Dec 17, 2022

கல்குருவி [Indian Courser]

புற்கள் முளைத்த பாலைநிலத்தில் 

தத்தித்தாவும் வெட்டுக்கிளிகள்.

சரளைக் கற்கள் சிதறிக்கிடக்கும்

செம்மண் பரப்பில் வண்டினங்கள்.

புற்கள் நடுவே தலையை நீட்டி

வெட்டுக்கிளிகளைப் பிடித்துண்ணும்.

கற்களைப் புரட்டி பூச்சிகள் தேடி

சமநிலை செய்து உயிர் வாழும்.

அசையாதிருக்கும் நேரத்தில்

அதன் இருப்பை அறிய முடியாது.

உருமறை பெற்று பரிணமித்த

உன்னதப் பறவை கல்குருவி.

Photography by Karthik Hari




15 comments:

  1. Wow awesome 👏🏼 Beautifully described !!! Thanks for the picture credit ❤️🙌🏽🙏🏼

    ReplyDelete
  2. அர்விந்த்December 17, 2022 at 1:45 PM

    அருமை!

    ReplyDelete
  3. அருமை... வாழ்த்துகள்.

    ReplyDelete