பங்குனி ஆமைகள் : கவிதை

அலைகடலின் நுரை ஒளியை 

மரபணுவில் வைத்திருக்கும்.

இட்டுவைத்த முட்டைகளை 

இயற்கையிடம் விட்டுவைக்கும்.


பல்லாயிரம் ஆண்டுகளாய்

பரிணமித்த உயிரனம்,

தெருவிளக்கின் வெளிச்சத்தால்

திசைமாறிச் செல்கிறது.


பட்டணத்தின் வீதியெங்கும் 

பெருகிவிட்ட தெருநாய்கள்,

ஆமை குஞ்சுகளை 

இரையாக்கி கொல்கிறது.


ஆமை நடை மூலமாக 

முட்டைகளை மீட்டெடுத்து 

அடைகாக்கும் மனிதர்கள் - 

கடலை உயிர்ப்பிக்கும் 

கற்றுணர்ந்த காவலர்கள்.


வங்கக் கடற்கரையில் 

வாழிடம் தொலைத்துவிட்டு 

மக்காத குப்பையிடையே 

மணற்பரப்பில் இடம்தேடும் 

பருவநிலை பிறழ்வறியா 

பங்குனி ஆமைகள். 


அலைகடலின் நுரையொளியை 

மரபணுவில் வைத்திருக்கும்.

இட்டுவைத்த முட்டைகளை 

இயற்கையிடம் விட்டுவைக்கும்.


- பா.சதீஸ் முத்து  கோபால் 


குறிப்பு : 


பங்குனி ஆமைகள்: Olive Ridley Sea Turtle (Lepidochelys olivacea)

IUCN Status: Vulnerable 

Thanks to Aravind Manoj for the photograph 






மேலும் சில சூழலியல் கவிதைகள் :

Post a Comment

8 Comments

  1. அருமையான கவிதை. பசுமை இலக்கியத்தில் ஒரு துளிர்.

    ReplyDelete
  2. இயற்கையின் அருட்கொடையில்
    ஆமைகளுக்கு போற்றுதலுக்குரிய
    இடம் உண்டு.
    இட்டுவைத்த முட்டைகளை
    இயற்கையிடம் விட்டுவைக்கும்
    குணம் படைத்த ஆமைகளை
    ஆமை நடைபோட்டு காக்கின்றோம்.
    இன்னும் விரைந்து காக்க வேண்டும்.
    அப்போது தான் குப்பைகளில் இடம் தேடும்
    கொடுமைகளை ஓரளவுக்காவது தடுக்க இயலும்
    என்று உங்களின் கோபக் குரல் கம்பீரமாய்
    இந்தக் கவிதையில் ஒலித்திருக்கிறது.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள் சதீஸ்.
    தொடரட்டும் உங்கள் இயற்கை சூழல்
    பாதுகாப்புப் பணி.

    - ஆர்க்காடு ராஜா முகம்மது பெங்களூரு.

    ReplyDelete
  3. சூழலியல் பற்றிய மிகச்சிறந்த கவிதை

    ReplyDelete
  4. அருமையான படைப்பு சார்

    ReplyDelete