இழந்தது போதும்..!!

மதிகெட்டான் சோலையின் கருமந்தி அறியாது
சோலைகள் தொலைந்த வரலாறு.

வால்பாறை சாலையின் வரையாடு அறியாது
வாழிடம் தொலைந்த வரலாறு.

பரந்த புல்வெளியை பாழாக்கி 
வரகுக் கோழிகள் இழந்தோம்.

சாகச வேட்டைகளால்
சிவிங்கப்புலிகள் இழந்தோம்.

சிற்றோடை சிறுநதிகளில் 
நீர் நாய்கள் இழந்தோம்.

வேட்டையாடி வேட்டையாடி
வெளிமான்கள் இழந்தோம்.

ஆறுகளில் அணைகட்டி
மயில்கெண்டைகள் இழந்தோம்.

காட்டுயிர்களை பேணாது
கான மயில்கள் இழந்தோம்.

பறவைகளின் தமிழ் பெயரில்
பெண்பாலை இழந்தோம்.

ஆங்கில மொழிபெயர்ப்பில்
தமிழ் பெயர்களையே இழந்தோம்.

மேலும் சில சூழலியல் கவிதைகள் :

Post a Comment

6 Comments

 1. அனைத்தும் உண்மை சதீஸ்...இன்னும் நமக்கு தெரியாமல் நிறைய இழந்து வருகிறோம் - செழியன்.ஜா

  ReplyDelete
  Replies
  1. பறவைகளின் தமிழ் பெயர்களை ஆவணப்படுத்த வேண்டும் செழியன்....

   Delete
 2. Poem with truthful awareness of things we lost in recent decades 🙌🏼👌🏻 Very well conveyed 🙏🏽

  ReplyDelete
 3. Truth... Need more awareness program for our current generation as well as upcoming generation about this beautiful earth and wonderful ecosystem.... which we should respect at least let it survive...

  ReplyDelete