இந்தியா விடுதலை வெற்றி : திரு.அபுல் கலாம் ஆசாத்

திரு.அபுல் கலாம் ஆசாத் எழுதிய சுயசரிதையான "இந்தியா விடுதலை வெற்றி" வாசித்தேன். (தமிழில் மொழி பெயர்ப்பு: திரு.ஏ.ஜி.வெங்கடாச்சாரி மற்றும் திரு.பூரண சந்திரன்)

இந்தியாவின் விடுதலைக்கு திரு.ஆசாதின் பங்கு என்ன என்பதை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. 1940 முதல் 1946 வரை காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்த போது, இவர் ஆற்றிய செயல்பாடுகள் நம்முடைய விடுதலைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை எப்படி ஒவ்வொரு தலைவராலும் படிப்படியாக அங்கீகரிக்கப்பட்டது என்பது ஆச்சர்யம் நிறைந்ததாக இருக்கிறது. கடைசி வரை இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டுவிடக்கூடாது என மிகவும் பாடுபட்டவர் திரு.ஆசாத் அவர்கள்.

இந்த சுயசரிதையில் நான் குறிப்பிட விரும்பும் சில செய்திகள்:

திரு.ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கைக்கு எதிராக திரு.ஆசாத் பலமுறை வலியுறுத்திப்பேசி பிறகு ஜின்னாவின் மனதையும் மாற்றுவதில் ஓரளவு வெற்றி கண்டபோதிலும், திரு.நேரு அவசரப்பட்டு வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலமாக ஜின்னா மீண்டும் மனம் மாற நேரிட்டது. மந்திரி சபை தூது திட்டத்தை காங்கிரஸ் சுதந்திரமாக மாற்றிக்கொள்ளும் என்ற நேருவின் கூற்று, முஸ்லீம் லீகால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது. ஒருவேளை நேரு பொறுமையாக செயல் பட்டிருந்தால் இந்திய வரலாறு மாறிப்போயிருக்கலாம்.

பிரிவினைக்குப் பிறகு திரு.வல்லபாய் பட்டேல், மத்திய உள் துறை அமைச்சராக இருத்த போது, ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்காமல் விட்டதும், அதை தொடர்ந்து கலவரத்தை கட்டுப்படுத்த திரு.காந்தி உண்ணாவிரதம் தொடங்கியதும், காந்தியின் போக்கால் கலவரம் உடனடியாக கட்டுக்குள் வந்ததும் திரு.ஆசாத் ஒளிவு மறைவின்றி எழுதியிருப்பது போல தோன்றுகிறது.

பிர்லா மாளிகையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிறகும், போதிய பாதுகாப்பை காந்திக்கு வழங்காததும், அதன் பிறகு காந்தியின் மரணத்தில் ஏற்பட்ட சோக நிகழ்வுகளும் மனதை பிசைகிறது. 78 வயதில், உண்ணாவிரதம் இருந்து இந்த தேசத்தை ஒற்றுமை படுத்திய காந்தியின் செயல்பாடுகளும், அதற்கு ஆசாத்தின் துணையும், அகிம்சை எவ்வளவு வலிமையானது என்பதை உணர வைக்கிறது.

நாம் சுவாசிக்கும் இந்த சுதந்திர காற்றுக்காக, திரு.அபுல் கலாம் ஆசாதுக்கு இந்த தேசம் என்றைக்கும் நன்றி கடன் பட்டிருக்கிறது.

Post a Comment

2 Comments

 1. Were you get time to all these activities sathis....Great work and contionus learning .... hearty wishes
  ..

  ReplyDelete
  Replies
  1. It's not one day work Vijay. I'm reading and writing for the last 12 years my friend. Thanks for your support.

   Delete