Apr 7, 2013

பாம்பு என்றால்? : திரு.முகமது அலி


பாம்புகளை பற்றிய ஒரு அறிவியல் நூல் இது. பாம்புகள் உருவான விதம் அவற்றின் வாழ்க்கை முறை, பல்வேறு வகையான பாம்புகள் மற்றும்அவற்றை பற்றிய அறிய தகவல்களை தருகிறது இந்த நூல். பாம்புகள் பற்றி நம் சமூகத்தில் மண்டிக்கிடக்கும் மூட நம்பிக்கைகளை கடுமையாக சாடுகிறது இந்த நூல். நம் சமூகத்தின் மூட நம்பிக்கைகளில் முதல் இடத்தில் இருப்பதே இந்த பாம்புகள் தான். பாம்புகள் பற்றிய எண்ணற்ற கட்டுக்கதைகளுக்கு மத்தியில் இந்த அறிவியல் நூல் வந்திருக்கிறது. திரைப்படங்கள், தொலைக்காட்சி, நாளிதழ்கள் என எங்கு பார்த்தாலும் பாம்புகள் பற்றிய அறிவியல் பூர்வமான செய்திகள் புறந்தள்ளப்படுகின்றன. பாம்பு என்றாலே மக்கள் பயப்படவும் அது ஆபத்தானது என்பதும் மக்கள் மனதில் நிலைத்து நின்று விட்டன.



அடிப்படையில் பாம்புகள் சுற்றுச் சூழலை சம நிலையில் வைப்பதில் பெரும் பங்கு வகிக்ன்றன என்பதை அழுத்தமாக பதிய வைக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் திரு.முகமது அலி அவர்கள். பல்லிகளில் இருந்து பாம்புகள் பரிணாம வளர்ச்சியில் உருவாயின. இன்று உலகில் சுமார் 3000 வகையான பாம்புகள் வாழ்கின்றன. பாம்புகளை அவற்றின் குடும்பங்களின் அடிப்படையில் விளக்கி இருக்கிறார் ஆசிரியர். மேலும் இந்தியாவில் வாழும் சில முக்கியமான பாம்புகளை பற்றியும் அவற்றின் நச்சுத் தன்மை பற்றியும் விளக்கியுள்ள செய்திகள் நிச்சயம் அனைவராலும் அறியப் படவேண்டியது.


கருநாகம் அல்லது ராஜ நாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், சுருட்டை விரியன், கடல் பாம்பு, பச்சைபாம்பு, மலைப்பாம்பு, கொம்பேறி மூக்கன், சாரைப்பாம்பு, மன்னுளிப்பாம்பு, சிறுபாம்பு, தண்ணீர் பாம்பு போன்ற பாம்புகளை பற்றிய குறிப்புகளை நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் காணப்படும் சுமார் 270 வகையான பாம்புகளில் 4 இனப் பாம்புகள் மட்டுமே நஞ்சுள்ளவை என்பது முக்கியமான செய்தி. பரவலாக வாழும் சாரைப்பம்புகள் நஞ்சற்றவை. ஆனால் நம் சூழலில் இருக்கும் மூட நம்பிக்கைகள் காரணமாக  அடித்துக் கொல்லப்படுகின்றன.

பாம்புகளை பற்றி எத்தனயோ சினிமாக்கள் வந்து விட்டன. இவற்றில் எதுவுமே பாம்புகளை பற்றி அறிவியல் பூர்வமாக இல்லை மக்கள் ஏற்கனவே பாம்புகள் மீது வைத்திருக்கும் மூட நம்பிக்கை மற்றும் பயத்தை வளர்ப்பதே இந்த சினிமாக்களின் வேலை. இப்படி பாம்புகள் பற்றி மூட நம்பிக்கையை புகுத்தும் சினிமாக்கள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார் ஆசிரியர்.

பாம்பு கடித்தால் எப்படி முதலுதவி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியமான செய்தி. மேலும் சில கூடுதலான தகவல்களை கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பாம்புகளுடைய உடல் அமைப்பு மற்றும் அவை வேலை செய்யும் விதம் போன்ற தகவல்கள் பாம்புகள் மீதான புதிய பார்வையை நமக்கு ஏற்படுத்துகிறது. பாம்புகள் பொதுவாக தன் எல்லையை தீர்மானிப்பதற்காக சண்டையிட்டுக் கொள்கின்றன. ஆனால் இதை பாம்புகளின் காதல், புணையல் என்று இந்த சமூகம் நம்புகிறது.

பாம்புகளை பற்றிய ஏராளமான துணுக்குகளையும் தகவலையும் உள்ளடக்கிய இந்த புத்தகம் நிச்சயம் எல்லோராலும் வாசிக்கப்பட வேண்டும்.

பாம்புகள் பற்றிய மூட நம்பிக்கைகள் ஏராளம். அவற்றை எல்லாம் தோலுரித்துக்காட்டியுள்ளார் திரு.முகமது அலி அவர்கள். கூடவே பாம்புகள் தோலுரிப்பது பற்றியும்..!!


இந்த நூலை வாங்க விரும்புகிறவர்களுக்கு : http://www.panuval.com/index.php?route=product/product&filter_name=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D&product_id=1592


8 comments:

  1. பாம்பு என்றால், படை, தொடை நடுக்கம் நீங்க வேண்டும் என்றால், முதலில் அதற்கான சிகிச்சைகள் எங்கு, எப்படி கிடைக்கிறது என்பதை விரிவாக விளக்கப்பட வேண்டும்.பொது மக்களில், குறிப்பாக விவசாய மக்களுக்கு பாம்பு கடிக்கான சிகிச்சை கிடைக்காமல் தான் நிறைய மக்கள் இறக்கிறார்கள். இந்த அவலத்தை பற்றி குறிப்பிடாமல் இந்தியாவில் தான் அதிக மக்கள் பாம்பு கடிக்கு உயிர் இழக்கிறார்கள் என்பது, ஏழை எளிய விவசாய மக்களை இழிவு படுத்துவது போன்றதாகும். சமீபத்தில் கோவையை சேர்ந்த இயற்கை அன்பர், பாம்புகளை காப்பாற்றும் சேவையில் தன்னை அர்பணித்தவர், பாம்பை காப்பாற்றும் வேளையில், பாம்பு கடிபட்டு மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அலைகழிக்க பட்டு உயிர் இழந்தார்-இந்த நிகழ்வு இயற்கை அன்பர்களின் இதயத்தை காயப்படுத்தியதை யாரும் மறுக்க முடியாது.தனியார் மருத்துவமனைகள் பாம்பு கடிக்கு சிகிச்சை தருவதை தவிர்க்கின்றன, அரசு மருத்துவமனைகளோ அலட்சியப்படுதுகின்றன, நஞ்சு முறிவு மருந்து எல்லா மருத்துவமனைகளிலும் இருக்க வேண்டும், மக்களுக்கு சரியான சிகிச்சை தர வேண்டும் என்ற விழிப்புணர்வு மருத்துவர்களுக்கு இல்லை.கடிபட்ட மக்கள் உயிர் இழப்பு அதிகம் ஆகும் பொழுது, பாம்புகளை காக்க மக்கள் முன் வருவார்களா? அதற்கான தீர்வு, பாம்பு என்றால்? என்கிற இந்நூலில் இல்லை....

    ReplyDelete
    Replies
    1. Forest department people should also trained to identify and rescue the snakes

      Delete
    2. வணக்கம் நான் சுமார் பத்து வருடங்களாக நீலகிரி மாவட்டம் முதுமலை மசினகுடி பகுதியில் பாம்பு பிடிப்பதை சமூக சேவையாக கொண்டுள்ளேன். இதுவரை நான் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விட்டு உள்ளேன். இந்தப் பாம்பு பிடிப்பதன் மூலம் எனக்கு எந்த வருமானமும் லாபமும் இல்லை. சுமார் 20, 25 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் சென்று எனது சொந்த செலவில் பாம்பை பிடித்து உள்ளேன்.மேலும் நான் எனது பகுதி உள்ள எனது நண்பர்களுக்கு பாம்புகளைப் பிடிப்பது பற்றி தெளிவாக கூறி பயிற்சி அளித்து வருகிறேன். எனவே வனத்துறையின் மூலம் எனக்கு ஏதாவது வேலை வாய்ப்பு கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனது தொலைபேசி எண் 9944844059-9443499290.எனது பெயர் பாலமுரளி என்கிற ஸ்நேக் முரளி

      Delete
    3. நன்றி பாலமுரளி சார். உங்களுடைய சேவை மகத்தானது. உங்கள் பதிவு நீக்கப்படாது. உதவ முயற்சி செய்கிறேன்.

      Delete
  2. நன்றி....தொடருங்கள்...

    ReplyDelete
  3. பாம்புகளை பற்றி தெரிந்து கொள்வோம் பாம்புகளை பாதுகாப்போம்

    ReplyDelete
  4. பாம்புகள் சம்பந்தமாக உள்ள அனைத்து மூட நம்பிக்கைகளையும் ஒழிக்க வேண்டும்

    ReplyDelete