Aug 24, 2022

பறத்தல்

பெயர் தெரியாத பறவையின்

சிறகிலிருந்து பறக்கிற இறகு

யார் மீதும் மோதாமல்

தன்னியல்பில் தரை இறங்குகிறது.

ரோஜா இதழின் அளவேயுள்ள அந்த

இறகில் ஏறிய எறும்பு

இறங்க வழியின்றி பறக்கிறது.

மெல்ல வீசும் காற்றில்

உருண்டோடி

நிலை கொள்ளாது சுழல்கிறது. 

இறகினை தட்டி பறிக்க நினைத்த பூனை

பாதியில் விடுபடுகிறது.

வண்ணத்து பூச்சியில் மோதி

சிறுமியின் காலடியில்

நிலை கொள்கிறது.

அவள் உள்ளங்கையில் வைத்து

இறகினை ஊதியதும்

சிறகுகள் முளைக்கிறது.





No comments:

Post a Comment