அட்டகாசம் இல்லை. பசி..!!!


அட்டகாசம் என்ற இந்த வார்த்தையை சமீப காலமாக அதிகமாக செய்திகளில் பார்க்க முடிகிறது. அட்டகாசம் என்ற வார்த்தைக்கு வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று சிறப்பான ஒன்றை அட்டகாசம் என்று சொல்லி பாராட்டுவது. இன்னொன்று "இவர்களின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை" என்று ஆதிக்க மனோபாவத்துக்கு இணையாக சொல்வது.

சமீபத்தில் அட்டகாசம் என்ற சொல் இந்த இரண்டுக்கும் இல்லை. விளை நிலங்களுக்குள் யானை புகுந்தால் "யானைகள் அட்டகாசம்" என்று செய்தி வெளியிடுகிறார்கள். ஊருக்குள் காட்டெருமை வந்தாலும் அட்டகாசம். மான் வந்தாலும் அட்டகாசம்.

உண்மையில் மனிதர்களாகிய நாம் தான் காட்டை அழித்து விலங்குகளுக்கு இடையூறாக இருக்கிறோம். பசியால் அவை உணவு தேடி வந்தால் அவற்றை அட்டகாசம் என்கிறோம். வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் கூட மாசுபட்டு வருகிறது. இத்தனைக்கு பிறகும் விலங்குகளை குறை சொல்வது என்ன நியாயம்?

உண்மையில் அட்டகாசம் செய்பவர்கள் யார்? யானைகளா அல்லது மனிதர்களா?

Post a Comment

1 Comments

  1. காற்றாட்டு வெள்ளத்தை தடுக்க நினைத்தால்; அது கரை உடைத்து ஊருக்குள் புகும்.

    அதுபோல தான்; யானையின் வலசை பாதையை யார் ஆக்கிரமைதாலும் வழிமாறி ஊருக்குள் வரும்.

    வனமே யானை பசிக்கு போதுமான உணவு. ஊருக்குள் இருக்கும் உணவு-யானை பசிக்கு சோழப் போறியா?

    ReplyDelete