கால் முளைத்த மீன் - திருமதி. பூங்கொடி பாலமுருகன்

குழந்தைகளுக்கு கதை எழுதுவது அவ்வளவு சுலபமானது அல்ல. அதில் நகைச்சுவையும் இருக்க வேண்டும். கருத்துகளும் இருக்க வேண்டும். வாசிக்கும் குழந்தைகளும் தொடர்ந்து அந்த நூலை வாசிக்கும் வகையில் எழுத்து நடையும் அமைய வேண்டும்.

திருமதி. பூங்கொடி பாலமுருகன் அவர்கள் எழுதிய கால் முளைத்த மீன் என்ற சிறார் கதைகள் அடங்கிய இந்த நூல் மிகச் சிறப்பாக வந்துள்ளது. காட்டுயிர்களுக்கு ஏன் உணவு கொடுக்கக் கூடாது என்பதை விளக்கும் வகையில் அமைந்த கதை அருமை. "கால் முளைத்த மீன்" என்ற கதை, குழந்தைகள் எப்படி தலை பிரட்டைகளை மீன் என்று தவறாக நினைத்து வளர்க்க தொடங்குகிறார்கள் என்பதோடு அது எவ்வாறு தவளையாக மாறுகிறது என்ற அறிவியல் செய்தியோடும் அமைந்துள்ளது சிறப்பு.

கைபேசியை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, கதை வழியாகவே குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது. பாறுக் கழுகுகள் அழிவின் விளிம்பில் இருப்பதை கதையின் வழியாக சொன்னதன் மூலம் குழந்தைகள் எளிதாக இந்த பறவையின் நிலையை புரிந்து கொள்வார்கள். இதுபோல காட்டுயிர்களுக்கு ஆதரவாக கதைகள் எழுத வேண்டியது இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானது. அதை எழுத்தாளர் பூங்கொடி பாலமுருகன் அவர்கள் சிறப்பாக செய்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.

Post a Comment

1 Comments