பறவைகளுக்கு ஊரடங்கு: திரு.ஜா.செழியன்

அன்பிற்குரிய நண்பர் செழியன் அவர்கள் "பறவைகளுக்கு ஊரடங்கு" என்ற நூலை எழுதியிருக்கிறார். பறவைகளின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் செழியன். தன்னுடைய அனுபவங்கள் மூலமாக இந்த நூலை எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பறவை சரணாலயங்களுக்கும் சென்று அங்குள்ள பறவைகளை அவதானித்து தன் அனுபவம் மூலமாக இந்த நூலை எழுதியிருக்கிறார். பறவை சரணாலயங்கள் மட்டுமல்லாது, வீட்டை சுற்றியே பறவைகளை அவதானிப்பது குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார். 24 கட்டுரைகளை இந்த நூலில் எழுதியிருக்கிறார். இதில் குறிப்பாக ஆமூர் வல்லூறு பற்றிய கட்டுரை முக்கியமானதாக கருதுகிறேன். உலகில் அதிக தூரம் வலசை செல்லும் இந்த வல்லூறுகள் வட கிழக்கு இந்தியாவை கடக்கும் போது அதிக அளவில் வேட்டையாடப்படுவதை பதிவு செய்திருக்கிறார். 


இன்று பறவை நோக்குதல் என்பது வளர்ந்து வரும் ஒரு பொழுதுபோக்காக மாறி வருகிறது. இந்த நிலையில் நண்பர் செழியன் அவர்கள் இந்த நூலில் குறிப்பிட்ட இரண்டு முக்கியமான விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. 

ஒன்று அவருடைய அனுபங்களில் இருந்து அவர் பறவைகளை நிதானமாக கவனித்தார் என்பது புரிகிறது. அவரிடம் அவசரம் இல்லை. ஒரு நத்தை குத்தி நாரை, நத்தையை முழுவதும் விழுங்கும் வரை அவர் அதை பொறுமையோடு அவதானித்திருக்கிறார். அது போல ஒரு மஞ்சள் மூக்கு நாரை ஒரு மீனை முழுவதும் விழுங்கும் வரை அதை பொறுமையோடு அவதானித்திருக்கிறார். அது எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டது என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.

இரண்டாவது, அவர் பல்வேறு பகுதிகளுக்கும் பொது போக்குவரத்தை பயன்படுத்தியிருக்கிறார். நேரமின்மை காரணமாக இன்று பலரும் சொந்த வாகனங்களையே பயன்படுத்தும் நிலையில் உள்ளோம். 

இந்த இரண்டு காரணங்களுக்கும் அடிப்படை பொறுமை. அதை பறவை ஆர்வலர்களும் நிச்சயம் கையாள வேண்டும். வாசிக்க வேண்டிய புத்தகம்.

இந்த நூலை வாங்க  காக்கை கூடு 


Post a Comment

2 Comments

  1. அர்விந்த்October 24, 2021 at 12:36 PM

    புத்தகங்களை அறிமுகப்படுத்தும் அவசியமான தொடர்.

    ReplyDelete