Mar 7, 2020

பருவநிலை மாற்றம் - திரு.என்.ராமதுரை


திரு. என்.ராமதுரை அவர்கள்  எழுதிய "பருவநிலை மாற்றம்" என்ற நூலை வாசித்து முடித்தேன். தற்போதைய சூழ்நிலையில் இந்த நூல் நிச்சயம் அனைவராலும் வாசிக்கப்படவேண்டிய ஒன்று. இந்த நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் நிச்சயம் நமக்குள் ஓராயிரம் கேள்விகளை எழுப்பிக்கின்றன. நம்மை சிந்திக்க தூண்டுகிறது. மிக எளிமையான விளக்கங்களுடன் எல்லோருக்கும் புரியும்படியான தெளிவான நடையுடன் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. 



மூழ்கிக் கொண்டிருக்கும் தீவுகள் முதல் பாரீஸ் ஒப்பந்தத்தின் மூலக்கூறுகள் வரை பலவற்றையும் ஆராய்கிறது. கரியமில வாயுவின் தாக்கம் பற்றிய செய்திகளும் பசுமைக் குடில் பற்றிய அறிவியல் செய்திகளும் பள்ளி மாணவர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டியவை. அணுமின்சாரம் பற்றிய கட்டுரைகள் வெறுமனே அச்சம் ஊட்டுபவையாக இல்லாமல் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. 


அனல் மின்னலயங்கள் மூலமாக வெளியேறும் அதிகப்படியான கரியமில வாயுவை தவிர்க்க சூரிய ஒளி மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் எந்த அளவில் துணையாக இருக்கும் என்பதையும், அதை பயன்படுத்துவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களையும் விரிவாக எழுதியிருக்கிறார் ராமதுரை அவர்கள். மேலும் புவியை காப்பதில் தனி மனிதனின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நூல் நன்றாக உணர்த்துகிறது. "பருவநிலை மாற்றம்" என்ற சொல் "Climate Change" என்பதன் மொழியாக்கமாக பயன்படுத்தப்பட்டாலும், மாற்றம் என்ற அளவில் மட்டும் நாம் தற்போது இல்லை. "பருவநிலை பிறழ்வு" என்ற இடத்துக்கு வந்துவிட்டோம் என்றே நினைக்கிறன். 



3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பருவநிலை பிறழ்வு 👌
    சரியாகப் பொருந்தும் சொல்.
    பூச்சிக்கொல்லியை கிராமங்களில் கொண்டு சேர்க்க பூச்சி மருந்து என்ற சொல்லை பயன்படுத்தினர்.அதனால் அதன் வீரியம் விவசாயிகளுக்கு தெரியாமல் போயிற்று.
    அது போலவே 'பருவநிலை மாற்றம்' என்ற சொல் வீரியத்தை உணர்த்துவதாக இல்லை. 'பருவநிலை பிறழ்வு' என்றே குறிப்பிட வேண்டும்.
    நன்றி சதீஸ் அவர்களே...

    ReplyDelete

Follow