அடர்ந்த நாணல் புதரிலிருந்து 

வெளியே வரும் மஞ்சள் குருகு,

புற்களை இறுகப்பற்றி 

சலனமின்றிக் காத்திருந்து

கழுத்தின் நீளம் கூட்டி

இரையைத் தாக்கும்

கணநேரத்தை புரிந்து கொள்ள

நீங்கள் 

கண்சிமிட்டாதிருக்க வேண்டும்.