பாரதி தமிழ் இலக்கியப் பேரவை - கம்பம்

கம்பம் - பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, 2023-ஆம் ஆண்டு வெளியான "பல்லுயிர்களுக்கானது பூமி" நூலுக்கு பரிசு வழங்க இருக்கிறது. இந்த நூலை தேர்ந்தெடுத்த பாரதி தமிழ் இலக்கியப் பேரவை உறுப்பினர்களுக்கும், விருது குழுவினருக்கும், தலைவர் பாரதன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கம்பம் நகரில், குலாலர் மண்டபத்தில் நடக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்ளுங்கள். 


இந்த உலகில் வாழ்ந்து அற்றுப்போன சில உயிரினங்கள், தற்சமயம் அருகிவரும் உயிரினங்கள், சிங்கப்பூரின் பல்லுயிர்ச் சூழல், யானைகளின் இன்றைய நிலை, ஒலி மாசு, என் மனதுக்கு நெருக்கமான பழனிமலைத் தொடரில் வாழும் உயிரினங்கள் என பல்லுயிர்களைப் பேசுகிற நூல் "பல்லுயிர்களுக்கானது பூமி".


இந்த நூலை செப்பனிட்டு, அணிந்துரை எழுதிக் கொடுத்த திரு. தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கும், என் உள்ளுணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக அணிந்துரை தந்த திரு. கோவை சதாசிவம் அவர்களுக்கும், தகடூர் புத்தகப் பேரவை நடத்திய நிகழ்ச்சியில் இந்த நூலை அறிமுகம் செய்த ஓவியர் திரு. ட்ராட்ஸ்கி மருது அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

நூலை சிறப்பாக வடிவமைத்த திருமதி. ஆஷா அவர்களுக்கும், அட்டைப்படம் வடிவமைத்த திருமிகு. ஐஸ்வர்யா அவர்களுக்கும், இந்த நூல் பற்றி சிறப்பான அறிமுக உரை நிகழ்த்திய தம்பி செல்வ ஸ்ரீராம் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், இந்த நூலுக்காக படங்கள் கொடுத்து உதவிய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என்னுடைய எழுத்துக்கு உறுதுணையாக இருக்கும் என் மனைவி சந்திர பிரவீணாவிற்கும், என் மகன் அவிரனுக்கும் நன்றி. 

இந்த நூலை வெளியிட்ட காக்கைக்கூடு பதிப்பகத்திற்கு நன்றி.

Post a Comment

0 Comments