சென்னை புத்தக கண்காட்சி நாளை ஜனவரி 8-ஆம் தேதி தொடங்குகிறது. என்னுடைய நூல்கள் அனைத்தும் காக்கைக்கூடு அரங்கு எண் 376,377-ல் கிடைக்கும்.
எனக்கு வரும் ராயல்டி தொகை Palni Hills Conservation Council அமைப்புக்கு சென்றுவிடும். அவர்கள் புதிய மரக்கன்றுகளை உருவாக்க அந்த தொகையை செலவிடுவார்கள். இது இந்த ஆண்டும் தொடரும்.
கொடைக்கானல் குல்லா நூல் மூலமாக எனக்கு வர இருக்கும் ராயல்டி தொகை சோலைக்குருவி அமைப்புக்கு செல்லும். அவர்கள் செய்யும் தூய்மை பணிக்கு அது உதவியாக இருக்கும்.
என்னுடைய நூல்களை அவசியம் வாசியுங்கள். நண்பர்களுக்கு பரிசளியுங்கள். சூழலியல் பாதுகாப்பிற்காக தொடர்ந்து எழுதி வருகிறேன். வாசகர்களின் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை. இந்த பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள். நன்றி.
விருதுகள்
- சிறந்த சுற்றுச் சூழல் நூல் விருது (யாருக்கானது பூமி ?) - தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் 2014-15
- சிறந்த சிறார் இலக்கிய விருது 2024 (கொடைக்கானல் குல்லா) - இராஜபாளையம் மணிமேகலை மன்றம்
- சிறந்த கட்டுரை தொகுப்பு 2023 (பல்லுயிர்களுக்கானது பூமி ) - பாரதியார் தமிழ் இலக்கிய பேரவை, கம்பம்.

0 Comments