புத்தாண்டு வாழ்த்துகள்..!!!

ஒரு எழுத்தாளராக இந்த ஆண்டு எனக்கு மறக்க முடியாதது. சென்ற ஆண்டில் இறுதியில் "கொடைக்கானல் குல்லா" வெளியானது. அந்த நூலுக்கு இந்த  ஆண்டு நல்ல வரவேற்பு இருந்தது. 

இந்த ஆண்டில் என்னுடைய முதல் ஆங்கில நூலான "Shades of Habitat" வெளியானது. British Library இந்த நூலை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறது.

இந்த ஆண்டில் என் எழுத்துப் பணிகளுக்காக இரண்டு விருதுகள் கிடைத்தது.

  1. சிறந்த சிறார் இலக்கிய விருது 2024 (கொடைக்கானல் குல்லா) - இராஜபாளையம் மணிமேகலை மன்றம்
  2. சிறந்த கட்டுரை தொகுப்பு 2023 (பல்லுயிர்களுக்கானது பூமி (இரண்டாம் பரிசு)) - பாரதியார் தமிழ் இலக்கிய பேரவை, கம்பம்.

இதுவரை இல்லாத அளவு அதிகம் எழுதியது இந்த ஆண்டில் தான். 2026-ல் அவை உங்கள் கைகளுக்கு வந்து சேரும். முந்தைய ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டிலும் இயன்றவரை வாசித்தேன்.  

2025-ஆம் ஆண்டில் நான் வாசித்த நூல்கள் :

கல் மேல் நடந்த காலம் : திரு. தியடோர் பாஸ்கர்ன்

யானைகளும் அரசர்களும் : தாமஸ் டிரவுட்மன் (தமிழில் திரு. தியடோர் பாஸ்கர்ன் & ஜெகநாதன்) 

மௌன வசந்தம் : ரேச்சல் கார்சன் (தமிழில் பேரா. ச. வின்சென்ட்)

இன்னொரு மலை இன்னொரு நதி : திரு. கு. சிவராமன் 

படைப்பின் பெருவெளி : திரு. டிராட்ஸ்கி மருது (நேர்காணல்)

மழைக்காலமும் குயிலோசையும் : திரு. மா. கிருஷ்ணன் 

குறு நரி : திரு.கோவை சதாசிவம்

எறும்புகளின் வரிசை கலைகிறது : திரு.கோவை சதாசிவம் 

கவிஞனும் கவிதையும் : திரு. எஸ். ராமகிருஷ்ணன் 

பாகுபலி யானை : திரு.  க.ரத்னம் 

என்ன சொன்னது லூசியானா? - செல்வ ஸ்ரீராம் & மதிவதனி 

இருவாச்சி சாமி : திருமதி. பூங்கொடி பாலமுருகன் 

ஆகுபா : திரு.  விக்ரம் குமார் 

பாம்புகள் : திரு.  கோவை சதாசிவம்

பறவையின் எச்சத்தில் பூக்குமொரு காடு : திரு.  கோவை சதாசிவம் (நேர்காணல்)

கால் முளைத்த மீன் : திருமதி. பூங்கொடி பாலமுருகன் 

ததும்புதலின் பெருங்கணம் : திருமதி. ச.மோகனப்பிரியா

தேங்கா பன்னு  - திரு. எ.யோசுவா

பூனாச்சி  - திரு. பெருமாள் முருகன் 

Saving wild India - Valmik Thapar

கான மயில் (உயிர் பதிப்பகம்)

 





முந்தைய ஆண்டுகளை காட்டிலும் என்னுடைய இணையதளப் பக்கம் அதிகம் வாசிக்கப்பட்டது இந்த ஆண்டில் தான். தொடர்ந்து வாசிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Post a Comment

0 Comments