உலகத்தலைவர்கள் ஒன்றுகூடும்
காலநிலை மாநாடு பற்றி
எதுவும் அறியாத
அந்த நீலநிறச் சட்டை அணிந்த பெரியவர்,
நெடுஞ்சாலையில் இருக்கும்
உணவகத்தின் வாசலின் நின்றபடி
நாள் முழுவதும்
வாகனங்களை வரிசைப்படுத்துகிறார்.
மகிழுந்துக்கும் கண்ணாடிக்கதவுக்கும்
இடைப்பட்ட இரண்டு நிமிடங்களில்
எல்லோரும் பேசிச்செல்கிறார்கள்
வெயில் அதிகமென்று.
அந்தப்பெரியவரின்
விசில் சத்தம்
யாருடைய காதுகளிலாவது
விழுகிறதா ?
- பா.சதீஸ் முத்து கோபால்
www.writersatheesh.com
0 Comments