மணிநீரும் மண்ணும் : திரு. அருண் நெடுஞ்செழியன்

தோழர் அருண் நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய மணிநீரும் மண்ணும் என்ற நூலை வாசித்தேன். இந்த நூலை உயிர் பதிப்பகம் கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு சூழலியல் பிரச்சனைகளை இந்த நூல் அறிவியல் தரவுகளோடு பேசுகிறது. நாம் மிகச் சாதாரணமாக கடந்து போகிற செய்திகளுக்கு பின்னால் இருக்கக்கூடிய சூழலியல் சிக்கல்களை இந்த நூல் விளக்கிக் கூறுகிறது. தமிழ்நாட்டின் எல்லைகளைக் கடந்து இந்திய அளவில்  சுற்றுச்சூழலுக்கு எதிராக நடைபெற்று வரும் அச்சுறுத்தல்களை இந்த நூல் விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும் காலநிலை மாற்றம் எப்படியான ஆபத்துகளை கொண்டு வரும் என்றும் அதற்கு பின்னால் இருக்கும் முதலாளித்துவம் பற்றியும் பேசுகிறது.

தண்ணீர் தனியார் மயமாவது பற்றிய அருண் அவர்களுடைய கட்டுரை இந்த நூலில் மிக முக்கியமானதாக நான் பார்க்கிறேன். தண்ணீர் தனியாரின் கையில் செல்வதால் என்ன மாதிரியான சிக்கல்கள் உருவாகும் என்று, இதற்கு முன் நிகழ்ந்த மோசமான விளைவுகளின் அடிப்படையில் தரவுகளோடு  எழுதியிருக்கிறார்.

இந்த நூல் பலரையும் சென்றடைய விரும்புகிறேன். இந்த நூலை இணையத்தில் பெற : https://www.udumalai.com/manineerum-mannum.htm


Post a Comment

0 Comments