கூடென்று எதுவுமில்லை.
நீண்ட வலசை செல்வதில்லை.
பருவ மழை பெய்யுமென்று
திட்டமிட்டே முட்டையிடும்.
மழையறிந்து, மண்ணறிந்து,
உண்ணும் உணவறிந்து,
எதிரிகளின் திறனுனர்ந்து,
வாழப்பழகிய ஆள்காட்டி,
மண் அள்ள வந்து நிற்கும்
லாரிகளின் சக்கரங்களை
எதிர்கொள்ளத் தெரியாமல்
திகைத்து நிற்கும்.
![]() |
Thanks Karthik Hari for the picture |
அருமை வரிகள்
ReplyDeleteநன்றி
DeleteExcellent words !!! Good work 👏🏻 Thanks for the feature 🙏🏻
ReplyDeleteநன்றி
Deleteகடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த கவிதை அருமை சார்
ReplyDeleteநன்றிங்க 🙏
DeleteAbsolutely amazing lines.. Been watching these beauties for ages 😍
ReplyDeleteAbsolutely amazing lines.. Been watching these beauties for ages 😍
ReplyDeleteThanks Raj 😊
DeleteSimply superb❤️
ReplyDeleteThank you :)
Delete