கூடென்று எதுவுமில்லை.

நீண்ட வலசை செல்வதில்லை.

பருவ மழை பெய்யுமென்று 

திட்டமிட்டே முட்டையிடும்.

மழையறிந்து, மண்ணறிந்து,

உண்ணும் உணவறிந்து,

எதிரிகளின் திறனுனர்ந்து,

வாழப்பழகிய ஆள்காட்டி,

மண் அள்ள வந்து நிற்கும்

லாரிகளின் சக்கரங்களை

எதிர்கொள்ளத் தெரியாமல்

திகைத்து நிற்கும்.

Thanks Karthik Hari for the picture