Saiga - சீனாவின் இழப்பு [China ]

மத்திய ஆசிய பகுதிகளில் பரந்த புல்வெளிகளில் [open dry steppe grasslands] வாழும் இரலை  [Antelope ] விலங்கு Saiga. பெரும்பாலும் இரண்டு குட்டிகளை ஈனும். இதன் நீண்ட மூக்கு பல மைல் தூரத்தில் இருக்கும் புல்வெளிப்பகுதிகளையும் அறிந்து அதற்கேற்ப இடம்பெயர உதவுகிறது. ஆண் மான்களுக்கு மட்டுமே கொம்பு உண்டு. இதன் கொம்புகள் மருத்துவ குணமுடையது எனக் கூறி ஆண் இரலைகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டதன் விளைவாக சீனாவில் இந்த விலங்கு முற்றிலும் அழிந்துவிட்டது. 


Taxidermy Specimen of Saiga at Oslo Natural History Museum


கஸக்கஸ்தான் நாட்டில் இவை காணப்பட்டாலும் அங்கும் அழிவையே சந்திக்கிறன்றன. வித்தியாசமான முக அமைப்பு கொண்ட இந்த விலங்கு அதிக அளவில் நோய் தாக்குதலுக்கும் உள்ளாகின்றன. கஸக்கஸ்தானில் மட்டும் 2015-ஆம் ஆண்டு சுமார் இரண்டு லட்சம் Saiga இரலைகள் உயிரிழந்தன. 

பருவநிலை பிறழ்வு (Climate Change) காரணமாக இதன் வாழிடத்தில் ஏற்படும் மாற்றங்கள் இவற்றின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. நெடுஞ்சாலைகள் மற்றும் புதிய நீர்வழித்தடங்கள் ஆகியவற்றால் இதன் வலசை (Migrate) பாதைகள் மறிக்கப்பட்டு மிக அதிக அளவில் இதன் குட்டிகள் அழிந்துபோகின்றன. 

சீனாவில் மருத்துவம் என்ற பெயரில் காட்டுயிர்கள் பலவும்அழிவை சந்திக்கின்றன. இதற்கு புலிகள் முதல் அழுங்கு (Pangolin) வரை பல காட்டுயிர்களை உதாரணமாக சொல்லலாம். சீனாவின் இந்த போக்கினால் சீனாவில் மட்டுமல்லாது  மற்ற நாடுகளிலும் காட்டுயிர்கள் பலவும் அழிவை சந்திக்கின்றன.

Saiga : IUCN Status: Critically Endangered


Post a Comment

1 Comments

  1. உங்களின் வலியும், வேதனையும்
    நன்றாக புரிகின்றது தோழரே,

    இயற்கையின் காலச் சூழலுக்கு
    அனைத்து உயிர்களுமே
    மாற்றப்பட்டு வருகிறது.

    அப்படியாக உலகில் பல
    உயிரினங்கள் அழிக்கப்பட்டு
    வருகின்றன.

    உதாரணத்திற்கு பல
    உயிரினங்கள் உண்டு.

    இறைவனின் கோபப்பார்வை
    தற்போது அதிகமாகவே
    பூமியின் உயிர்கள் மீது
    செலுத்தப்பட்டு வருகின்றது.

    இறைவன் படை(கொடு)த்ததை
    மனிதரால் படை(கொடு)க்க இயலாது.

    இறைவன் கொடுத்ததை,
    தடுத்ததை,அழிப்பதை
    யாராலும் எதுவும் செய்ய இயலாது.

    சில காலங்கள் வேண்டுமால்
    தள்ளிப் போடலாம். அம்புட்டுத்தேன்.

    - ஆர்க்காடு ராஜா முகம்மது. பெங்களூரு.

    ReplyDelete