யாருக்கானது பூமி ? - விமர்சனம் - 5

நன்றி - ராமமூர்த்தி அவர்களே..!!

 இந்த வரிசையில் இன்றைக்கு நாம் பார்ப்பது பா.சதீஸ் முத்து கோபால் எழுதிய, "யாருக்கானது பூமி" இதன் சிறப்பு என்னவென்றால், தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் 2016 ல் நடந்த சென்னை பொங்கல் புத்தகத் திருவிழாவில் எஸ். ராமகிருஷ்ணன். ச.தமிழ்செல்வன், பா.திருமாவேலன் ஆகியோர் கொண்ட குழு மூலம் 2014-2015 ம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுச் சூழலிற்கான நூலாக தேர்ந்தெடுக்கப்பட்டது....

காடு மற்றும் காட்டுயிர்களின் சிக்கல்கள்.அவற்றின் பிரச்சனைகளைப் பற்றியே நூல் முழுவதும் அதிகமாக வெளிப்படுத்தியிருப்பதை படித்து முடிக்கும்போது உணரலாம்...
எமது எண்ண ஓட்டங்களுக்கு இணையான ஒத்த கருத்துடைய ஒரு எழுத்தாளரின் எழுத்து எமக்கு மிகப்பிடித்ததில் ஆச்சரியமில்லை. கானுயிர் எழுத்தாளர் என்பது அவரின் பணத்தேவைக்கான தொழில் இல்லை. சூழலியல் சார்ந்த கருத்து அனைவருக்கும் சென்று சேரவேண்டும், ஆவணமாக வேண்டும் என்கிற அக்கறையோடுதான் தான் தமது அனுபவங்களையும், எண்ணங்களையும் அச்சில் கொண்டுவந்திருக்கிறார்...
இதையெல்லாம் தாண்டி தீவிர செயல்பாட்டாளர்.கானுயிர் காக்குப் பணியில் வாழ்நாள்முழுவதும் தம்மை அர்ப்பணிக்கவேண்டும் என்கிற தீவிர எண்ணமுள்ளவர்.இந்த புத்தக அறிமுகம் மூலம் எமது நட்புகளுக்கு இந்த நூலாசிரியர் பழனியைச் சேர்ந்த Satheesh Muthu Gopal அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்.இவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே பாருங்கள் http://ivansatheesh.blogspot.in/p/blog-page_1.html?m=1
(இவரது வலைப்பூ முழுவதும் படியுங்கள்)
இந்தப் புத்தகம் எமக்கு கிடைத்தது பெரிய கதை.நான் தேடியலைவதைப் பார்த்து எமது முகவரிக்கு நேரடியாக அனுப்பி உதவியதற்கு இப்போதாவது சதீஸிற்கு நன்றிசொல்லிக் கொள்கிறேன். நான் சந்திக்க விரும்பும் நபர்களில் இவர் முக்கியமானவர்....
Post a Comment

0 Comments