19.07.2025 அன்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், நான் இணைய வழியில் நேரலையில் கலந்து கொண்டேன். என் சார்பாக விருதினை என் அம்மா பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் நான் பேசிய நன்றி உரை :
அன்பிற்கும், பெரு மதிப்பிற்கும் உரிய, இராஜபாளையம் மணிமேகலை மன்ற உறுப்பினர்களுக்கும், விருதுக் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. சிறுவர் இலக்கியப் பிரிவில் "கொடைக்கானல் குல்லா" நூலுக்கு விருது வழங்கப்படுவதை பெருமையாகவும், மகிழ்வாகவும் உணர்கிறேன்.
தற்சமயம் சிங்கப்பூரில் இருப்பதால், இந்த நிகழ்வில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன். என் உடல்நிலையும் பயணம் செய்ய ஒத்துழைக்கவில்லை. என்னை மன்னிக்கவும்.
இன்றைய தினம் என்னோடு சேர்ந்து விருது பெரும் எழுத்தாளர்கள் திரு. கா.சி.தமிழ்க்குமரன், திரு. செஞ்சி தமிழினியன், திரு. கதிர்மதியன், திரு. எழிலரசு ஆகியோருக்கு என் வாழ்த்துகள்.
பழனிமலைத் தொடர் பற்றி பல்வேறு கட்டுரைகள் எழுதி இருந்தாலும், சிறார் கதை மூலமாக பழனிமலைத் தொடரின் பல்லுயிர்ச் சூழல் பற்றி குழந்தைகளுக்கு புரிதலை ஏற்படுத்துவது அவசியம் என எண்ணினேன். அதன் அடிப்படையில் கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தளங்களை எவ்வாறு அணுக வேண்டும், அங்குள்ள பல்லுயிர்ச் சூழல் என்ன, அவை சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை கதை மூலமாக சொல்ல முற்பட்டதன் விளைவே "கொடைக்கானல் குல்லா" நூல். இந்த நூல் குழந்தைகளிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருவது மிக்க மகிழ்ச்சி. இந்த விருதை மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்.
இந்த நூலை வெளியிட்ட சுட்டி யானை பதிப்பகத்திற்கும், வாசித்து செப்பனிட உதவிய சிறார் எழுத்தாளர் திரு.விழியன் அவர்களுக்கும், படங்களை வரைந்து கொடுத்த திரு.ஜீவா அவர்களுக்கும், நூலை வடிவமைத்த திரு. மதன் அவர்களுக்கும், பிழை திருத்தம் செய்த திரு. பலராமன் அவர்களுக்கும், சோலைக்குருவி அமைப்புக்கும், பலரிடமும் இந்த நூலை சென்று சேர்த்த தோழர் பூங்கொடி அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என்னுடைய எழுத்துக்கு உறுதுணையாக இருக்கும் என் மனைவி சந்திர பிரவீணாவிற்கும், என் மகன் அவிரனுக்கும் நன்றி.
இராஜபாளையம் மணிமேகலை மன்றதிற்கு மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றி.
0 Comments