பல்லுயிர்களுக்கானது பூமி

சிங்கப்பூர் கவிமாலையில் வாசிக்கப்பட்ட என் கவிதைக்கு பரிசும் கிடைத்தது. "பல்லுயிர்களுக்கானது பூமி" என்ற என் புத்தகத்தின் தலைப்பிலேயே  இந்த கவிதையை எழுதினேன்.

 


ஒரு மலையடிவாரத்து நகரிலிருந்து 

பற்றி எரியும் பெருங்காட்டை 

நீங்கள் கண்டதுண்டா ?


நெருப்பால் நீளுமிந்த எரியும் இரவின்  

முந்தைய பகலில் 

என்னவெல்லாம் நிகழ்ந்ததென 

நீங்கள் அறிவீர்களா ?


அந்த காடு உயிர்ப்போடு இருந்தது. 

ஒரு தேன்கூடு நிறைவடையும் தருணத்தில் இருந்தது.

இருவாச்சிகள் இணை சேர்ந்தன.

ஒரு மந்தி கிளைதாவ கற்றுக்கொண்டது.

ஒரு கடமான் குட்டி ஈன்றது.

ஒரு காட்டுப்பூனை வேட்டை பழகியது.

செண்பக மொக்குகள் பூக்கத் தயாராக இருந்தன. 

ஒரு மனிதன் 

புகைபிடித்துக் கொண்டிருந்தான். 


- பா.சதீஸ் முத்து கோபால் 



Post a Comment

1 Comments