கானாங்கோழி [White Breasted Waterhen]

ஓடையோர சாலையை

வேகமாகக் கடந்த பின்னர்

புதருக்குள் ஒளிந்துகொள்ளும்

கானாங்கோழி,

எப்படியும் வெளியே வருமென

காத்திருக்கும் நீங்கள்,

எப்போது புரிந்து கொள்வீர்கள்.

அந்தப் புதரில் எதுவும் இல்லை.


Post a Comment

8 Comments