாம். 


8 comments: